ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம், வெள்ளி, வைரம் நகைகளையும் 1562 ஏக்கர் நிலங்களில் பத்திரங்களையும் பிப்ரவரி 14 மற்றும் 15ஆம் தேதி தமிழாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிபதி எச் வி மோகன் கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் படிக்க - தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! சூப்பரான வாய்ப்பை மிஸ் செய்ய வேண்டாம்
பிப்ரவரி 14 மற்றும் 15ஆம் தேதி தமிழ்நாடு சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த பொருட்களை எடுத்து செல்வதற்கு ஆறு பெட்டிகளுடன் வர வேண்டும் என்றும், அதற்கான உரிய வாகன வசதி பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்து நீதிமன்றத்திற்கு வந்து அனைத்து பொருட்களையும் பெற்று எடுத்து செல்ல உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதுகாப்புக்கு காவல்துறை உடன் வரவேண்டும் என்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த பொருட்களை எடுத்துச் செல்லும் போது அவற்றை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் வரவேண்டும் என்றும் ஒட்டுமொத்த நடைமுறையையும் படம்பிடிக்க ஒளிப்பதிவாளர்கள் இருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு இன்று காலை தமிழ்நாடு உள்துறை இணை செயலாளர் ஹனிமேரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ். பி. விமலா, கூடுதல் எஸ். பி. புகழ்வேந்தன், இரு உதவி போலீஸ் கமிஷனர்கள், இரு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், முப்பது போலீசார் மற்றும் ஆபரண மதிப்பிட்டாளர்கள், வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர் வந்துள்ளனர்.
இன்று காலை சரியாக 11.10 மணிக்கு நீதிபதி மோகன் இருக்கையில் அமர்ந்தார். அப்போது ஜெ. தீபா சார்பில் ஆஜரான வக்கீல், ஆபரணங்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ஆகவே வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்றார். ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதி ஏற்காமல், உச்சநீதிமன்றம் தடைவிதித்தால் பார்க்கலாம், அதுவரை ஆபரணங்கள் ஒப்படைக்கும் பணி தொடரட்டும் என்று உத்தரவிட்டார். அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆபரணங்கள் சரி பார்த்து வழங்கும் பணி தொடங்கியது. ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 1000 ஏக்கர் நிலம் இன்று தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க - தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ் -பயிர் காப்பீடு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ