Lord Shiva Favorite Zodiac Signs List: சிவபெருமானுக்கு உகந்த ராசிகள் மற்றும் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் என சில ராசிகள் இருக்கிறது. அந்த வகையில சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் எது? சிவபெருமானுடைய அவதாரங்கள் என்ன? சிவபெருமானுக்கு அம்சமாக இருக்கக்கூடிய ராசிகள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.
சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் எனக்கூற காரணம் என்ன?
அது என்ன சிவபெருமானுக்கு பிடித்த ராசி.. மற்ற ராசிகள் எல்லாம் சிவபெருமானுக்கு பிடிக்காதா? எனக் கேள்வி வரலாம். சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் எனக்கூற காரணமா என்னவென்றால், அந்த குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் அருள் அதிகமாக இருக்கும். மேலும் இந்த ராசிக்காரர்கள் சிவபெருமான் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிவ பெருமானுக்கு தமிழருக்கும் உள்ள தொடர்பு என்ன?
உலகம் முழுதும் சிவ பெருமானுக்கு பல பெயர்கள் உண்டு. எனினும், தமிழகத்துக்கும் சிவனுக்கும் ஒரு தனி பிணைப்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. சிவனை பாடி, அவருக்காக பல பாசுரங்களை எழுதிய நாயன்மார்கள் அனைவரும் தமிழகத்தில் அவதரித்தவர்களே. அதுவும் "தென்னாடுடைய சிவனே போற்றி" என தமிழ்நாட்டை நம் முன்னோர்கள் சிவனுக்கே அர்ப்பணித்தார்கள். ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜனாக சிதம்பரத்தில் காட்சியளிக்கும் சிவன், அனைத்தையும் ஆட்கொள்ளும் ஜோதி தானே என்பதற்கு திருவண்ணாமலையில் சாட்சியாய் இருக்கிறார்.
சிவ பெருமானுக்கு பிடித்தமான ராசிகள் எவை?
சிவபெருமானுக்கு (Lord Shiva) அனைவரும் சமமே. அவர் அனைத்து உயிர்களுக்கும் சமமாக அருள் அளிக்கிறார். எனினும் ஜோதிட கணக்கீடுகளின் படி, சில ராசிக்காரர்கள் சிவன் அருள் பெறுவதில் அதிர்ஷ்டசாலிகளாக உள்ளன. சில ராசிகள் சிவனுக்கு பிடித்தமான ராசிகளாக உள்ளன. இந்த ராசிக்காரர்கள் நினைத்த மாத்திரத்தில் அவர்களது வேண்டுதல்களை சிவன் நிறைவேற்றுகிறார். இன்னும் சில நாட்களில் மகா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ள நிலையில், சிவ பெருமானுக்கு பிடித்தமான அந்த ராசிகளை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்கள்
சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளில் முதலாவதாக இருப்பது மேஷம் ராசி. மேஷ ராசிக்காரர்களை சிவபெருமானுக்கு ரொம்ப பிடிக்கும். அவரின் அருளை அதிகமாக பெற்றவர்கள் எனக் கூறுவது உண்டு. மேஷ ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும். மேலும் மேஷ ராசிக்காரர்கள் ஒரு வேலையை செய்ய முடியாவிட்டாலும் மற்றவர்கள் அந்த வேலையால் பயன்பெற வேண்டும் என நினைப்பாங்கள் மேஷ ராசியில பிறந்தவர்கள் எப்போதுமே சிவபெருமானுடைய அருளும் ஆசீர்வாதம் பெற்றவர்களாக இருப்பார்கள். சிவபெருமான் மற்றும் முருகனின் மீது அதிக பக்தி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். திங்கட்கிழமை அன்று உங்களால் முடிந்த அன்னதானத்தை சிவபெருமானுக்கு மேஷ ராசிக்காரர்கள் செய்வது மிகவும் நல்லது.
கடக ராசிக்காரர்கள்
சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளில் அடுத்தாக இருப்பது கடகம் ராசி. கடக ராசிக்காரர்கள் பார்வதி தேவியின் அம்சம் என சொல்லுவார்கள். சூரியன் சிவனை குறிக்கிறது. சந்திரன் பார்வதி தேவியை குறிக்கிறது. பார்வதி தேவியின் மாதம் பொருந்திய கடக ராசிக்காரர்களை சிவபெருமானுக்கு பிடித்த ராசி எனக் கூறுவார்கள். கடக ராசிக்காரர்கள் தாயின் மீது அதிகமாக பற்றுக் கொண்டிருப்பார்கள். அதேபோல மற்றவர்கள் மீது இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கன்னி ராசிக்காரர்கள்
சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளில் கன்னி ராசியும் அடங்கும். கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்பிடுவாங்களாம். மற்றவர்களுக்கு உதவி எனக் கேட்டா, அவர்களுக்கு நிச்சயமாக செய்வார்கள். இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசியும் சிவனுக்கு உகந்த ராசியாக இருக்கிறது. மகா சிவராத்திரி அன்று அகத்திக்கீரை வாழைப்பழம் போன்ற பொருட்களை வாங்கி பசுவுக்கு கொடுப்பது கன்னி ராசிக்காரர்களுக்கு ரொம்பவே நல்லது.
கும்பம் ராசிக்காரர்கள்
சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளில் கும்பம் ராசி ஒன்று. கும்பம் ராசிக்காரர்கள் ரொம்ப நல்லவர்கள் என கூறுவது உண்டு. இவர்கள் சிவபெருமானுக்கு பிடித்த ராசியாக உள்ளனர் என சாஸ்திரத்தில் சொல்லப்படு உண்டு. இவர்களை சுற்றி இருக்கிறவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள். திங்கட்கிழமை நாட்களில் மற்றவங்களுக்கு முடிந்த அளவுக்கு தானத்தை கொடுப்பது ரொம்ப நல்ல பலனை கொடுக்கும் மற்றும் செல்வா செழிப்போடும் இருப்பார்கள்.
மேலும் படிக்க - சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் இவைதான்: சிவன் அருளால் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்
மேலும் படிக்க - மகா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை செய்வது எப்படி?
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ