ரெடியாகும் ஆந்திர தங்க சுரங்கம்... இனி தங்க விலையில் மாற்றம் இருக்கும்? வேறு நன்மைகள் என்னென்ன?

Jonnagiri Gold Mine: இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் மற்றும் ஆலை விரைவில் முழு செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்கள், உருவாகும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முழு விவரங்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 17, 2025, 04:47 PM IST
  • முதற்கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டது.
  • இன்னும் சுற்றுச்சுழல் அனுமதி நிலுவையில் உள்ளது.
  • சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததும் உற்பத்தி பணிகள் தொடங்கும்.
ரெடியாகும் ஆந்திர தங்க சுரங்கம்... இனி தங்க விலையில் மாற்றம் இருக்கும்? வேறு நன்மைகள் என்னென்ன? title=

Andhra Pradesh Jonnagiri Gold Mine: இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் மற்றும் அதனை செயலாக்க ஆலை ஆகியவை ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜோன்னகிரி பகுதியில் அமைய இருக்கிறது. The Geomysore and Deccan Goldmines Limited என்ற தனியார் நிறுவனம் இதன் முதற்கட்ட பணிகளில் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது வணிக செயல்பாட்டுக்குள் இறங்க முடிவு எடுத்துள்ளது. மேலும், தற்போது ஆந்திர மாநில அரசும் பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டம் நாளை (பிப். 17) நடைபெறுகிறது.

Andhra Pradesh Jonnagiri Gold Mine: 1994ஆம் ஆண்டு கண்டறிந்தனர்

பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பின்னர், இந்த சுரங்கம் மற்றும் ஆலைக்கு சுற்றுச்சுழல் அனுமதி கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன்பிறகு 3 மாதங்களில் இந்த ஆலையில் தங்கம் உற்பத்தி ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது. இந்த பகுதியில் இருந்து குறைந்தபட்சம் ஓராண்டுக்கு 750 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்வதே இந்த நிறுவனத்தின் இலக்காக உள்ளது.

கர்னூல் மாவட்ட பகுதியில் தங்கம் இருப்பதை கடந்த 1994ஆம் தேதி ஆண்டு இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்தது. தொடர்ந்து தங்கத்தை தொண்டி எடுப்பதற்கும்,  முழுமையான தங்கமாக மாற்றும் செயலாக்கம் செய்வதற்கும் தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும், இங்கு தங்கம் இருப்பது குறித்து் ஆரம்பகட்ட ஆய்வுகளே வெளியாகி இருந்த சூழலில், இங்கு பெரியளவில் முதலீடு செய்ய எந்தவொரு நிறுவனமும் முன்வரவில்லை.

Andhra Pradesh Jonnagiri Gold Mine: 2013இல் உள்ளே வந்த Geomysore Services Limited

இதையடுத்து, சுரங்க குத்தகை செயல்முறை சட்டதிட்டங்களில் சில தளர்வுகளை 2005ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இதனை அடுத்து உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டு முதலீடுகளையும் அரசு எதிர்பார்த்தது. இதை அடுத்தும் சில ஆண்டுகளுக்கு பிறகே பெங்களூருவில் அமைந்திருக்கும் Geomysore Services Limited நிறுவனம் இங்கு காலடி எடுத்து வைத்தது. புவி இயற்பியாளர் டாக்டர் மோடலி ஹனுமா பிரசாத் தலைமையிலான இந்த நிறுவனம் 2013ஆம் ஆண்டில் இங்கு தங்கம் எடுப்பது குறித்த ஆரம்ப கட்ட பணிகளை செய்வதற்கான அனுமதியை பெற்றது. இதையடுத்து, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகே அதாவது 2023ஆம் ஆண்டில்தான் அதன் முதல் திட்டத்திற்கு அனுமதி கிடைத்தது.

Andhra Pradesh Jonnagiri Gold Mine: 30 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள்

இதற்கிடையில், Geomysore Serivces Limited நிறுவனத்தின் 40% பங்குகளை Deccan Gold Mines Limited கைப்பற்றியது. இதையடுத்து, தங்கத்தை தோண்டி எடுத்து அதனை செயல்முறைப்படுத்தும் பணிகள் வேகமெடுத்தன. அங்கு துக்காலி என்ற பகுதியில் சுமார் 1,500 ஏக்கரை இந்த நிறுவனம் குத்தகை எடுத்துள்ளது மட்டுமின்றி 750 ஏக்கரை விலைக்கும் வாங்கியிருக்கிறது. இதையடுத்து, 2021ஆம் ஆண்டில் அதன் பமிகளை தொடங்கியது. முதலில் அங்கு சிறு செயலாக்க யூனிட்டை தொடங்கி, சிறிய அளவில் தங்கங்களை தோண்டி எடுத்து, அதனை செயல்படுத்தும் பணிகளை மேற்கொண்டது. 

இதற்காக 30 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டதாகவும், 2 வருட கால பணியில் கிடைத்தவற்றை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் நம்பிக்கையளிக்கும் முடிவுகள் வந்ததை அடுத்து இதில் முழுமையாக இறங்க நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக Geomysore and Deccan Goldmines Limited நிர்வாக இயக்குநர் மோடலி ஹனுமா பிரசாத் தெரிவிக்கிறார்.

Andhra Pradesh Jonnagiri Gold Mine: அடுத்த 25 ஆண்டுகளுக்கு...

ஜோன்னாகிரி பகுதியில் இந்நிறுவனம் சுமார் ரூ.320 கோடியை முதலீடு செய்து பெரிய அளவிலான செயலாக்க இயரந்திரங்களை நிறுவியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்நிறுவனம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இங்கு தங்கத்தை தோண்டி எடுத்து, அதனை முழுமையாக செயலாக்கும் பணிகளில் ஈடுபடும்.

Andhra Pradesh Jonnagiri Gold Mine: நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு

இங்கு 20 டன் பாறைகளில் இருந்து 40-50 கிராம் தங்கத்தை இந்றுவனம் எடுத்திருக்கிறது. மேலும், முழுமையான செயலாக்க பணிகள் தொடங்கியதும் ஓராண்டுக்கு 750 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த தனியார் தங்க சுரங்கம் மற்றும் ஆலையால் சுார் 300 பேருக்கு நேரடியாகவும், 1000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாகும். உள்நாட்டிலேயே தங்கம் உற்பத்தி செய்வதன் மூலம், இங்கு தங்கத்தின் விலை குறையவும் வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | Delhi Earthquake: டெல்லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மேலும் படிக்க | கேரளா லாட்டரி வின் வின் W-809 ரிசல்ட் வெளியானது! முதல் பரிசு பெற்ற எண் இதுதான்!

மேலும் படிக்க | சுவாமிமலைக்கு திடீர் விசிட் அடித்த பவன் கல்யாண்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News