8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. 8வது ஊதியக்குழுவில் ஊதிய உயர்வைத் தவிர மற்றொரு பெரிய பரிசும் காத்திருக்கிறது.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் அதிக அளவு அதிகரிப்பு இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதனுடன் ஊழியர்கள் பணிக்காலத்தில் பெறக்கூடிய பதவி உயர்வின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும்.
8வது ஊதியக்குழு மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு, பதவி உயர்வுக்கான கால இடைவெளி ஆகியவற்றில் சாதமகான மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
8வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் அதிக அளவு அதிகரிப்பு இருக்கும் என்பது பலர் அறிந்ததே. எனினும், 8வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ், ஊழியர்கள் தங்கள் சேவை ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான உறுதியான பதவி உயர்வுகளையும் உறுதியாக பெறுவார்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8வது ஊதியக் குழுவின் குறிப்பு விதிமுறைகளுக்கான பரிந்துரைகளில், தேசிய கூட்டு ஆலோசனை அமைப்பு கவுன்சிலின் (NC-JCM) ஊழியர்கள் தரப்பு சமீபத்தில் 8வது ஊதியக்குழு, பணிக்காலத்தில் குறைந்தபட்சம் ஐந்து பதவி உயர்வுகளை பரிந்துரைப்பதை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
"MACP திட்டத்தில் இருக்கும் முரண்பாடுகளைக் கருத்தில் கொண்டு, பதவி உயர்வு படிநிலையில் மிகவும் வரையறுக்கப்பட்ட படிநிலை அமைப்பு மற்றும் MACP உடன் பணிக்காலத்தில் குறைந்தபட்சம் 5 பதவி உயர்வுகளை பரிந்துரைக்க வேண்டும்" ஊழியர்கள் தரப்பு NC-JCM கூறியுள்ளது.
MACP (மாற்றியமைக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட தொழில் முன்னேற்றம்) அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் 30 ஆண்டு சேவைக் காலத்தில் குறைந்தது மூன்று பதவி உயர்வுகள் கிடைப்பதை உறுதி செய்கிறது.
தற்போது, MACP இன் கீழ் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் 10, 20 மற்றும் 30 ஆண்டுகள் சேவையில் மூன்று பதவி உயர்வுகள் உறுதி செய்யப்படுகின்றன. 7வது ஊதியக் குழுவிலும் MACP -இல் மேற்கொள்ளப்படும் பதவி உயர்வுக்கான எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான கோரிக்கை இருந்தது. இருப்பினும், அப்போது இருந்த விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இது குறித்து அப்போது அளிக்கப்பட்ட விளக்கத்தில், ஊதியம் தொடர்பான அதிருப்திகள், ஊதிய கட்டமைப்பில் செய்யப்படும் திருத்தங்கள் மூலம் ஈடுசெய்யப்படுகின்றன என்றும், ஆகையால், பதவி உயர்வின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எந்த சிறப்பு காரணமும் இல்லை என்றும் கூறப்பட்டது.
தற்போது, ஒரு ஊழியர் MACP மூலம் பதவி உயர்வுகளில் சம்பள மேட்ரிக்ஸில் உடனடி அடுத்த நிலை படிநிலைக்கு மாறுகிறார். ஊதிய நிர்ணயம் ஊதிய மேட்ரிக்ஸில் வழக்கமான பதவி உயர்வுக்கான அதே கொள்கையைப் பின்பற்றுகிறது.
எனினும், 7வது ஊதியக்குழு, MACP க்கான செயல்திறன் மதிப்பீட்டிற்கான அளவுகோலையும் வழக்கமான பதவி உயர்வுகளுக்கான அளவுகோலையும் மாற்ற பரிந்துரைத்தது. "செயல்திறன் அளவை மேம்படுத்தும் ஆர்வத்தில் இந்த அளவுகோலை 'நல்லது' என்பதிலிருந்து 'மிகவும் நல்லது' என உயர்த்த ஆணையம் பரிந்துரைக்கிறது." என அப்போது தெரிவிக்கப்பட்டது.
ஒரு பணியாளரின் பணிக்காலத்தில் ஊதிய முன்னேற்றத்திற்கான சாத்தியமான பாதையை பட்டியலிட பே மேட்ரிக்ஸ் உதவும் என்று CPC குறிப்பிட்டது. உதாரணமாக, தனது பணிநிலையில் எந்த பதவி உயர்வு வாய்ப்புகளும் இல்லாத ஒரு ஊழியர், 30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தொழில் காலத்தில், உறுதியான நிதி முன்னேற்றம் அல்லது MACP மூலம் மட்டுமே குறைந்தது மூன்று நிலைகளைக் கடக்க முடியும் என்பதை தெளிவாகக் கூறலாம் என்று ஊதியக்குழு கூறியது.
8வது ஊதியக்குழுவில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், புதிய குறைந்தபட்ச சம்பளம் = ரூ.34,560 ஆக இருக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.08 ஆக இருந்தால், குறைந்தபட்ச சம்பளம் = ரூ.37,440 ஆக உயரும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆனால், குறைந்தபட்ச சம்பளம் = ரூ.51,480 ஆக அதிகரிக்கும்.
8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல ஓய்வூதிய உயர்வு இருக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆனால், குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போதுள்ள ரூ.9,000 லிருந்து ரூ.25,740 ஆக ஏற்றம் காணும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு அல்லது பதவி உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.