Women Should Never Trust These Type Of Men : இந்த காலத்தில் மனிதர்களை மனிதர்களை நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் பெண்கள் தங்கள் யாரை நம்புகிறோம் என்பது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. காரணம் எத்தனையோ ஆண்டுகள் உடன் பழகியவர்கள் கூட கடைசியில் அவர்களை முதுகில் குத்திவிட்டு சென்று விடுகின்றனர். அந்த வகையில் பெண்கள் சில வகையான ஆண்களை கண்டிப்பாக நம்பவே கூடாது. அவர்கள் யார் யார் தெரியுமா?
1. மென்மையாக பேசுபவன்:
மென்மையாக பேசுபவர்களை யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் ஆண்களில் சிலர் தனக்கு ஆதாயம் வேண்டும் என்பதற்காக பெண்களிடம் பொய்யாக மென்மையாக பேசுவர். பெண்களிடம் இதை கூறினால் அவர்களுக்கு நன்றி நல்ல உணர்ச்சிகள் ஏற்படும் என்பது அவர்களுக்கு தெரியும். இது போன்ற ஆட்களை நம்பவே கூடாது. இவர்களை போன்றவர்கள் பலவிதமான வாக்குறுதிகளை கொடுப்பர். ஆனால் அதனை எப்போதும் கடைபிடிக்க மாட்டார்கள். பிறரை பேச்சால் மயக்கும் இந்தத் திறனை வைத்துக்கொண்டு தங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் பெற்றுக்கொள்வர். அவர்களுக்கு தேவையானது கிடைத்தவுடன் பெண்களை அப்படியே கழட்டி விட்டுவிடுவர்.
2. உறவுக்கு செல்ல பயப்படுபவன்:
இவன் பேசுவது எல்லாம் காதலால் பேசுவது போலவே இருக்கும். ஆனால் அந்த உறவு ஒரு பெரிய கமிட்மெண்டாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போது, அப்படியே கழட்டி விட்டுவிடுவான். இந்த பெண்ணுக்காக எத்தனை தூரம் வேண்டுமானாலும் சென்று என்ன விஷயங்கள் வேண்டுமானாலும் செய்வான். ஆனால் அது என்னவென்று கேட்டால் காதல் அல்ல என்ற பதில்தான் திரும்ப வரும். ஒரு உறவு கொஞ்சம் சீரியசாக போகும்போது இதற்கு காணாமல் போய்விடுவார்கள். ஒரு விஷயம் கிடைக்கும் வரை அதனை பின் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள் ஆனால் அது கைக்கு கிடைத்த பிறகு அதன் மீது அவ்வளவாக ஈடுபாடு காட்ட மாட்டார்கள்.
3. பொய் கூறுபவன்:
சின்ன விஷயத்திலிருந்து பெரிய விஷயம் வரை அனைத்திற்கும் போய் கூறுபவனை நம்பவே கூடாது. இதனால் அவன் மீதுள்ள நம்பிக்கையும் கேட்டுவிடும். இப்படி பொய் கூறுபவர்கள் பெரும்பாலான சமயங்களில் பல வித உறவுகளின் இருந்து அதனை அந்த உறவில் இருக்கும் பெண்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வர். இது குறித்து அவர்களிடம் கேள்வி கேட்டால் அந்த தப்பு உங்களுடையது போல உங்களுக்கு எதிராகவே உங்களை திருப்பி விட்டுவிடுவர். இதனால் உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.
4. தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பவன்:
இப்படி தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கும் மனிதர்கள் தனக்கு மட்டுமல்லாமல் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் பேராபத்து விளைவிப்பவர்கள். அவனது உங்களை யாராவது பாராட்டி விட்டால் அவனுக்கு அப்படியே வயிறு பற்றிக்கொள்ளும். இது போன்றவர்கள் உங்களுக்கு பாய் பிரண்டாக அமைந்து விட்டால் நீங்கள் யாரிடம் பேச வேண்டும், யாரிடம் பேசக்கூடாது, நீங்கள் எந்த ஆடை அணிய வேண்டும் என்பது கொண்டு ஆணை விதிப்பர்.
உங்களுக்கு பிடித்த விஷயங்களை நீங்கள் செய்து கொண்டால் கூட அதைப்பற்றி பொறாமை கொள்ளும் என்ன உடையவர்களாக இருப்பர். உங்களை உணர்ச்சி ரீதியாக ஏமாற்றி எப்போதும் அவர்களை சார்ந்து இருக்க வேண்டும் சூழலில் உங்களை வைத்துக் கொள்வர்.
5. நல்லவன் போல வேஷம் போடுபவன்:
பார்ப்பதற்கும் பழகுவதற்கும் நல்ல ஜென்டில்மேன் போல இருப்பான். நல்லவன் போல நடிப்பான், ஆனால் நமது எண்ணங்களும் மனதும் நல்லதாக இருக்காது. இதற்கு முன் அவரது தோற்றுப்போன காதலர்களுக்கு காரணம் தனது முன்னாள் காதலிகள் தான் கூறுவான். ஆனால் உண்மையில் அவன்தான் அதற்கு காரணமாக இருந்திருப்பான். தான் நல்லவனாக இருப்பதால் மட்டும் தன்னிடம் அனைவரும் அன்புடன் பழக வேண்டும் என நினைப்பான். ஆனால் உண்மையில், அவனுக்கு மனமுதிர்ச்சி அல்லது உணர்ச்சி ரீதியான அறிவு என்பதே இருக்காது.
மேலும் படிக்க | காதல் உறவில் அதிகம் நேசிப்பது ஆண்களா? பெண்களா? பதில் இதோ!
மேலும் படிக்க | xகாதல் முறிவினால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா-பெண்களா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ