UPI: தவறான எண்ணுக்கு UPI மூலம் பணம் செலுத்திவிட்டீர்களா? உடனே இதைச் செய்யுங்க!

டிஜிட்டல் பரிவர்த்தனை உலகில் அதிகமானோர் UPI பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்கின்றனர். இந்த சேவை வாடிக்கையாளர்களுக்கு முதல் சிறு தொழில்முனைவோர்களுக்குப் பயனளிக்கிறது. ஆனால், பலர் இந்த சேவையைத் தவறான முறையில் பயன்படுத்துவதால், பண இழப்பிற்கு ஆளாகின்றனர். நீங்கள் தவறான எண்ணிற்குப் பணம் அனுப்பினால், என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

டிஜிட்டல் உலகில் வாழும் மக்கள் தற்போது அதிகமானோர் ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். கூகிள் பே, பேடிஎம், மற்றும் போன் பே போன்ற சேவைகள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், ஒருவகையில் ஆபத்தானதாகவும் இருக்க முடியும். யூபிஐ மூலம் தவறான எண்ணிற்கு பணம் அனுப்பிவிட்டால், என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் யோசிக்கும் நபர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கான வழிகாட்டுதலை இங்கே பார்ப்போம்.

1 /8

முன்னோர்களில், பணம் தவிர வேறு எதுவும் பாக்கெட்டில் இல்லை, ஆனால் இப்போதெல்லாம் தொலைப்பேசி மூலம் பணப் பரிவர்த்தனை(Cash transaction) செய்து மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கடக்கின்றனர். UPI சேவையில் மக்கள் அதிகமாக மூழ்கிவிட்டனர்.

2 /8

நீங்கள் அதிகமாக UPI பயன்படுத்தினால், தவறான எண்ணிற்குப் பணம் செலுத்தி விட்டீர்களா?(Did you pay to the wrong number?) அதன்பின் பணம் எவ்வாறு திரும்பப் பெறுவது என்று நீங்கள் குழப்பத்தில் இருப்பீர்கள்.  

3 /8

பலரும் தவறான எண்ணிற்குப் பணம் செலுத்தி, மீண்டும் பணம் பெற முடியாமல் பணத்தை இழந்துவிட்டதாக நினைப்பார்கள்(He who thinks he has lost money).  

4 /8

இருப்பினும், தவறான எண்ணிற்கு UPI மூலம் பணம் செலுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.9What to do if payment is made through UPI to wrong number) 1. முதலில், UPI ஐடி அல்லது தொலைப்பேசி எண்ணைச் சரிபார்க்கவும். 2. அந்த பெறுநரின் விவரங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 3. உங்கள் அறிமுகமான தொலைப்பேசி எண்ணுக்குப் பணம் செலுத்தினால், அவர்களைத் தொடர்பு கொண்டு பணத்தைத் திரும்பப் பெறுங்கள். 4. நீங்கள் தெரியாத எண்ணுக்குப் பணம் செலுத்தினால், அவர்களுடன் தொடர்பு கொண்டு பணத்தைத் திரும்பப் பெற முயலவும்.

5 /8

கூகிள் பே, போன் பே, மற்றும் பேடிஎம் பயனாளர்களுக்கான வழிமுறைகள்(Instructions for users): கூகிள் பே பயன்படுத்தினால், உங்கள் சுயவிவரத்தில் "உதவி" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.  

6 /8

"Are you having issues?" என்பதைத் தேர்ந்தெடுத்து, "கட்டண சிக்கல்கள்"("Payment Issues") விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். போன் பே மற்றும் பேடிஎம்-லும் இதேபோன்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

7 /8

வங்கிக் கட்டளைகள்(Bank Orders): உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் பராமரிப்பு சேவையைத் தொடர்பு கொண்டு, உங்கள் சிக்கலைத் தெளிவாக எடுத்துரைக்கவும். அவர்கள் உரியத் தீர்வுகளை வழங்குவார்கள்.

8 /8

இருப்பினும், உங்கள் வங்கிக்கு நேரடியாகச் சென்று, RBI குறைத்தீர்பபாளரிடம் ஆன்லைனில் புகார்(Complain online) தெரிவிக்கலாம். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.