Ketti Melam Serial Today February 17th Day Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம்.
நேற்றைய எபிசோட்: இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சிவராமன் குடும்பத்துடன் மகேஷ் கல்யாணத்திற்கு துணி எடுக்க வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இன்றைய எபிசோட் அப்டேட்: அதாவது துணிகள் விலை அதிகமாக இருப்பதை பார்த்து லட்சுமி தயக்கம் கொள்ள இதை கவனித்த மகேஷ் சிவராமனை தனியாக அழைத்துச் சென்று அங்கிள் நீங்க துளசி கல்யாணத்துக்கு நிறைய செலவு பண்ணி இருக்கீங்க அதனால இப்ப நீங்க எதுவும் செலவு செய்ய வேண்டாம் என்று சொல்கிறான். மேலும் அஞ்சலி ஆசைப்பட்ட அனைத்து புடவைகளையும் எடுத்துக் கொடுக்க அதை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.
அடுத்ததாக கடையில் ஒரு பெண் தியா என்று கூப்பிட துளசிக்கு தியாவின் ஞாபகம் வந்து தியாவிற்கு துணி எடுக்க செல்கிறாள். தியா என்ற பெயரை கேட்டதும் துளசியின் முகம் மாறியதை கவனித்த மகேஷ் அஞ்சலியை தனியாக அழைத்து யார் தியா என்று விசாரிக்க அவள் நடந்த விஷயங்களை சொல்கிறாள்.
மறுபக்கம் வெற்றி தன்னுடைய நண்பர்களுடன் இதே கடைக்கு வர அப்போது அவனது நண்பர்கள் வெற்றியை கலாய்க்க இப்ப மட்டும் அந்த பொண்ணு எதிரில் வந்த காதலை சொல்லிடுவேன் என்று பதில் கொடுக்க லிப்ட் ஓபன் ஆக துளசி நிற்பதை பார்த்து தடுமாறுகிறான். துளசி வெற்றியை பார்த்து லிப்டுக்குள் செல்ல தயக்கம் கொள்ள வெற்றி வாங்க ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்லி உள்ளே அழைக்கிறான்.
வெற்றியும் எப்படியாவது காதலை சொல்லிவிட வேண்டும் என முயற்சி செய்ய முடியாமல் போகிறது. கமலி என்று பெயர் சொல்லிக் கூப்பிட அவனை முறைத்தபடி துளசி வெளியே சென்று விடுகிறாள்.
அடுத்ததாக வெற்றி லட்சுமியை சந்திக்கிறான். லட்சுமி சிவராமனிடம் இது என்னுடைய பிரண்ட் வெற்றி என அறிமுகம் செய்து வைக்கிறாள். என் பொண்ணுக்கு கல்யாணம் நீ கண்டிப்பா வரணும் என்று சொல்ல இது நம்ம வீட்டு கல்யாணம் அக்கா கண்டிப்பா வரேன் என வெற்றி சொல்கிறான்.
அடுத்ததாக தன்னுடைய அக்கா தீபாவை சந்திக்க தீபா நீ என்னடா இங்க என்று கேட்க வெற்றியின் நண்பர்கள் அண்ணனுக்கு பொண்ணு பாக்குறாங்க அதான் சர்ட் எடுக்க வந்தோம் என்று சொல்ல என்கிட்ட சொல்லாம அப்பா அம்மா உனக்கு பொண்ணு பாக்குறாங்களா என்று தீபா கேட்க வெற்றி எனக்கு இதுல பெருசா விருப்பமில்ல அக்கா என்று சொல்கிறான். நீ எங்க இங்க என்று கேட்க தீபா மாமியார் குடும்பத்துடன் வந்ததாக சொல்ல சரி போய் பாரு வீட்டுக்கு வா அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்கிறான்.
அடுத்ததாக மகேஷ் அஞ்சலியை நகை எடுப்பதற்காக அழைத்துச் செல்கிறான். அஞ்சலி நகைகளின் விலை அதிகமாக இருப்பதை பார்த்து குறைவான விலையில் ஒரு நகையை எடுக்க மகேஷ் இதை நோட் செய்கிறான்.
மறுபக்கம் ஜெகன் வீட்டில் வக்கீல் வந்திருக்க தியாவை நல்லபடியாக பார்த்துக் கொள்வது போல ஜெகன் அம்மா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறாள். ஜெகன் இன்னொரு உயில் இருக்குன்னு சொன்னீங்களே அதை படிச்சிடலாமா என்று கேட்க லாயர் அதுக்கான டைம் வரல.. அந்த உயில எப்போ படிக்கணும்னு ஸ்ரீகாந்த் சார் எழுதி வச்சிருக்காரு. அப்போதான் படிக்க முடியும் இப்போ குழந்தையை பார்த்துட்டு போக தான் வந்ததாக சொல்கிறார். இதனால் ஜெகன் கடுப்பாகிறான்.
அதன் பிறகு சிவராமன் குடும்பத்தினர் எல்லோரும் வீட்டுக்கு வர வீட்டில் பாட்டி யாரோ நாலு பேர் வந்து இந்த நகை எல்லாம் கொடுத்துட்டு போனாங்க என்று சொல்ல மகேஷ் தான் கொடுத்து அனுப்பினார் என்பது தெரிய வருகிறது. மேலும் மகேஷ் அஞ்சலிக்கு உனக்கு பிடிச்ச எல்லாமே உனக்கு கிடைக்கணும் அதுக்காகத்தான் நகைகளை அனுப்பி வச்சிருக்கேன் என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருப்பதும் தெரிய வருகிறது.
துளசி மட்டும் தியாவை நினைத்து வருத்தமாக இருக்க வாய் பேச முடியாத பாலமுருகன் இதை கவனித்து துளசிக்கு சாப்பாடு ஊட்டி விட்டு ஆறுதல் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க| கார்த்தி படத்தில் குழந்தையாக நடித்தவர்-இன்று அவருக்கே ஜோடி! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ