ஓய்வூதியம் மற்றும் அரசு மானியங்கள் பெரும் வங்கி கணக்கு குறித்து RBI புதிய உத்தரவு!

Reserve Bank of India Latest News: தங்களது வங்கிக் கணக்கில் வரும் மானியங்கள் தடையின்றி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வங்கிகள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என ஆர்பிஐ அறிவுறுத்தல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 17, 2025, 04:50 PM IST
ஓய்வூதியம் மற்றும் அரசு மானியங்கள் பெரும் வங்கி கணக்கு குறித்து RBI புதிய உத்தரவு!  title=

Reserve Bank of India Latest Order: ஓய்வூதியம் வாங்கும் நபர்களுடைய வங்கிக் கணக்கு சார்ந்து ரிசர்வ் வங்கி சார்பில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுக்குறித்து விவரங்களை பார்க்கலாம். 

இந்திய ரிசர்வ் வங்கி கோரிக்கை

ஓய்வூதியம் மற்றும்  அரசு மானியங்கள் பெறப்படும் வங்கிக் கணக்குகளை எந்த காரணத்தை முன்னிட்டும் முடக்கக் கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. 

ஆர்பிஐ துணை கவர்னர் சுவாமிநாதன் சொன்னது என்ன?

இது தொடர்பாக ரிசர்வ் வங்கினுடைய துணை கவர்னர் சுவாமிநாதன், தனியார் வங்கிகளுடைய இயக்குனர்களிடம் பேசுகையில், 'வாடிக்கையாளரை அறியும் நடைமுறையான கேஒய்சியை பெற வேண்டியது அவசியம் தான் எனினும், அதில் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். 

வங்கிக் கணக்குகளை முடக்கக்கூடாது

கேஒய்சி புதுப்பிப்பதற்கு தாமதமாகிறது என்பதற்காக அரசு மானியங்கள், ஓய்வுதியம் மற்றும் நலத்திட்ட தொகைகள் பெறப்படும் வங்கிக் கணக்குகளை முடக்கக்கூடாது எனவும் கூறினார். மூத்த குடிமக்கள், பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினர் இதனால் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

ரிசர்வ் வங்கியின் இலக்கு

எனவே வாடிக்கையாளர் சேவைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தி வரும் ரிசர்வ் வங்கியின் இலக்குகளில் இது முக்கியமானது.

தடையின்றி ஓய்வூதியம் உறுதி

தங்களது வங்கிக் கணக்கில் வரும் மானியங்கள் ஓய்வூதியத்தை தடையின்றி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிப்பதை வங்கிகள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். 

கேஒய்சி புதுப்பிக்க நடவடிக்கை தேவை

அதே நேரம் அவர்களை உரிய வழிகளில் தொடர்பு கொண்டு முகவரி, தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட கேஒய்சி தகவல்களைப் பெற்று புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை கவர்னர் சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க - வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம்! 5 ஆண்டுக்கு பிறகு RBI எடுத்த அதிரடி முடிவு

மேலும் படிக்க - ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: மாறும் விதிகள்? 65 வயதிலேயே 5%, 10%, 15% கூடுதல் ஓய்வூதியம்?

மேலும் படிக்க - மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: இனி இந்த தொகையும் கிடைக்கும், அரசு அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News