Vitamin D Deficiency | வைட்டமின் டி குறைபாடு எலும்பு பலவீனத்திற்கு முக்கிய காரணமாகும். இது எலும்புகளின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. வைட்டமின் டி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றை உறிஞ்சுவதற்கு உதவுகிறது, இவை எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தேவையான தாதுக்கள். வைட்டமின் டி போதுமானதாக இல்லாவிட்டால், எலும்புகள் பலவீனமடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்ற எலும்புகள் பலவீனமாகவும் மாறி, எளிதில் முறிவு ஏற்படும் இது குறிப்பாக வயதானவர்களில் பொதுவானது. இதேபோல், ஆஸ்டியோமலாசியா, ரிக்கெட்ஸ் (Rickets) பிரச்சனைகளும் உருவாகும்
மன அழுத்தம்:
வைட்டமின் டி குறைபாடு மன அழுத்தம் உள்ளிட்ட மன ஆரோக்கிய பிரச்சினைகளுடன் நேரடியாக தொடர்புடையது. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். வைட்டமின் டி குறைபாடு மூளை செயல்பாடு மற்றும் நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வைட்டமின் டி மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் ஒரு முக்கிய ஹார்மோனாக செயல்படுகிறது. இது மூளையில் சில நரம்பியல் கடத்திகளை (neurotransmitters) ஒழுங்குபடுத்துகிறது, அவை மனநிலையை பாதிக்கின்றன. வைட்டமின் டி குறைபாடு செரோடோனின் (serotonin) என்ற "மகிழ்ச்சி ஹார்மோன்" அளவை குறைக்கிறது, இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். மேலும், வைட்டமின் டி குறைபாடு கவலை மற்றும் மன அமைதியின்மைக்கு வழிவகுக்கும். இது மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது, இது மன அழுத்தம் மற்றும் கவலைகளை அதிகரிக்கும்.
பாலின ஆரோக்கிய பிரச்சினைகள் | வைட்டமின் டி டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை பாதிக்கிறது. இதன் குறைபாடு ஆண்களில் பாலின ஆரோக்கிய பிரச்சினைகள், பாலியல் செயல்திறன் குறைதல் மற்றும் விந்தணு தரம் குறைதல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
இருதய நோய் மற்றும் நீரிழிவு அபாயம் | வைட்டமின் டி குறைபாடு இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு (diabetes) போன்ற நோய்களுக்கு அபாயத்தை அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் | வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது. இதன் குறைபாடு தொற்று நோய்களுக்கு எதிரான போராட்ட திறனை குறைக்கும்.
வைட்டமின் டி அதிகமாக உள்ள உணவுகள்:
மீன் வகைகளான சால்மன் (Salmon), சார்டின் (Sardines), மேக்கரல் (Mackerel), துனா (Tuna), கொட்ரான் லிவர் ஆயில் (Cod Liver Oil) மற்றும் முட்டை, பால் (Milk), தயிர் (Yogurt), பண்ணீரி (Cheese), காய்கறிகள் மற்றும் தானியங்கள், சுண்டல் வகைகள் (Chickpeas, Lentils), பார்லி (Barley), ஓட்ஸ் (Oats) ஆகியவற்றில் வைட்டமின் டி உணவுகள் அதிகமாக உள்ளன.
மேலும் படிக்க | எச்சரிக்கை.... இந்த உணவுகள் புற்றுநோயை வரவழைக்கும் ஆபத்தை கொண்டவை
மேலும் படிக்க | நான் வெஜ் சாப்பிட பிறகு இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க! உடலுக்கு ஆபத்து!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ