Ketu Peyarchi 2025: ஜோதிடத்தின் கேது கிரகம் 18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. இதனால், இந்த 3 ராசிகளுக்கு சாதகமான சூழல் அதிகமாகும்.
Ketu Peyarchi 2025 In Leo: கேது கிரகம் 18 மாதங்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றும். இதனால் முழுமையாக 12 ராசிகளையும் பெயர்ச்சி ஆக, அதாவது ஒரு முழு சுழற்சிக்கு 18 ஆண்டுகள் எடுக்கும். அந்த வகையில், 18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசிக்கு கேது பெயர்ச்சி ஆக உள்ளது.
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகங்களுக்கு ஒவ்வொரு தனித்தனிமைகள் இருக்கின்றன. உங்கள் ஜோதகத்தில் இந்த கிரகங்கள் என்னென்ன நிலைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப உங்களுக்கு சுபமான மற்றும் அசுபமான தாக்கங்கள் ஏற்படும்.
கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வெவ்வேறு ராசிகள் இடையே பெயர்ச்சி ஆவது வழக்கம். இந்த காலகட்டம் ஒவ்வொரு கிரகங்களுக்கும் மாறுபடும். ஜோதிடத்தின்படி, ராகு மற்றும் கேது நிழல் கிரகமாக பார்க்கப்படுகிறது. இதில் கேது கிரகம் 18 மாதங்களுக்கு ஒருமுறை பெயர்ச்சி (Ketu Transit 2025) அடைகிறது.
தற்போது கேது கிரகம் கன்னி ராசியில் (Virgo) வீற்றிருக்கிறார். இந்நிலையில் வரும் மே மாதத்தில் கேது, கன்னியில் இருந்து சிம்ம ராசிக்கு (Leo) பெயர்ச்சி ஆகிறார்.
சூரிய பகவானின் ராசியான சிம்மத்திற்கு கேது 18 ஆண்டுகளுக்கு பின் தற்போது பெயர்ச்சி ஆகிறார். இதனால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு (3 Zodiac Signs) சாதகமாக அமையும். அந்த ராசிகள் எவை, அந்த ராசிகளுக்கான பலன்களை இங்கு காணலாம்.
மிதுனம் (Gemini): ஜோதிடத்தின்படி, கேது பெயர்ச்சிக்கு, இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் கேது மூன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பார். இதனால், உங்களின் உடன்பிறந்தோருடனான உறவு பலமாகும். பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத வருமானம் வரும். புதிய முறையில் உங்களுக்கு வருமானம் வந்து சேரும். குடும்பத்துடன் நீண்ட தூரம் சுற்றுலா செல்வீர்கள்.
விருச்சிகம் (Scorpio): கேது பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகம் அதிகம். வேலையை மாற்ற வேண்டும் என நீண்ட நாள்களாக நினைப்பவர்கள் வரும் மே மாதத்திற்கு பின் நிச்சயம் மாறலாம், அதிக வருமானத்துடன் நல்ல வாய்ப்பும் தேடி வரும். புதிதாக வேலை தேடி வருபவர்களுக்கும் நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். உங்களின் வருமான அதிகரித்து பொருளாதார நிலை மேம்படும்.
தனுசு (Sagittarius): வரும் மே மாதத்தில் இருந்து இந்த ராசிக்கான அதிர்ஷ்டம் அதிகமாகும். பணியில் இருப்பவர்களுக்கு பொற்காலம் பிறக்கப்போகிறது. பதவி உயர்வுடன் ஊதிய உயர்வும் கிடைக்கும். உடல்நலன் சீராக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். வெளிநாட்டுச் சுற்றுலா செல்லவும் வாய்ப்புள்ளது.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.