Heart Health: இதயத் துடிப்பு சீராக இருக்க... கடைபிடிக்க வேண்டிய சில பழக்கங்கள்

இதயத் துடிப்பு சீரற்றதாக, மிகவும் வேகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது ஹைபோகாலேமியா என அழைக்கப்படுகிறது. இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் இதயத்தின் அமைப்பில் இடையூறு ஏற்படும் போது இந்த நிலை ஏற்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 11, 2024, 02:06 PM IST
  • அன்றாட பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் இதய துடிப்பை சீராக வைத்துக் கொள்ளலாம்.
  • பொட்டாசியம் ஊட்டச்சத்து இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இதயத் துடிப்பை சீராக பராமரிக்க. நான் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சில பழக்கங்கள்.
Heart Health: இதயத் துடிப்பு சீராக இருக்க... கடைபிடிக்க வேண்டிய சில பழக்கங்கள் title=

இதயத் துடிப்பு சீரற்றதாக, மிகவும் வேகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது ஹைபோகாலேமியா என அழைக்கப்படுகிறது. இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் இதயத்தின் அமைப்பில் இடையூறு ஏற்படும் போது இந்த நிலை ஏற்படுகிறது. சில சமயங்களில் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு இயல்பானதாகவும் ஆபத்தில் இல்லாததாகவும் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து அடிக்கடி நிகழ்வது ஆபத்தான மருத்துவ நிலையின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

எனினும், நீங்கள் பீதி அடையத் தேவையில்லை, இதற்காக உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் இதய துடிப்பை சீராக வைத்துக் கொள்ளலாம். மேலும், இன்றைய காலத்தில் மாரடைப்பு, இதய நோய் ஆகியவை இளைஞர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக மாறி விட்டதால், இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

இதயத் துடிப்பை சீராக பராமரிக்க. நான் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சில பழக்கங்கள்

உடற்பயிற்சி

தினமும் மிதமான உடற்பயிற்சியை செய்து வந்தால், இதய நோய்கள் எதுவும் அண்டாது. இதயத்தை வலுப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உடற்பயிற்சி உதவும். தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மாரடைப்பு அபாயம் வெகுவாக குறையும். உங்களால் ஜிம்மிற்கு செல்ல முடியாவிட்டால், நடை பயிற்சியை மேற்கொள்ளவும், முடிந்த அளவு, லிஃப்ட், எஸ்கலேட்டர்கள் பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் ஏறவும்.

சரிவிகித உணவு

நீங்கள் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும், உங்கள் உணவு அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீரான உணவாக இல்லாவிட்டால், சிறந்த ஆரோக்கியத்தை பெறுவது கடினம். சரிவிகித உணவை உட்கொள்பவர்களின் இதயத் துடிப்பு சீரான வேகத்தில் இயங்குகிறது என்கின்றனர் மருத்துவர்கள். அதே சமயம் எண்ணெய், காரம், பொரித்த மற்றும் டிரான்ஸ் ஃபேட் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், இதய ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும்.

பொட்டாசியம் ஊட்டச்சத்து

பொட்டாசியம் ஊட்டச்சத்து இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உடலில் பொட்டாசியம் சத்து குறைவாக இருந்தாலும் இதய துடிப்பு சீராக இல்லாமல் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே உணவில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் இதய ஆரோக்கியத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | Brain Booster: மூளை சுறுசுறுப்பாக இருக்க உதவும்... சில காலை பழக்கங்கள்

மனப் பதற்றம் அல்லது டென்ஷன்

பதற்றம், கவலை , டென்ஷன் போன்றவை நம் ஆரோக்கியத்திற்கு எதிரி என்று நம் பெரியோர்கள் கூறியுள்ளனர். அதாவது, நமது மன ஆரோக்கியத்தை நன்றாக வைத்துக் கொள்ளாவிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது சவாலானதாகிவிடும். அதிக டென்ஷன் மற்றும் மன அழுத்தம் இருப்பவர்களின் இதயத் துடிப்பு சீரற்றதாக இருக்கும்.

போதுமான தூக்கம் 

ஆரோக்கியமான நபர் ஒருவர் ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும் என்று பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தூக்கமின்மை அல்லது போதுமான தூக்கம் இல்லாத நிலை, அல்லது நேரம் கெட்ட நேரத்தில் தூங்கும் வழக்கம், ஆகியவை உங்கள் இதயத் துடிப்பு சீரற்றதாக ஆக்கி விடும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதை கடைபிடிப்பதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... கிளைசிமிக் குறியீடு குறைவாக உள்ள சில சூப்பர் பழங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News