Actress Rakshitha Recent Photos : 20 ஆண்டுகளுக்கு முன்னர், நாம் திரையில் இளமையாக பார்த்த நடிகைகள் யாருமே இப்பாேது அதே தோற்றத்தில் இல்லை. வயது ஏறும் போது அவர்களின் தோற்றங்களில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான். ஆனால், இந்த நடிகை மொத்தமாக முகம் கூட அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போய் இருக்கிறார். அந்த நடிகையின் தற்போதைய தோற்றத்தையும், அவர் குறித்த பல விவரங்களையும் இங்கு பார்ப்போம்.
சிம்புவுடன் நடித்திருக்கிறார்..
ரக்ஷிதா, 2003ஆம் ஆண்டில் வெளியான தம் படத்திலும் நடித்திருக்கிறார். இளைஞராக துருதுருவென திரியும் சிம்புவுக்கு ஜோடியாக இந்த படத்தில் வந்த ரக்ஷிதா அவருடன் சானக்யா சானக்யா பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். இதன் மூலமாகத்தான் அவருக்கு விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தம் படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும் இவரது கதாப்பாத்திரம் அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டது. கன்னட சினிமாவில் இருந்து வந்திருந்தாலும், இவர் பார்ப்பதற்கு தமிழ் பெண் போல இருப்பதால் ரசிகர்களும் இவரை ஏற்றுக்கொண்டனர்.
மதுர படத்தில் நடித்தவர்..
விஜய் நடிப்பில் 20 வருடங்களுக்கு முன்பு வெளியான படம், மதுர. இந்த படத்தில் எலந்த பழம் பாடலும், பம்பர கண்ணு பாடலும் மிகவும் பிரபலம். இதில், கவர்ச்சியாக நடனமாடியதோடு மட்டுமன்றி, படத்தின் நாயகியாகவும் நடித்திருப்பார் ரக்ஷிதா. இந்த படம் மூலம் கவனம் ஈர்த்த இவர், தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெகு சில படங்களில் நடித்து முடித்தவுடன் திரையுலகிற்கு இவர் குட்-பை சொல்லிவிட்டார்.
சமீபத்திய லுக்:
நடிகை ரக்ஷிதா, இப்போது பார்க்க எப்படியிருக்கிறார் என்பது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் ஏதோ ஒரு திருமண நிகழ்ச்சியில் சாப்பிடுவதும், பிறரிடம் பேசுவதும் பதிவாகி இருக்கிறது. ஒரு பக்கம் அவர் சாணக்யா சாணக்யா பாடலுக்கு நடனமாடுவதும், இன்னொரு பக்கம் அவர் இப்போது பார்க்க எப்படியிருக்கிறார் என்பது குறித்தும் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
அடையாளமே
தெரியவில்லைpic.twitter.com/rlimI5nhgW— (@Sun46982817Shan) February 19, 2025
ஏன் இப்படி மாறிவிட்டார்?
பெண்கள் அனைவரும், திருமணத்திற்கு பிறகும் குழந்தை பெற்ற பின்பும் உடல் ரீதியாக பலவித மாற்றங்களுக்கு ஆளாவார்கள். அப்படிப்பட்ட மாற்றம்தான், நடிகை ரக்ஷிதாவினுடையதும். இவர், 2002 முதல் 2007ஆம் ஆண்டு வரை திரையுலகில் ஆக்டிவாக இருந்த இவர் மிக இளம் வயதிலேயே இயக்குநர் பிரேமை காதலித்து கரம் பிடித்து விட்டார். இவருக்கு நன்கு வளர்ந்த ஒரு மகனும் இருக்கிறார். குடும்பம்-குழந்தை என பெண்கள் பலர் தங்களை தாங்களே பார்த்துக்கொள்ள முடியாமல் போய் விடுகின்றனர். அப்படிப்பட்ட நிலைதான், இவருக்கும் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு, கர்நாடகாவை சேர்ந்த இவர் சினிமாவை விட்டு விலகிய பிறகு அரசியலில் ஆக்டிவாக அரம்பித்தார். இப்போது இவர் பாஜக கட்சியில் முக்கிய உறுப்பினராகவும் இருக்கிறார். சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ளும் இவர், அதில் நடுவராகவும் செயல்படுகிறார். அவ்வப்போது நேர்காணல்களிலும் கலந்து கொண்டு, தன்னைப்பற்றி பேசி வருகிறார்.
நெட்டிசன்களின் ரியாக்ஷன்..
இந்த நடிகையின் தற்போதைய நிலையை பார்த்த ரசிகர்கள் பலவாராக கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர். அதில் ஒருவர், “ஒரு காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர், இப்போது அவருக்கு தாயாக நடிப்பது போல இருக்காறே” என்று கூறியிருக்கிறார். இன்னும் சிலர், அவரை உருவ கேலி செய்து கமெண்ட் செய்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | எப்டி இருந்த சிவா-இப்டி ஆயிட்டாரு!! அமரனுக்கு முன்னும்-பின்னும் சிவகார்த்திகேயன்..
மேலும் படிக்க | Nivetha Thomas: அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை நிவேதா தாமஸ்!! வைரல் போட்டோஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ