சகல செல்வங்களையும் தரும் மகா சிவராத்திரி விரதம்... கடைபிடிக்கும் நேரமும்... நியமங்களும்

மகா சிவராத்திரி விரதம்: சிவன் பக்தர்களுக்கு மகாசிவராத்திரி நாள் மிக முக்கியமானதாகவும், புனிதமான நாளாகவும் கருதப்படுகிறது. மஹா சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கு செல்வத்திற்கு குறைவிருக்காது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 20, 2025, 04:19 PM IST
  • மகா சிவராத்திரி விரதத்தின் போது மதியம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • மஹா சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கு செல்வத்திற்கு குறைவிருக்காது.
  • திருமணம் கை கூடாதவர்களுக்கும் திருமணம் கை கூடும்.
சகல செல்வங்களையும் தரும் மகா சிவராத்திரி விரதம்... கடைபிடிக்கும் நேரமும்... நியமங்களும் title=

மகா சிவராத்திரி விரதம்: சிவன் பக்தர்களுக்கு மகாசிவராத்திரி நாள் மிக முக்கியமானதாகவும், புனிதமான நாளாகவும் கருதப்படுகிறது. மஹா சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கு செல்வத்திற்கு குறைவிருக்காது. சிவன் மற்றும் அன்னை பார்வதியின் திருமணம் இந்த நாளில் நடந்தது என புராணங்கள் கூறுகின்றன. எனவே இந்த தேதியில் அவர்களின் சிவபெருமானையும், அன்னை பார்வதி தேவியையும் வணங்குவதால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் கை கூடாதவர்களுக்கும் திருமணம் கை கூடும்.

மஹா சிவராத்திரி விரதம் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் சதுர்த்தசி திதியில் அனுசரிக்கப்படுகிறது. சிவராத்திரி அன்று சிவ பெருமான் மற்றும் பார்வதி தேவியை வழிபடுவதன் மூலம், பல விதமான பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவதோடு, அவரது மன விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

மகாசிவராத்திரி 2025 தேதி

மாசி மாத கிருஷ்ண பக்ஷத்தின் சதுர்த்தி திதி பிப்ரவரி 26 புதன்கிழமை காலை 11.08 மணிக்கு தொடங்குகிறது. தேதி பிப்ரவரி 27 காலை 8:54 மணிக்கு முடிவடையும். மஹாசிவராத்திரி வழிபாடு இரவில் நடக்கும். எனவே மகாசிவராத்திரி விரதம் பிப்ரவரி 26 அன்று மட்டுமே அனுசரிக்கப்படும்.

மகா சிவராத்திரி பூஜைக்கு உகந்த நேரம்

மகாசிவராத்திரியில் நிஷித காலத்தில் வழிபடுவது சிறப்பு. இந்த நாளில், நிஷிதா காலத்தின் ஆரம்பம் பிப்ரவரி 26 அன்று மதியம் 12:09 முதல் 12:59 வரை. பக்தர்கள் வழிபடுவதற்கு 50 நிமிடங்கள் கிடைக்கும்.

நான்கு கால பூஜைக்கு உகந்த நேரம்

முதல் கால பூஜை நேரம் மாலை 06:19 மணி முதல் இரவு 09:26 மணி வரை.

இரண்டாவது கால பூஜை நேரம் பிப்ரவரி 27 காலை 09:26 முதல் 12:34 வரை.

மூன்றாவது கால பூஜை நேரம் பிப்ரவரி 27 அன்று மதியம் 12:34 முதல் 03:41 வரை.

நான்காவது கால பூஜை நேரம் பிப்ரவரி 27 ஆம் தேதி அதிகாலை 03:41 முதல் 06:48 வரை.

மேலும் படிக்க | உதயமாகும் புதன்... மகாசிவராத்திரி முதல் இந்த ராசிகளுக்கு விடியல் காத்திருக்கு

மகாசிவராத்திரி விரத விதிகள் அல்லது நியமங்கள்

1. சிவராத்திரி நாளில் சிவபெருமானையும் பார்வதி அன்னையையும் மங்களகரமான நேரத்தில் வழிபடுங்கள்.

2. சிவபெருமானுக்கு ஜலாபிஷேகம் செய்யுங்கள். இது விரதத்தின் முழு பலனைத் தரும்.

3. சிவராத்திரி அன்று விரதம் இருந்தால் உணவு உட்கொள்ள வேண்டாம். பழங்களை உண்ணலாம்.

4. மகா சிவராத்திரி அன்று நிர்ஜல விரதம் கடைப்பிடித்தால், அந்த நாள் முழுவதும் ஒரு சொட்டு தண்ணீர் கூட உட்கொள்ளக்கூடாது.

5. மகா சிவராத்திரி நாளில் சிவலிங்கத்திற்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தை தவிர வேறு உணவுகளை ஏற்கக் கூடாது.

6. மகா சிவராத்திரி விரதத்தின் போது, ​​பழங்கள், தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.

7. மகா சிவராத்திரி விரதத்தின் போது எந்த விதமான தாமச உணவும், மற்றவர்கள் மனம் புண்படும்படி பேசுதல், சண்டையிடுதல் கூடாது.

8. மகா சிவராத்திரி விரதத்தின் போது மதியம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

9. மகா சிவராத்திரி அன்று முழுவதும் சிவனை தியானியுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சனி பெயர்ச்சியால் மார்ச் 29 ஆம் தேதிக்குப் பிறகு நடக்கும் மிகப்பெரிய மாற்றம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News