மகா சிவராத்திரி 2025: ஈசனின் அருளால் இந்த ராசிகளுக்கு இனி ஏற்றம், இமயம் போல் வளர்ச்சி

Maha Shivratri 2025: ஜோதிட கணக்கீடுகளின் படி, மேஷம், ரிஷபம், கடகம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் சிவ பெருமானின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2025, 04:45 PM IST
  • சிவ பெருமானின் சிறப்பு அருளால், கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
  • சில பெரிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
  • அது அவர்களுக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
மகா சிவராத்திரி 2025: ஈசனின் அருளால் இந்த ராசிகளுக்கு இனி ஏற்றம், இமயம் போல் வளர்ச்சி title=

Maha Shivaratri 2025: சிவ பெருமானை வணங்கி அவர் அருள் வேண்டி கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையான மகா சிவராத்திரி இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளது. இமயத்தில் அமர்ந்து இந்த அண்டம் முழுவதையும் காக்கும் ஈசனுக்கு உகந்த நாட்களில் மகா சிவராத்திரி மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு மகா சிவராத்திரி பண்டிகை பிப்ரவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படும். இந்த திருநாளில், சிவ பக்தர்கள் விரதம் இருந்து சிறப்பு பிரார்த்தனைகளைச் செய்வது வழக்கம். இந்த  நாளில் சிவ பெருமானை நோக்கி நாம் எந்த ஒரு பிரார்த்தனையை வைத்தாலும், அதை அவர் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். சிவபெருமான் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் அருள் புரியும் தெய்வம். எனினும், இந்த முறை மஹாசிவராத்திரி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். 

ஜோதிட கணக்கீடுகளின் படி, மேஷம், ரிஷபம், கடகம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் சிவ பெருமானின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு, இந்த நேரம் முன்னேற்றம், நிதி ஆதாயம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதி என பல வித நல்ல பலன்கள் கிடைக்கும். சிவராத்திரியில் இந்த ராசிகளுக்கு சிவ பெருமானின் அருளால் கிடைக்கவுள்ள அமோகமான நற்பலன்கள் பற்றி இங்கே காணலாம்.

மேஷம் (Aries): தொழில் முன்னேறும், சம்பளம் உயரும்

இந்த மகாசிவராத்திரி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைக் கொண்டு வரும். இந்த நாளில், சிவபெருமானின் அருளால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். பணி இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனுடன் வணிகத்தில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

ரிஷபம் (Taurus): நிதி நிலைமை முன்னேற்றம் காணும்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மஹாசிவராத்திரிக்கு பிறகு சிவபெருமானின் அருளால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகமாகும். பணி இடத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். இதன் காரணமாக வசதிகள் பெருகும். 

கடகம் (Cancer): நிதி நெருக்கடியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்

கடக ராசிக்காரர்களுக்கு, இந்த மகாசிவராத்திரி பொருளாதார முன்னேற்றத்தையும், தொழிலில் வெற்றியையும் தரும். சிவ பெருமானின் அருள், தொழிலதிபர்களுக்கு நல்ல முதலீடுகளை ஈட்டவும், பழைய கடன்களிலிருந்து விடுபடவும் வாய்ப்பளிக்கும். நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு இந்த சிவராத்திரி முதல் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கும்பம் (Aquarius): வாழ்க்கையின் பெரிய பிரச்சினைகள் தீரும்

மகா சிவராத்திரியில் கிடைக்கவுள்ள சிவ பெருமானின் சிறப்பு அருளால், கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். இவர்களின் வாழ்க்கையில் சில பெரிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அது அவர்களுக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். இது தவிர, குடும்பத்தில் நடந்து வரும் சச்சரவுகள் முடிவுக்கு வந்து, திருமண வாழ்க்கையிலும் இனிமை நிலவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2025: அந்த சனி பகவானே இவங்க பக்கம், கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்

மேலும் படிக்க | மாசி அமாவாசை தினத்தின் சிறப்புகள் மற்றும் பலன்கள்.. மறந்தும் இதை செய்யாதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News