மாசி 9... தினசரி ராசிபலன்... இந்தெந்த ராசிகளுக்கு இன்று மாற்றம் உண்டாகும்

Today Horoscope In Tamil: மாசி மாதம் 9ஆம் நாளான இன்று (பிப். 21) 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இங்கு விரிவாக காணலாம்.

Daily Raasipalan In Tamil: இன்று மாசி மாதம், 9ஆம் நாள் வெள்ளிக்கிழமை (பிப். 21) குரோதி வருடம். சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 12:09 முதல் மதியம் 12:56 வரை; பிரம்மா முகூர்த்தம் - காலை 05:03 முதல் காலை 05:51 வரை. அசுபமான காலம்: இராகு - காலை 11:04 முதல் மதியம் 12:33 வரை; எமகண்டம் - மாலை 3:30 முதல் மாலை 4:58 வரை; குளிகை - காலை 8:08 முதல் காலை 9:36 வரை; துரமுஹுர்த்தம் - காலை 9:01 முதல் காலை 9:48 வரை, மதியம் 12:56 முதல் மதியம் 1:44 வரை; தியாஜ்யம் - இரவு 09:54 முதல் மதியம் 11:37 வரை. சூரியோதயம் - காலை 6:39, சூரியஸ்தமம் - மாலை 6:27. வாரசூலை: சூலம் - மேற்கு, பரிகாரம் - வெல்லம். இன்று சம நோக்கு நாள் மற்றும் தேய்பிறை ஆகும். வாருங்கள் இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

1 /13

பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.

2 /13

மேஷம்: உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும்.  பரணி : புரிதல் உண்டாகும். கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

3 /13

ரிஷபம்: குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்துவந்த சில குழப்பங்கள் மறையும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம் கிருத்திகை : சாதகமான நாள். ரோகிணி : நெருக்கம் அதிகரிக்கும். மிருகசீரிஷம் : குழப்பம் மறையும்.

4 /13

மிதுனம்: விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல சந்தர்ப்பம் கைகூடிவரும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். அனுபவம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் :  கலகலப்பான நாள். திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும். புனர்பூசம் : லாபகரமான நாள்.

5 /13

கடகம்: கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். நாத்திகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அடமான பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் புனர்பூசம் : அன்னியோன்யம் அதிகரிக்கும். பூசம் : இலக்குகள் பிறக்கும். ஆயில்யம் : பிரார்த்தனைகள் நிறைவேறும். 

6 /13

சிம்மம்: நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை வேண்டும். சேமிப்பை மேம்படுத்தும் எண்ணம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம் மகம் : லாபகரமான நாள். பூரம் : சேமிப்பு மேம்படும். உத்திரம் :  அனுபவம் கிடைக்கும்.

7 /13

கன்னி: சிறு தூரப் பயணங்களால் தெளிவுகள் ஏற்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு செய்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திரம் : தெளிவுகள் ஏற்படும். அஸ்தம் : தேவைகள் பூர்த்தியாகும். சித்திரை :  வாய்ப்புகள் கிடைக்கும்.  

8 /13

துலாம்: உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலை காணப்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். தனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். பயம் விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் சித்திரை : தடைகள் விலகும். சுவாதி : சிந்தனைகள் மேம்படும். விசாகம் : வரவுகள் மேம்படும்.

9 /13

விருச்சிகம்: குடும்ப விஷயங்களில் அலட்சியமின்றி செயல்படவும். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். வாக்கு சாதுரியம் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வருவார்கள். தியானம் மூலம் மன அமைதி உண்டாகும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். நற்செயல் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம் விசாகம் : முயற்சிகள் ஈடேறும். அனுஷம் : மாற்றம் ஏற்படும்.  கேட்டை : பயணங்கள் தாமதமாகும்.

10 /13

தனுசு: முன்பின் தெரியாதவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மூலம் : அலைச்சல் ஏற்படும்.  பூராடம் : மேன்மையான நாள். உத்திராடம் :  ஏற்ற, இறக்கமான நாள்.

11 /13

மகரம்: சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். சமூக பணிகளில் கௌரவம் மேம்படும். கடல் பிரயாண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாகும். வேளாண்மை பணிகளில் லாபம் மேம்படும். ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழல் ஏற்படும். மூத்த சகோதர வழியில் ஆதரவுகள் கிடைக்கும். கலைத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். கீர்த்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் :  இளம்பச்சை நிறம் உத்திராடம் : குழப்பம் விலகும்.  திருவோணம் : லாபம் மேம்படும்.  அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

12 /13

கும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் :  நீல நிறம் அவிட்டம் : ஒற்றுமை பிறக்கும்.  சதயம் : மாற்றமான நாள். பூரட்டாதி : புதுமையான நாள்.

13 /13

மீனம்: உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடி வரும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் வந்துசேரும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் :  நீல நிறம் பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.  உத்திரட்டாதி : மாற்றமான நாள். ரேவதி :  கவனம் வேண்டும்.