IND vs BAN: கைக்கூப்பி மன்னிப்பு கேட்ட ரோஹித்... அக்சர் பட்டேல் ஷாக் - என்ன நடந்தது?

IND vs BAN: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் பட்டேலை நோக்கி, கேப்டன் ரோஹித் சர்மா கைக்கூப்பி மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்தது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 20, 2025, 04:34 PM IST
  • இந்திய அணி முதல் பவர்பிளேவில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது.
  • ஷமி மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
  • அக்சர் பட்டேலுக்கு கிடைத்த ஹாட்ரிக் சான்ஸ் வீணானது.
IND vs BAN: கைக்கூப்பி மன்னிப்பு கேட்ட ரோஹித்... அக்சர் பட்டேல் ஷாக் - என்ன நடந்தது? title=

IND vs BAN Latest News Updates: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 (ICC Champions Trophy 2025) பாகிஸ்தானில் நேற்று (பிப். 19) தொடங்கியது. 8 அணிகள் விளையாடும் இந்த தொடர் வரும் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

IND vs BAN: அரையிறுதியில் நியூசிலாந்து...?

முதல் போட்டியில் நேற்று குரூப் ஏ-வில் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, வெற்றியுடன் தொடரை தொடங்கியிருக்கிறது. இதனால், நியூசிலாந்து ஏறத்தாழ அரையிறுதியை உறுதிசெய்துவிட்டது எனலாம். வங்கதேசம், இந்தியா போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றாலே நியூசிலாந்து அணி அரையிறுதியை உறுதிசெய்துவிடும்.

IND vs BAN: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்

அந்த வகையில், இன்று அதே குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள இந்தியா - வங்கதேசம் அணிகள் (India vs Bangladesh) துபாய் சர்வதேச  கிரிக்கெட் மைதானத்தில் மோதி வருகின்றன. இந்திய அணி அதன் அனைத்து போட்டிகளையும் இந்த மைதானத்திலேயே விளையாட இருக்கிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார்.

IND vs BAN: மிரட்டிய ஷமி - ஹர்ஷித் ராணா கூட்டணி

இந்திய அணி முதல் ஓவரில் இருந்தே வங்கதேச அணி மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தது. ஷமி பந்துவீச்சில் சௌமியா சர்கார் டக்அவுட்டாக, ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த ஓவரில் கேப்டன் ஷாண்டோ டக்அவுட்டானார். அதன்பின், டன்சித் ஹாசன் - மெஹிடி ஹாசன் மிராஸ் ஆகியோர் இடையே 24 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. இந்த இணையை முகமது ஷமி உடைத்தார். மெஹிடி ஹாசன் மிராஸ் 5 ரன்களில் வெளியேறினார். ஷமி - ஹர்ஷித் ராணா வீசிய முதல் 8 ஓவர்களில் 35 ரன்கள் கொடுக்கப்பட்டாலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.

IND vs BAN: அக்சர் பட்டேலுக்கு கிடைத்த ஹாட்ரிக் வாய்ப்பு

இதையடுத்து, 9வது ஓவர்தான் போட்டியில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது எனலாம். 9வது ஓவரை அக்சர் பட்டேல் (Axar Patel) வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தில் 25 ரன்களை அடித்த டன்சித் ஹாசன் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதற்கு அடுத்த பந்தே அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹீம்மும் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், அக்சர் பட்டேலுக்கு முதல் ஹாட்ரிக் வாய்ப்பு கிடைத்தது.

IND vs BAN: ரோஹித் சர்மா தவறவிட்ட ஈஸி கேட்ச்

அக்சர் பட்டேல் வீசிய அந்த நான்காவது பந்தில் ஜக்கர் அலி எதிர்கொண்டார். அந்த பந்தும் பேட்டின் முனையில் பட்டு முதல் ஸ்லிப்பில் இருந்த ரோஹித் சர்மாவை நோக்கி சென்றது. ஆனால், ஹட்ரிக் வர இருக்கும் சந்தோஷத்தில் ரோஹித் சர்மாவின் (Rohit Sharma) சிறிய கவனச்சிதறலால் அந்த கேட்ச்சை அவர் தவறவிட்டார். கேட்ச்சை தவறவிட்ட கோபத்தில் அவர் தரையை பல முறை அடித்து தனது அதிருப்தியை வெளிக்காட்டினார்.

IND vs BAN: ரோஹித் சர்மா தன் மீதே அதிருப்தி

அதுமட்டுமின்றி, அக்சர் பட்டேலுக்கு கிடைத்த ஹாட்ரிக் வாய்ப்பை (Axar Patel Hat-Trick Miss) தனது கவனக்குறைவால் தவறவிட்டுவிட்டோம் என்ற விரக்தியில் ரோஹித் சர்மா காணப்பட்டார். அக்சர் பட்டேலின் அடுத்த 2 பந்துகள் மட்டுமின்றி அடுத்த சில ஓவர்களுக்கு ரோஹித் சர்மா மிகவும் அதிருப்தியாகவே இருந்தார்.

IND vs BAN: கைக்கூப்பி மன்னிப்பு கேட்ட ரோஹித் சர்மா

மேலும், அக்சர் பட்டேலை நோக்கி கைக்கூப்பி கேட்ச்சை தவறவிட்டதற்கும், ஹாட்ரிக் பறிபோனதற்கும் மன்னிப்பு கேட்டார். இருப்பினும், அக்சர் பட்டேல் பெரியளவில் ரோஹித் சர்மாவின் மீது அதிருப்தி காட்டாமல் கூலாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

IND vs BAN: போராடும் வங்கதேசம்

வங்கதேச அணி 30 ஓவர்கள் முடிவில் 111 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ஹ்ரிதோய் 36 ரன்களுடனும், ஜக்கர் அலி 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஷமி மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 1 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.

மேலும் படிக்க | Ind vs Ban: மாபெரும் சாதனைகளை படைக்க இருக்கும் ரோகித் சர்மா.. இதை செய்தால் போதும்!

மேலும் படிக்க | 2025 ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் தோனி சொன்ன முக்கிய விஷயம்! இணையத்தில் வைரல்!

மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபி : விராட்கோலி நினைத்தது மட்டும் நடந்தால் கோப்பை உறுதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News