சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியாவின் முதல் போட்டி.. பிளேயிங் 11 என்ன?

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நேற்று (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்கியது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த நிலையில், இன்று (பிப்.20) இந்திய அணி வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. 

 

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டி இன்று (பிப்.20) துபாயில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணிக்கான பிளேயிங் 11 என்ன? எந்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம். 

1 /11

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக இப்போட்டியில் களம் இறங்குவார். 

2 /11

இந்திய அணியின் துணை கேப்டனான சுப்மன் கில், கேப்டன் ரோகித் சர்மாவுடன் களம் இறங்குவார். 

3 /11

அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இப்போட்டியில் ஒன் - டவுனில் களம் இறங்குவார். 

4 /11

ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்தில் களம் இறங்குவார். 

5 /11

விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பந்திற்கும், கே.எல்.ராகுல் இடையேயும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் 5வது இடத்தில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடுவதால் அவரே களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

6 /11

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, இப்போட்டியில் கே.எல்.ராகுலுக்கு அடுத்ததாக களம் இறக்கப்படலாம். 

7 /11

சுழற் பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் பேட்டிங்கிலும் சிறந்து விளங்குவதால், அவர் பிளேயிங் 11-ல் இடம் பெற வாய்ப்புள்ளது. இவர் 5வது இடத்திலும் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்புள்ளது. 

8 /11

ரவீந்திர ஜடேஜா இந்தியாவின் பல இக்கட்டான சூழ்நிலைகளில் வீக்கெட் மற்றும் ரன்களை அடித்து காப்பாற்றி இருக்கிறார். அந்த வகையில், இவர் பிளேயிங் 11ல் இடம் பெற வாய்ப்புள்ளது. 

9 /11

இந்திய அணியின் சூழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், இப்போட்டியில் இடம் பெற வாய்ப்புள்ளது. 

10 /11

வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, இந்திய அணியின் முன்னணி பவுலராக திகழ்கிறார். அணியின் பும்ரா இல்லாத நிலையில், இவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 

11 /11

இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் சமீபமாக இந்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகிறார். அந்த வகையில், இவர் பிளேயிங் 11ல் இடம் பெற வாய்ப்புள்ளது.