சனி பெயர்ச்சி 2025: அந்த சனி பகவானே இவங்க பக்கம், கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்

Sani Peyarchi Palangal: மார்ச் மாதம் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. சனி பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு அதிக ஏற்றம்? யாருக்கு முன்னேற்றம்? சனி பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம்.

Sani Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி பகவான் ராசியை மாற்றும்போது நடக்கும் சனி பெயர்ச்சி முக்கியமான ஜோதிட நிகழ்வாகும். இது மனிதர்களின் வாழ்வில் பல வித தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.

1 /10

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார்.

2 /10

சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி பொற்காலத்தை தொடக்கி வைக்கும். இவர்கள் ராஜயோகத்தை அனுபவிப்பார்கள். அந்த அதிர்ஷ்ட்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /10

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் தொழிலில் பொருளாதார முன்னேற்றம் தொடங்கும். வியாபாரம் செய்பவர்கள் பழைய முதலீடுகளிலிருந்து நிதி நன்மைகளைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைவீர்கள். இது தவிர, இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைப்பதுடன், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உறவுகள் பலப்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

4 /10

கன்னி: சனி பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கும். நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். குடும்பத்தில் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கடனில் இருந்து நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிலம் தொடர்பான வேலைகளில் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

5 /10

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி பல வித ஆதாயங்களை அளிக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். பல வித வெற்றிகளை காண்பீர்கள். கடன் தொல்லை இனி இருக்காது. பல நல்ல செய்திகளை பெறுவீர்கள். 

6 /10

தனுசு: தனுசு ராசியின் அதிபதி குரு. சனி பகவானுக்கும் குருவுக்கும் இடையே ஒரு நட்பு உறவு உள்ளது. இந்தக் காரணத்தினால்தான், சனி பகவானின் ஆசீர்வாதம் எப்போதும் தனுசு ராசிக்காரர்கள் மீது நிலைத்திருக்கும். ஏழரை சனி காலத்திலும் தனுசு ராசிக்காரர்கள் நஷ்டத்தை சந்திப்பதற்குப் பதிலாக ஆதாயத்தையே அடைவார்கள். சனி பெயர்ச்சி அவர்களுக்கு நற்பலன்களை அளிக்கும்.

7 /10

மகரம்: சனி பெயர்ச்சிக்கு பிறகு மகர ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவார்கள். ஏழரை சனியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்பவர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். பணம் வரும். கவனம் இலக்கில் இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும். வெளிநாட்டு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். 

8 /10

சனி பகவானின் பரிபூரண அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்!ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்!!' என்ற ஸ்லோகத்தை தினமும் சொல்லலாம்.

9 /10

ஏழரை சனி பலரை அச்சுறுத்தும் ஒரு விஷயமாக இருக்கின்றது. இதன் தாக்கத்தை குறைக்க, கோளறு பதிகம், சனி சாலிசா, அனுமான் சாலிசா போன்ற ஸ்தோத்திரங்களை தினமும் பாராயணம் செய்வது நல்லது. மேலும், சனீஸ்வரரின் கோயில்களுக்கு சென்று அவரை பிரார்த்திப்பது சிறப்பு.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.