கூலி படத்துக்கு இவ்ளோ டிமாண்டா? ஓடிடி உரிமையை பெற அடித்துக்கொள்ளும் நிறுவனங்கள்..

கூலி திரைப்படத்தின் ஓடிடி ரைட்ஸை வாங்க பல நிறுவனங்கள் போட்டிபோட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Written by - R Balaji | Last Updated : Feb 21, 2025, 04:42 PM IST
  • ரஜினியின் கூலி திரைப்பட ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது
  • லோகேஷ் கனகராஜ் - ரஜினி கூட்டணி என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது
  • ஓடிடி உரிமையை வாங்க போட்டிப்போடும் நிறுவனங்கள்
கூலி படத்துக்கு இவ்ளோ டிமாண்டா? ஓடிடி உரிமையை பெற அடித்துக்கொள்ளும் நிறுவனங்கள்.. title=

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பி உருவாகி வருகிறது கூலி திரைப்படம். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டி உள்ள நிலையில், படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

ரஜினி - லோகேஷ் கூட்டணி 

கைதி, விக்ரம் போன்ற ஹிட் படங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார். இதனால் தற்போது அவர் தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களின் ஒருவராக வலம் வருகிறார். இந்த நிலையில், ரஜினி உடன் லோகேஷ் கனகராஜின் கூட்டணி உருவாகி உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் பெரிதாக உள்ளது. 

கூலி படத்தில் ரஜினிகாந்த்துடன் அமீர் கான், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட நட்சத்திர பட்டாங்கள் நடிக்கிறார்கள். குறிப்பாக அமீர் கான் முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார். அப்படி இருக்கையில் அவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதில் எதிர்பார்ப்புகள் உள்ளன.  

மேலும் படிங்க: NEEK vs Dragon: எந்த படம் நல்லாயிருக்கு? எதை முதலில் பார்க்கலாம்?

போதாகுறைக்கு படத்தில் டைட்டில் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளன. தற்போது கூலி திரைப்படம் இறுதி கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. 

புதிய தகவல்

படத்தின் மீதான எதிர்பார்ப்பால் இப்படம் மிகப்பெரிய வசூலை அள்ளும் என கருத்தப்படுகிறது. பொதுவாக ரஜினி படம் என்றாலே வசூல் அள்ளும். தற்போது ரஜினி மற்றும் லோகேஷ் சேர்ந்துள்ளதால் எப்போதும் இல்லாத அளவிற்கு வரவேற்பு மற்றும் வசூல் இருக்கும் என கருத்தப்படுகிறது. 

எனவே இப்படத்தின் ஓடிடி ரைட்ஸை வாங்க பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டு கொண்டு இருக்கின்றனவாம். குறிப்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிக ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், எவ்வளவு தொகை கேட்டாலும் பேரம் பேசி வாங்கிவிட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.  

மேலும் படிங்க: விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்? இதோ விவரம்..

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News