Masi Matham 2025 Date and Time: இந்த ஆண்டு மாசி மாத அமாவாசை பிப்ரவரி 27 ஆம் தேதி (வியாழக்கிழமை) வருகிறது. மாசி அமாவாசை தினத்தின் சிறப்புகள் மற்றும் பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Highlights Masi Matham Amavasai: அமாவாசை என்பது நம்ம முன்னோர்களுடைய நாள் எனக் கூறுவது உண்டு. அதாவது நமது முன்னோர்களை வழிபடுவதற்கான அற்புதமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக பார்க்கப்படுகிறது.
Masi Matham Amavasai 2025: இந்த மாசி மாதத்தில் வருகிற மாசி அமாவாசை தினத்தின் சிறப்புகள் மற்றும் பலன்கள் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்.
தை பிறந்ததும் கடுமையான கோடை காலத்தை நோக்கி செல்கின்றன. ஆனால் வெப்பம் சுட்டெரிக்கும் முன்பாக ஒரு பருவம் வரும் அதுதான் வசந்தகாலம் ஆகும். இந்த வசந்த காலம் தை மாதத்திற்கு அடுத்து வரும் மாசி மாதத்தில் வருகிறது. பல சிறப்புகள் கொண்டதாக மாசி மாதம் இருக்கிறது. இந்த மாசி மாதத்தில் வருகிற மாசி அமாவாசை தினத்தின் சிறப்புகள் மற்றும் பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மாசி அமாவாசை கடுங்குளில் காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குவதை குறிக்கும் காலம் தான் மாசி மாதம். ஆன்மீகம் சிறப்பு மிக்க இந்த மாசி மாதத்தில் சிவராத்திரி, காரடையான் நோன்பு, ஹோலி பண்டிகை போன்ற பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மேலும் பல சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் தீர்த்தவாரி விழாக்களும் நடத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்த மாசி மாதத்தில் வரும் மாசி அமாவாசை தினமும் ஒரு முக்கியமான தினமாகும்.
மாசி அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு, உங்கள் ஊரில் உள்ள குளக்கரை மற்றும் ஆற்றங்கரைகளில் மறைந்த உங்கள் முன்னோர்களுக்கு திதி போன்றவற்றை தர வேண்டும்.
இந்த திதி சடங்குகளை முடித்த பின்பு, தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் மாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி கழிக்க பூசணிக்காய் தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களில் அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இதை செய்வதால் தொடர்ந்து வரும் காலங்களில் தொழில் வியாபாரங்கள் நல்ல லாபங்கள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படாது.
மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் மற்றும் சமீபத்தில் மறைந்த உறவினர்கள் போன்றவர்களுக்கு சேர்த்து தர்ப்பணம் தருவதால் பித்யோகத்தில் இருக்கும் நம் முன்னோர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைந்து நமக்கு அவர்களின் ஆசிகள் கிடைக்கும் என நம்புவதால், மாசி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யுங்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படுகிற கிரக தோஷங்களும், திருமண தடை, உடல் ஆரோக்கிய குறைபாடுகள் போன்றவை எல்லாம் தீரும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஒரு சிலருடைய சுபகாரியங்கள் தடைப்பட்டு கொண்டே இருக்கும். அதாவது திருமணங்கள் போன்ற விஷயங்கள் தடைபட்டுக் கொண்டே இருக்கும். இது போன்ற சிக்கலை சந்திக்கும் நபர்கள் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் எந்த வகையான தோஷங்கள் இருந்தாலும் விலகி நல்லது நடக்கும்.