கேஜ்ரிவாலை தோற்கடித்த ப்ரவேஷ் வர்மா... டெல்லி முதல்வராகும் வாய்ப்பை இழந்தது ஏன்?

டெல்லியில் மூன்று முறை முதல்வராகவும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தலில் தோற்கடித்த பர்வேஷ் வர்மா, முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது ரேகா குப்தா முதல்வராக பதவியேற்க உள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 20, 2025, 12:05 PM IST
  • முதல்வர் பதவிக்கான போட்டியில் ப்ரவேஷ் வர்மா முன்னிலை வகித்தார்.
  • கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்திய ப்ரவேஷ் சர்மாவின் பேச்சுக்கள்.
  • புதுதில்லி தொகுதியில் இருந்து 4568 வாக்குகள் வித்தியாசத்தில் கேஜரிவாலை தோற்கடித்தார்.
கேஜ்ரிவாலை தோற்கடித்த ப்ரவேஷ் வர்மா... டெல்லி முதல்வராகும் வாய்ப்பை இழந்தது ஏன்? title=

டெல்லியில் மூன்று முறை முதல்வராகவும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தலில் தோற்கடித்த பர்வேஷ் வர்மா, டெல்லி முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது ரேகா குப்தா முதல்வராக பதவியேற்க உள்ளார். சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக ரேகா குப்தா இருப்பார்.  சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிறகு, முதல்வர் பதவிக்கான போட்டியில் பிரவேஷ் வர்மா முன்னிலை வகித்தார். ஆனால் எப்போதும் போல் இந்த முறையும் அதிகம் பேசப்படாத ஒரு தலைவரை முதல்வர் ஆக்கியது பாஜக. இருப்பினும், பிரவேஷ் வர்மா முதல்வராகும் வாய்ப்பை இழந்தது ஏன் என்ற கேள்வி பலர் மனதில் எழாமல் இல்லை.

கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா

டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மா, புதுதில்லி தொகுதியில் இருந்து 4568 வாக்குகள் வித்தியாசத்தில் கேஜரிவாலை தோற்கடித்ததை அடுத்து, முதல்வர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்டார். ரேகா குப்தாவின் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு, மத்திய பார்வையாளர்களும் கட்சியின் மூத்த தலைவர்களான விஜேந்திர குப்தா, சதீஷ் உபாத்யாய் ஆகியோர் பர்வேஷ் வர்மா உடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் முக்கிய காரணமானது

ரேகாவின் பெயர் அறிவிக்கப்பட்டவுடனேயே, பர்வேஷ் வர்மா பின் தங்கியதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக அவரது சர்ச்சை மிகுந்த பேச்சுக்கள் என்கின்றனர். ப்ரவேஷ் வர்மா பெற்றுள்ள சர்ச்சைக்குரிய நபர் என்ற பிம்பம் தான் இதற்கு காரணம் என்று சில அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர் பலமுறை சர்ச்சைக்குரிய அறிக்கைகளை கொடுத்ததால் கட்சிக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. 2022 அக்டோபரில் டெல்லியில் நடந்த விஎச்பி நிகழ்ச்சியில் ப்ரவேஷ் வர்மா ஒரு குறிப்பிட்ட சமூகத்தை முழுமையாகப் புறக்கணிப்பது பற்றிப் பேசியிருந்தார்.

கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்திய  ப்ரவேஷ் சர்மாவின் பேச்சுக்கள்

2022 ஆம் ஆண்டில், பர்வேஷ் வர்மா டெல்லியின் மெஹ்ராலியின் மக்களவை எம்பியாக இருந்தார். அப்போது, ​​பிரவேஷ் வர்மா, 'அவர்களின் மனதைக் குணப்படுத்த வேண்டும், அவர்களின் உடல்நிலையை குணப்படுத்த வேண்டும் என்று நான் சொல்கிறேன், அதற்கு ஒரே தீர்வு, அதுவே பூரண புறக்கணிப்பு' என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு கட்சியினர் கூட கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். 2024 லோக்சபா தேர்தலிலும் மெஹ்ராலியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

மேலும் படிக்க | Delhi New CM: யார் இந்த ரேகா குப்தா? டெல்லி புதிய முதலமைச்சரின் சுவாரஸ்ய பின்னணி!

குடும்ப அரசியலை கடுமையாக எதிர்க்கும் பாஜக

பிரவேஷ் வர்மாவின் தந்தை சாஹிப் சிங் வர்மா 1996 முதல் 1998 வரை டெல்லி முதல்வராக இருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், குடும்ப அரசியலை கடுமையாக எதிர்க்கும் பா.ஜ., எதிர்கட்சிகளின் விமர்சனங்களை தவிர்க்க இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம். இது தவிர, பாரதீய ஜனதா கட்சி பெரும்பாலும் முதல்வர்களின் மகன்களுக்கு வாய்ப்புகள் வழங்குவது மிக அரிதாகவே காணப்படுகிறது. அதன் உதாரணத்தை இமாச்சலத்திலும் காணலாம். இமாச்சலில், பிரேம் குமார் துமாலின் மகன் அனுராக் தாக்கூர் முதல்வர் பதவிக்கு முக்கியமான போட்டியாளராகக் கருதப்பட்டார், ஆனால் பாஜக அனுராக் பக்கம் நின்று ஜெய்ராம் தாக்கூரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தது.

செல்வாக்கு உள்ள சாதியை பாஜக முதல்வர் ஆக்குவதில்லையா?

பாஜகவின் மற்றொரு உத்தி என்னவென்றால், மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சாதியிலிருந்து மாநிலத்தின் முதலமைச்சரை கட்சி நியமிக்காது. ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களும் இதற்கு உதாரணம். ஹரியானாவில் ஜாட் இன மக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக பாஜக அந்த ஜாதியை சேர்ந்தவரை முதலமைச்சராக்கவில்லை. இது தவிர, மகாராஷ்டிராவைப் பற்றி பேசினால், மாநிலத்தில் மராட்டியர்களின் செல்வாக்கு மிக அதிகமாக உள்ளது, ஆனால் பாரதீய ஜனதா கட்சி விதர்பாவைச் சேர்ந்த பிராமணரான தேவேந்திர ஃபட்னாவிஸை மாநிலத்தின் முதல்வராக்கியது.

வணிக சமூகத்தை சேர்ந்த பெண் முதல்வர் 

சில காலமாக சாதி வேறுபாடின்றி புதிய வாக்கு வங்கியாக பெண்கள் பார்க்கப்பட்டு வருவதால், பெண் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டிய நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டதாகவும் ஒரு காரணம் கூறப்படுகிறது. பெண்களுக்கு ஆதரவளிப்பதுடன், ரேகா வடிவில் முன்னாள் முதல்வர் அதிஷியின் ஆதரவையும் அக்கட்சி கண்டறிந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலைப் போலவே ரேகாவும் வணிக சமூகம் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர். வணிக சமூகத்தினர் எப்போதும் பாஜகவின் முக்கிய வாக்காளராகக் கருதப்படுகிறார்.

மேலும் படிக்க | Siddaramaiah Setback | அடுத்த கர்நாடக முதல்வர் யார்? சித்தராமையாவுக்கு வந்த சிக்கல்.. பாஜக ஹேப்பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News