சஹால் - தனஸ்ரீ வர்மா விவாகரத்து உறுதி! நீதிமன்றம் உத்தரவு... மணமுறிவுக்கு என்ன காரணம்?

Chahal - Dhanashree Divorce: சஹால் - தனஸ்ரீ வர்மா தம்பதியினருக்கு விவாகரத்து அளித்து மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. விவாகரத்துக்கு காரணம் என்ன என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 21, 2025, 07:54 AM IST
  • 18 மாதங்களாக பிரிந்து வாழ்ந்ததாக இரு தரப்பும் வாதம்.
  • இருவருக்கும் கடந்த 2020இல் திருமணம் நடந்தது.
  • இருவரும் விவாகரத்துக்கு பின்னர் இன்ஸ்டாவில் மறைமுகமாக பதிவிட்டுள்ளனர்.
சஹால் - தனஸ்ரீ வர்மா விவாகரத்து உறுதி! நீதிமன்றம் உத்தரவு... மணமுறிவுக்கு என்ன காரணம்? title=

Yuzvendra Chahal - Dhanashree Verma Divorce: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில்லை என்றாலும் அடிக்கடி சமூக வலைதளங்களில் இவரது பெயர் அடிப்பட்டுக்கொண்டே இருந்தது. காரணம், இவர் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவை பிரிந்து வாழ்வதாக தகவல்கள் பரவின. இதை அவர்கள் முதலில் வதந்தி என குறிப்பிட்டதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.

Chahal - Dhanashree Divorce: பிரிந்த சஹால் - தனஸ்ரீ

யுஸ்வேந்திர சஹால் கிரிக்கெட் வீரர் என்பதால் சமூக வலைதளங்களில் அதிக பாலோயர்கள் கொண்டவர் எனலாம். சஹாலை இன்ஸ்டாகிராமில் 10.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். அதேபோல், மருத்துவரும், நடிகருமான தனஸ்ரீ வர்மாவை சுமார் 6.2 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். இவரும் சில நாள்களுக்கு முன்னர் தாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கங்களில் இருந்து நீக்கியது அவர்கள் பிரிந்து வாழ்வதை ஏறத்தாழ உறுதிசெய்தது எனலாம்.

Chahal - Dhanashree Divorce: நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்

அப்படியிருக்க, சஹால் - தனஸ்ரீ ஜோடி கடந்த 18 மாதங்களாக பிரிந்து வாழ்வதாகவும், அவர்கள் நீதிமன்றத்தின் மூலம் சட்ட ரீதியாக தற்போது விவாகரத்து பெற்றிருப்பதும் உறுதியாகி உள்ளது. மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களின் விவாகரத்து வழக்கு நடைபெற்றுள்ளது. நேற்று நடந்த இறுதி விசாரணையில் இருவரும் காலை 11 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், இருவரின் திருமணத்தையும் ரத்து செய்து நீதிமன்றம் விவாகரத்து அளித்து உத்தரவிட்டுள்ளது.

Chahal - Dhanashree Divorce: பிரிந்ததற்கு என்ன காரணம்?

வழக்கு விசாரணையின் போது தம்பதிகள் இருவரும், திருமண உறவு ஆலோசகருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில் தம்பதியின் திருமண வாழ்க்கைக்கு பயனளிக்கவில்லை என தெரிகிறது. இருவரும் பரஸ்பரம் விவகாரத்து கோரி நீதிபதியிடம் முறையிட்டனர். மேலும், கடந்த 18 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சஹால் - தனஸ்ரீ தம்பதியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதே மணமுறிவு முடிவுக்கு காரணம் எனவும் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.

Chahal - Dhanashree Divorce: நீதிமன்றம் தீர்ப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பாந்த்ரா குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, நேற்று மாலை 4.30 மணியளவில் தீர்ப்பு வழங்கி உள்ளார். இருவரின் திருமணப் பதிவையும் ரத்து, விவாகரத்து அளித்து உத்தரவிட்டார். இனி அவர்கள் சட்டப்பூர்வமாக தம்பதி இல்லை.

Chahal - Dhanashree Divorce: சஹால் பதிவு

விவாகரத்துக்கு பின்னர் நேற்று யுஸ்வேந்திர சஹால் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில்,"நான் நினைத்து பார்க்க முடியாத அளவுக்குக் கடவுள் என்னைப் பாதுகாத்துள்ளார். என்னை அறியாமலேயே நான் கஷ்டங்களில் இருந்த மீட்கப்பட்ட நேரங்களை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. எனக்கு தெரியாதபோதும் கூட, எப்போதும் எனக்காக இருப்பதற்காக கடவுளே உமக்கு நன்றி" என அவர் குறிப்பிட்டிருந்தார்.

Chahal - Dhanashree Divorce: தனஸ்ரீ வர்மா பதிவு

மேலும்,  தனஸ்ரீ வர்மாவும் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அதில்,"மன அழுத்தத்தில் இருந்து ஆசீர்வாதம் பெற்று மீண்டுள்ளேன். கடவுள் நம் கவலைகளையும் சோதனைகளையும் ஆசீர்வாதங்களாக மாற்றுவது ஆச்சரியமாக இருக்கிறது. இன்று நீங்கள் எதையாவது பற்றி மன அழுத்தத்தில் இருந்தால், உங்களுக்கு ஒரு ஆப்ஷன் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து கவலைப்படலாம் அல்லது எல்லாவற்றையும் கடவுளிடம் ஒப்படைத்து எல்லாவற்றையும் பற்றி கடவுளை நோக்கி வேண்டலாம். கடவுள் உங்கள் நன்மைக்காக எல்லாவற்றையும் மாற்றப்பட்டார்" என பதிவிட்டுள்ளார். 

யுஸ்வேந்திர சஹால் - தனஸ்ரீ வர்மா இருவரும் மறைமுகமாக பதிவிட்டிருந்தாலும் இவரும் அதிகாரப்பூர்வமாக தங்களது பிரிவை அறிவிக்கவில்லை. இருவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குருகிராமில் வைத்து திருமணம் நடந்தது. தனஸ்ரீ வர்மா சமூக வலைதளங்களில் முன்னரே பிரபலமாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இந்தியா போராடி வெற்றி; கில் நிதான சதம் - பாகிஸ்தான் போட்டியில் செய்ய வேண்டியது என்ன?

மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்!

மேலும் படிக்க | IND vs BAN: கைக்கூப்பி மன்னிப்பு கேட்ட ரோஹித்... அக்சர் பட்டேல் ஷாக் - என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News