மூதாட்டிகளை சிறையில் தள்ளும் ஜப்பான்! அதிர்ச்சி காரணம்..பின்னணி என்ன?

Old Women In Japan Voluntarily Going To Prison : ஜப்பானில் உள்ள முதியவர்கள் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறைக்கு செல்கின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Feb 6, 2025, 06:29 PM IST
  • ஜப்பானில் விரும்பி ஜெயிலுக்கு செல்லும் மூதாட்டிகள்!
  • அதிகமான ஜனத்தொகை..
  • காரணம் என்ன?
மூதாட்டிகளை சிறையில் தள்ளும் ஜப்பான்! அதிர்ச்சி காரணம்..பின்னணி என்ன?  title=

Old Women In Japan Voluntarily Going To Prison : தொழில்துறை, கல்வி, டெக்னாலஜி என பலவித துறைகளில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கும் நாடு ஜப்பான். இந்த நாட்டில் அவ்வப்போது சில ஆச்சரியத்துக்குரிய விஷயங்களும் நடப்பதுண்டு. அப்படிப்பட்ட ஒரு விஷயம் குறித்து இங்கு பார்ப்போம். 

ஜப்பான் நாட்டில் உள்ள முதியவர்கள்…

பொதுவாகவே ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் பிற உலக நாடுகளில் இருப்பவர்களை விட அதிக ஆயுள் கொண்டவர்களாக கருதப்படுகின்றனர். இங்கு முதியவர்கள் வாழ்வதற்கு மட்டுமே சில பிரத்தியேக இடங்களும் உள்ளன. ஆனால் அவர்களை பார்த்துக் கொள்வதற்கான ஆட்கள் இல்லை என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டின் தரவுகளின் படி, ஜப்பானில் 65 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயது உடையவர்களின் எண்ணிக்கை 36. 25 மில்லியனாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில், 20.53 மில்லியன் பெண்கள் மற்றும் 15.72 மில்லியன் ஆண்கள் எண்ணிக்கையில் இருப்பதாக தரவுகள் சொல்கின்றன. 

ஜப்பானின் மொத்த மக்கள்தொகையை கணக்கு போட்டு பார்க்கும்போது, இதில் முதியவர்களின் எண்ணிக்கை மட்டும் தற்போது 29.3% ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை ஜப்பானில் இந்த அளவிற்கு முதியவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததில்லை என அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது.

வேண்டுமென்றே சிறைக்கு வரும் மூதாட்டிகள்:

ஜப்பானின் டோக்கியோ நகருக்கு வடக்கே, பெண்களுக்கு என மிகப் பெரிய சிறை உள்ளது. இந்த சிறையில் சுமார் 500 கைதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சிறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் ஆக இருக்கிறார்கள். இது ஏன் என தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட சிலர், அங்கிருக்கும் பெண் கைதிகளிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.‌

இதற்கு அந்த சிறையில் இருப்பவர்கள் கூறிய பதில்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நிலையில் மிகவும் கீழ் உள்ளவர்கள் வேண்டுமென்றே தவறு செய்துவிட்டு சிறைக்கு விரும்பி வருவதாக தெரிவித்திருக்கின்றனர். 

இந்த முதியவர்கள் தங்களது பிள்ளைகளால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதாகவும், பல சமயங்களில் அவர்கள் உணவின்றி கஷ்டப்படுவதாகவும் கூறியிருக்கின்றனர். இவர்களின் உடல் நலன் மிதும் யாரும் அக்கறை செலுத்துவதில்லையாம். இதனால், ஏதாவது தவறை செய்து விட்டு இவர்கள் சிறைக்கு வந்துவிடிவதாகவும், இங்கு தங்களை சிறையில் இருக்கும் அதிகாரிகள் நன்றாக பார்த்துக்கொள்வதாகவும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | சொந்த பேரனை பெற்றெடுத்த 61 வயது பெண்! வித்தியாசமான கேஸா இருக்கே..

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு 70 கோடி போனஸ் தந்த நிறுவனம்..அள்ள அள்ள பணம்! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News