Ajith Kumar February Movie Releases : அஜித் குமார் நடிப்பில் உருவாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதியான நாளை வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இதுவரை பிப்ரவரியில் வெளியாகி வெற்றி மற்றும் தோல்வி பெற்ற அஜித்தின் படங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
விடாமுயற்சி திரைப்படம்:
பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு ஒரு வழியாக நாளை வெளியாக இருக்கும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். அனிருத் இசையில், லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் படம் உருவாகியுள்ளது. இதில் நெகட்டிவ் ரோலில் அர்ஜுன் மற்றும் ரெஜினா ஆகியோர் நடிக்கின்றனர். கூடவே ஆரவ், ரம்யா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களாக வருகின்றனர்.
பிப்ரவரி மாதம் அஜித்துக்கு ராசியா?
ஒரு சில நடிகர்களை பொறுத்தவரை அவர்களின் படங்களை குறிப்பிட்ட சில மாதங்களில் வெளியிட்டால் அது ஹிட் ஆகும். அந்த வகையில் அஜித்தின் பிறந்தநாள் வரும் மே மாதத்தில் வெளியான சில படங்கள் அவருக்கு வெற்றியை தேடி தந்துள்ளன. ஆனால் பிப்ரவரி மாதம் அவருக்கு என்னவோ அவ்வளவு பெரிய ராசியான மாதமாக இருந்ததில்லை. காரணம், இதுவரை வெளியான அஜித்தின் படங்களில் 8 படங்கள் பிப்ரவரியில் வெளியாகி உள்ளது. ஆனால் அதில் நான்கு படங்கள் மட்டுமே வெற்றி அடைந்துள்ளன. மீதி நான்கு படங்கள் தோல்வி அடைந்துள்ளது. அப்படி வெற்றி-தோல்வி அடைந்த படங்களை இங்கு பார்ப்போம்.
வெற்றி பெற்ற படங்கள்:
பாசமலர்கள்: 1994, பிப்ரவரி 4ஆம் தேதி வெளியான இந்தப் படத்தில் அஜித் ஹீரோ கிடையாது. இதில் அரவிந்த்சாமியும் அவருடன் சேர்ந்து நடித்திருப்பார். இந்த படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அஜித் குமார் வந்தது சில நிமிடங்கள்தான் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இறுதியில் இந்த படம், நல்ல வசூலையே பெற்றது.
உன்னைத்தேடி: இந்த படம் 1999, பிப்ரவரி 5ஆம் தேதி வெளியானது. இதில் அஜித்திற்கு ஜோடியாக மாளவிகா நடித்திருந்தார். ரொமான்டிக் காமெடி பாணியில் வெளியான இந்த படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை சுந்தர்.சி இயக்கியிருந்தார்.
முகவரி: 2000ஆம் ஆண்டில் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியான படம் முகவரி. இதில் அஜித்திற்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். துரை இயக்கியிருந்த இந்த படம் காதல் கதையாக இருந்தது. விமர்சன ரீதியாக வெற்றி பெற்றவுடன், பாக்ஸ் ஆபிஸிலும் ஓரளவிற்கு நல்ல வசூலையே இந்த படம் பெற்றது.
என்னை அறிந்தால்: கௌதம் மேனன் இயக்கத்தில், 2015, பிப்ரவரி 5ஆம் தேதி வெளியான படம் இது. அஜித் குமார் இந்த படத்தில் சத்யதேவ் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி இருந்த இந்த படம், விமர்சனத்திலும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் பிப்ரவரியில் வெளியாகி வெற்றி பெற்ற அஜித்தின் கடைசி படம் இதுவாகும்.
தோல்வி படங்கள்:
கல்லூரி வாசல்: 1996, பிப்., 18ஆம் தேதி வெளியான படம் இது. இதனை பவித்ரன் இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்குப் பிறகு அஜித் படத்திலிருந்து இயக்குனருடன் ஒருமுறை கூட கைகோர்க்கவில்லை. இதில் அஜித்துடன் சேர்ந்து பிரசாந்த்தும் நடித்திருந்தார். இந்த படம் விமர்சனத்திலும் வசூலிலும் தோல்வியை தழுவியது.
ஜீ: லிங்குசாமி இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு, பிப்., 11ஆம் தேதி வெளியான படம் ஜீ. இதில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இந்த படம் வெளியாவதில் அப்போது எக்கச்சக்க தடங்கல்கள் ஏற்பட்டது. கடைசியில் வெளிவந்த பிறகு விமர்சனத்திலும் வசூலிலும் சறுக்கியது.
அசல்: சரண் இயக்கத்தில், 2010ல் வெளிவந்த படம் அசல். இந்த படமும் ஆக்ஷன் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டது. இதில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய திரை கதையுடன் இல்லாத காரணத்தால் தோல்வி பெற்றதாக அப்போது ரசிகர்கள் கூறினர்.
வலிமை: இந்த பெயரை கேட்டாலே பல அஜித் ரசிகர்கள் தெறித்து ஓடுவதுண்டு. காரணம், இந்த படத்தின் அப்டேட்டுகள் வெளியாவதிலும் படத்தை ரிலீஸ் செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது. இதுவே இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைக்க காரணமானது. இதனால் கடைசியில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் படம் வெளிவந்த போது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்த படம் வசூலில் வெற்றி பெற்றிருந்தாலும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை சந்தித்தது.
விடமுயற்சியின் நிலை என்ன?
ஆரம்பத்தில் இருந்தே பல தாமதங்களை சந்தித்து வந்த விடாமுயற்சி திரைப்படம், ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ஆனால், படவேளைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பிப்ரவரி மாத ரிலீஸ்க்கு தள்ளிப் போடப்பட்டது. அஜித்திற்கு பிப்ரவரி மாதத்துடன் ஏற்கனவே இப்படி ஒரு வரலாறு இருப்பது ரசிகர்களுக்கு பயத்தை ஏற்படுத்தினாலும், படத்தின் டிரைலர் நன்றாக உள்ளதால் ஓரளவிற்கு படம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டுள்ளனர். உண்மை நிலவரம் நாளை தெரிந்துவிடும்.
மேலும் படிக்க | GOAT vs விடாமுயற்சி! ப்ரீ புக்கிங்கில் யார் மாஸ்? அதிக கலக்ஷன் யாருக்கு?
மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தில் அஜித் டபுள் ஆக்ஷன்?! ட்ரைலரில் ‘இதை’ கவனிச்சீங்களா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ