IND vs ENG ODI, Varun Chakaravarthy In Playing XI: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் (India vs England ODI Series) நாளை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்க இருக்கிறது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாளை (பிப். 6) முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது.
கடந்த 2024 ஜுலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு பின்னர் இந்திய அணி இப்போதுதான் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியின் முக்கிய வீரர்கள் சர்வதேச ஒருநாள் போட்டிக்கு திரும்பியிருப்பது பெரும் ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது.
IND vs ENG ODI: முக்கியத்துவம் பெறும் இங்கிலாந்து தொடர்
மேலும் வரும் பிப். 19ஆம் தேதி தொடங்க உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் அணியின் காம்பினேஷனை அறிய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இந்த தொடர் முக்கியமான ஒன்றாகும். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு (Champions Trophy 2025) கடந்த மாதம் ஸ்குவாட் அறிவிக்கப்பட்டபோதே இந்த ஒருநாள் தொடருக்கும் ஸ்குவாட் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | இரண்டு ஜாம்பவான்களின் மிகப்பெரிய சாதனை.. குறி வைக்கும் கோலி.. முறியடிப்பாரா?
கேப்டனாக ரோஹித் சர்மாவும் (Rohit Sharma), துணை கேப்டனாக சுப்மான் கில்லும் உள்ளனர். இவர்கள்தான் முதன்மையான ஓப்பனிங் வீரர்கள். இவர்களுக்கு பேக்-அப்பாக அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருக்கிறார். அடுத்து மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இந்திய அணிக்கு கைக்கொடுக்க விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளனர். இதில் ரிஷப் பண்ட்டுக்கு பிளேயிங் லெவனில் இடம்கிடைப்பது சிரமம். முதன்மையான விக்கெட் கீப்பிங் பேட்டராக கேஎல் ராகுல் தொடர்வார் எனவும் தெரிகிறது.
மறுபுறம் அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூன்று பேர் உள்ளனர். இவர்களில் இருவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், யாருக்கு என்பது போக போகதான் தெரியும். வேகப்பந்துவீச்சு பிரிவில் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் இருவர் உள்ளனர்.
IND vs ENG ODI: பும்ரா கிடையாது!
மேலும் முதல் இரண்டு போட்டிகளுக்கு ஹர்ஷித் ராணாவும், மூன்றாவது போட்டிக்கு பும்ராவும் (Jasprit Bumrah) ஆரம்பத்தில் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் தற்போது மூன்று போட்டிகளுக்கும் ஹர்ஷித் ராணாதான். பும்ரா இன்னும் காயத்தில் இருந்து மீண்டு முழு உடற்தகுதியை பெறவில்லை என்பதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் ஸ்குவாடில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாடுவது இன்னும் உறுதியாகவில்லை.
IND vs ENG ODI: வந்துவிட்டார் வருண்!
பிரீமியம் ஸ்பின்னராக குல்தீப் யாதவ் மட்டுமே இருந்து வந்த சூழலில், பும்ரா நீக்கப்பட்டு நேற்று வருண் சக்ரவர்த்தி (Varun Chakaravarthy) இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரின் ஸ்குவாடில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீசி வரும் வருண், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் எதிரணி பேட்டர்களை திணறடித்தார். எனவே அவரை ஒருநாள் தொடருக்கும் இந்திய தேர்வுக்குழு கடைசி நேரத்தில் சேர்த்திருக்கிறது. அவரும் நாக்பூரில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். வருண் சக்ரவர்த்தி வந்துள்ளதால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய கேள்வியே எழுந்துள்ளது.
Varun Chakaravarthy added to India’s squad for ODI series against England.
Details #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) February 4, 2025
மேலும் படிக்க | இந்திய அணியில் இணைந்த வருண் சக்கரவர்த்தி! ஆனால் முக்கிய வீரர் நீக்கம்!
IND vs ENG ODI: காம்பினேஷனில் குழப்பமா?
அதாவது, ரோஹித் - கில் ஓப்பனிங், விராட் - ஷ்ரேயாஸ் - கேஎல் ராகுல் - ஹர்திக் பாண்டியா மிடில் ஆர்டர், ரவீந்திர ஜடேஜா - அக்சர் பட்டேல் ஆல்ரவுண்டர்கள் மற்றும் பின்வரிசை பேட்டர்கள், குல்தீப் யாதவ் - பிரீமியம் ஸ்பின்னர், ஷமி - அர்ஷ்தீப் வேகப்பந்துவீச்சு தாக்குதலுக்கு என காம்பினேஷன் கனக்கச்சிதமாக இருந்தது. அப்படியிருக்க வருண் சக்ரவர்த்தி நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் எனும்போது இவர்களில் யாரை இந்திய அணி தூக்கும் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது.
IND vs ENG ODI: ஸ்பின்னர்களுக்கே பிரச்னை
முதல் 6 பேட்டர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் 2 பேர் ஆகியோர் மீது கை வைக்கவே முடியாது. அதற்கிடையில் இருக்கும் 3 ஸ்பின்னர்களில் ஒருவரை அமரவைத்தால்தான் வருண் சக்ரவர்த்தியை அந்த இடத்தில் இந்திய அணி விளையாட வைக்க முடியும். அனுபவம் வீரர் ரவிந்திர ஜடேஜாவும், நல்ல பார்மில் இருக்கும் அக்சர் பட்டேலும் இடதுகை பேட்டர்கள் மட்டுமின்றி இடதுகை ஆர்த்தடாக்ஸ் பந்துவீச்சை கொண்டவர்கள். ஏறத்தாழ இருவரும் ஒரே அளவிலான திறன் கொண்டவர்கள். அனுபவம் மட்டுமே மாறுபடும்.
IND vs ENG ODI: இந்த 2 வீரர்களுக்கும் இனி வாய்ப்பு குறைவு
டி20 மற்றும் டெஸ்ட் அரங்கில் ஏற்றஇறக்கத்தில் இருந்த குல்தீப் யாதவின் நிலை, வருண் சக்ரவர்த்தியின் வரவால் மேலும் ஊசலாட்டத்தை சேர்த்துள்ளது. இந்திய அணி நிச்சயம் நம்பர் 8 வரை பேட்டிங் வேண்டும் என எதிர்பார்க்கும். எனவே வருண் சக்ரவர்த்தி உள்ளே வந்தால் காலியாகப்போவது குல்தீப் யாதவின் வாய்ப்புதான் என்பது உறுதியாகிறது.
ஒருவேளை ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோரில் ஒருவரை மட்டுமே எடுக்க வேண்டும் என முடிவெடுத்தால் நம்பர் 7 உடன் பேட்டிங் நிறைவடைந்துவிடும். வருண் சக்ரவர்த்தி வரவால் வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பும் குறைகிறது. ஒருவேளை இந்த தொடரில் வருண் சக்ரவர்த்தி சிறப்பாக செயல்பட்டால் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு இவர் அந்த இடத்தை நிரப்புவார். பிப். 11ஆம் தேதிவரை இந்திய அணி அதன் ஸ்குவாடை மாற்றிக்கொள்ளலாம். எனவே, முதல் இரண்டு போட்டிகள் வரைதான் வருணுக்கு டைம்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ