Kerala Man Wins Dubai Lottery : படத்தில் காண்பிப்பது போல சாதாரண மனிதர்களான நம்மால், ஒரே பாட்டில் அம்பானி எல்லாம் ஆகிவிட முடியாது. ஆனால் ஒரு சில அதிர்ஷ்டமிக்க மனிதர்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகளும் கிடைக்கின்றன. அப்படித்தான், துபாயை சேர்ந்த கேரளா இளைஞர் ஒருவருக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவருக்கு அத்தனை கோடி ரூபாய் கிடைத்தது எப்படி? இதை வைத்தவர் என்ன செய்யப் போகிறார்? இது குறித்து முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்:
கேரளாவை பூர்வீகமாக கொண்ட அஷிக் பதிங்கராத் என்ற 38 வயது நபர், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா என்னுமிடத்தில் வசித்து வருகிறார். சொந்த நாட்டை விடுத்து வேலைக்காக இவர் துபாய்க்கு சென்று இருக்கிறார். அங்குதான் இவர் 19 ஆண்டுகளாக தங்கி வருவதாக கூறப்படுகிறது.
இவர், கடந்த 10 ஆண்டுகளாக அபுதாபி பிக் லாட்டரியில் டிக்கெட் வாங்கி வருகிறார். ஆனால், இந்த 10 ஆண்டுகளில் ஒரு முறை கூட அவருக்கு காசு விழுந்ததில்லை. இருப்பினும் என்றாவது ஒரு நாள் நமக்கும் அதிர்ஷ்டம் அளிக்கும் எனும் நம்பிக்கையில் அவர் தொடர்ந்து டிக்கெட் வாங்கி வந்திருக்கிறார். அவர் நம்பிக்கை வீண் போகாத அளவிற்கு ஒரு சம்பவம் நடந்ததுள்ளது.
கோடிக்கணக்கில் பரிசு!
இந்த நபர், 1000 திர்ஹாமிற்கு (துபாய் பணத்தின் பெயர்) 4 லாட்டரி டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கி இருக்கிறார். இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் போது கூட, “இப்ப மட்டும் என்ன பரிசு கிடைக்கவா போகுது சும்மா வாங்குவோம்” இன்று என்ன ஓட்டத்தில் தான் வாங்கி இருக்கிறார். அதன் பிறகு தன் வேலையை பார்க்க தொடங்கிய அவர் சில நாட்களில் லாட்டரி டிக்கெட் வாங்கியதை மறந்தே போய்விட்டார். ஒரு நாள் கோழிக்கோட்டில் இருக்கும் தனது குடும்பத்தினருடன் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அந்த ஒரு அழைப்பு தான் அவரது தலையெழுத்தையே மாற்றப் போகிறது என்பது அவருக்கு தெரியாது. அவரை போனில் அழைத்து பேசியவர்கள், அவருக்கு லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாக கூறி இருக்கின்றனர். இதை முதலில் பிராங்க் கால் என நினைத்த அவர் பின்பு அந்த தகவல் உண்மைதான் என உறுதிப்படுத்திக் கொண்டாராம். இதையடுத்து அவருக்கு ரூ.33 கோடி பரிசு விழுந்திருக்கிறது. இதனால் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் அஷிக்.
அவர் பேசியது:
லாட்டரியில் பரிசு விழுந்தது குறித்து பேசி இருக்கும் அவர், தான் வாங்கிய மொத்த டிக்கெட்டுகளில் 456808 என்ற எண்ணுக்கு லாட்டரி பரிசு அடித்திருப்பதாக கூறி இருக்கிறார். இவ்வளவு பெரிய தொகை தனக்கு பரிசாக கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும், இதை வைத்து ரியல் எஸ்டேட் தொழில் தொடங்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த வெற்றியாளருக்கு மனைவி - 2 குழந்தைகள் கொண்ட அழகான குடும்பம் இருப்பதாக கூறப்படுகிறது. லாட்டரி டிக்கெட் வாங்குவதை தான் நிறுத்தப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அட்வைஸ்..
இப்படி லாட்டரி சீட்டு வாங்கி வெற்றி பெறாதவர்கள், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்-கண்டிப்பாக உங்களுக்கும் ஒரு நாள் அதிர்ஷ்டம் அடிக்கும் எனவும் அவர் அட்வைஸ் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்து கொண்ட ஆசிரியை! வைரல் வீடியோ..
மேலும் படிக்க | மருமகளையே திருமணம் செய்த மாமனார்! விரக்தியில் துறவியான மகன்..வைரல் செய்தி..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ