Erode East Assembly By-Election 2025: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப். 5) நடைபெறுகிறது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு 33 வார்டுகள் உள்ளன. இந்த 33 வார்டுகளில் 53 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தவர்களும் என 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025: 46 வேட்பாளர்கள்
இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி ஆகியோருக்கு இடையேதான் அதிக போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக ஆகியவை தேர்தலை புறக்கணித்தன. கடந்த 2023 இடைத்தேர்தலை விட தற்போது 20 சதவீதம் கூடுதலாக 852 வாக்கு இயந்திரமும், 284 கட்டுப்பாட்டு இயந்திரமும், 308 சரிபார்ப்பு இயந்திரமும் என பயன்படுத்தபட உள்ளது.
மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் - ஹெச்.ராஜா அதிரடி!
இந்த இடைத்தேர்தலில் 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள், வாக்குகளிக்க நேரில் வர முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு படிவம் 12- டி வழங்கி அதன்மூலம் வாக்குகள் பெறப்பட்டன. தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் வழங்கிய 256 பேரில் 246 பேர் தபால் வாக்கினை பதிவு செய்துள்ளனர். அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்காளா்கள் எளிதில் சென்று வாக்களிக்கும் வகையில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025: வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகள்
அதன்படி, வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளா்கள் வரிசையில் நிற்கும்போது வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் நிழல் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு செலுத்தும் மையங்களில் குடிநீா் வசதி, மின்விசிறி வசதி செய்யப்பட்டுள்ளன. மேலும் மாற்றுதிறனாளிகள் எளிதாக செல்லும் வகையில் சாய்தள வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மருத்துவக் குழுவும் தயாா் நிலையில் உள்ளன.
வாக்கு மையத்தில் எந்த வித அசம்பாவிதமும் நடக்காத வகையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே வாக்காளா்கள் அச்சமின்றி தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது அனைத்து வாக்குச் செலுத்தும் மையங்களிலும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025: மாலை 6 மணிவரை...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான ராஜகோபால் சுன்கரா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்குச்சாவடிக்குள் 6 மணிக்குள் வருபவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கேமரா பழுது ஏற்பட்டது. அதுபோன்று இந்த முறை வாக்கு எண்ணிக்கை போது பிரச்சினை நிகழாமல் இருக்க இந்த தேர்தலில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையமான சித்தோடு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் குறித்த முழு பணிகள் தயாராக உள்ளது. வாக்கு எண்ணிக்கை போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறப்பது சிசிடிவி கேமராக்களை வேட்பாளர்கள் பார்க்க என அனைத்தும் பணிகள் வேட்பாளர்கள் முன்னிலையில்தான் நடைபெறும்" என்றார்.
மேலும் படிக்க | இனி இவர்களும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ