EPFO New Rules: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தொடர்ந்து பல புதிய விதிகளை அறிமுகம் செய்து வருகிறது. பழைய விதிகளில் மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்திலும் இபிஎஃப்ஓ அதன் 7 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் வகையில் முக்கியமான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு அதிகரிக்கும் நன்மைகள்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகம் செய்துள்ள முக்கியமான சீர்திருத்தங்களில் கூட்டு அறிவிப்பு செயல்முறையை எளிதாக்குதல், மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறையை (CPPS) செயல்படுத்துதல், உறுப்பினர்களுக்கான அதிக ஓய்வூதியம் தொடர்பான கொள்கைகளில் மாற்றங்கள், ஆன்லைன் உறுப்பினர் ப்ரொஃபைல் புதுப்பிப்பு வசதி மற்றும் PF பரிமாற்றத்தை எளிதாக்குதல் ஆகியவை அடங்கும். இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை மிகவும் திறம்பட நிர்வகிக்க உதவுவதே இந்த மாற்றங்களின் நோக்கமாகும் . இந்த மாற்றங்களை பற்றி விரிவாக காணலாம்.
Centralized Pension Payment System: மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறை
EPFO ஜனவரி 1, 2025 அன்று மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறையை (CPPS) அறிமுகப்படுத்தியது. இந்த முறை இப்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து EPFO பிராந்திய அலுவலகங்களிலும் முழுமையாக செயல்படுகிறது. இதன் மூலம் இனி ஓய்வூதியதாரர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த வங்கி அல்லது கிளையிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத்தைப் பெறலாம். இந்தியாவில் 78 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் CPPS மூலம் பயனடைவார்கள்.
பெரும்பாலான ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகு, தங்கள் சொந்த ஊர்களுக்கு இடம்பெயர்ந்து செல்கிறார்கள்.இவர்களுக்கு இந்த அமைப்பு குறிப்பாக உதவும். முன்னதாக, ஓய்வூதியதாரர்கள் நகரங்களை மாற்றினால் அல்லது வங்கிகளை மாற்றினால் அவர்களின் ஓய்வூதிய கட்டண ஆணையை (PPO) மாற்ற வேண்டியிருந்தது. இப்போது, ஓய்வூதியதாரர்கள் PPO-க்களை மாற்ற வேண்டிய அவசியமில்லாமலேயே தங்கள் ஓய்வூதிய நிதியை எளிதாக பெறலாம். இந்த வகையில் CPPS ஓய்வூதிய விநியோக செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
Higher Pension: உயர் ஓய்வூதியத்திற்கான புதிய வழிகாட்டுதல்கள்
அதிக ஓய்வூதியத்திற்கான செயல்முறையை தெளிவுபடுத்த EPFO புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் / நிறுவனங்கள் இப்போது அதிக ஓய்வூதியத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது நவம்பர் 4, 2022 அன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, EPFO அதிக ஓய்வூதிய விருப்பத்தை வழங்க அனுமதித்தது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31, 2025.
ஒரு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தால், EPFO விவரங்களைச் சரிபார்க்கும். விண்ணப்பம் முழுமையடையவில்லை என்றால், EPFO முதலாளி / நிறுவனத்திடம் கூடுதல் தகவல்களைக் கோரும்.
EPFO Profile Update: EPFO உறுப்பினர்களின் ப்ரொஃபைல் புதுப்பிப்பு
EPFO இப்போது உறுப்பினர்கள் தங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், தேசியம், தந்தை/தாயின் பெயர், திருமண நிலை, மனைவியின் பெயர் மற்றும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்த மற்றும் வெளியேறும் தேதிகள் போன்ற விவரங்களை தாமாகவே புதுப்பிக்க அனுமதிக்கிறது. யுனிவர்சல் கணக்கு எண் (UAN) ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், ஆவணங்களைப் பதிவேற்றாமல் இதைச் செய்யலாம். இருப்பினும், அக்டோபர் 1, 2017 க்கு முன் பெறப்பட்ட UAN எண்களுக்கு, புதுப்பிப்புகளுக்கு முதலாளி / நிறுவனத்தின் சான்றிதழ் தேவைப்படும்.
Joint Declaration: எளிமைப்படுத்தப்பட்ட கூட்டு அறிவிப்பு செயல்முறை
ஜனவரி 16, 2025 அன்று, EPFO கூட்டு அறிவிப்பு செயல்முறையை எளிதாக்க புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது. இந்த மாற்றங்கள் முந்தைய நிலையான இயக்க நடைமுறையிலிருந்து (SOP பதிப்பு 3.0) சில செய்யல்முறைகளை நீக்கி, மொத்த செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் உறுப்பினர்களுக்கான வகைப்பாடுகள், ஆவண சமர்ப்பிப்புகள் மற்றும் முதலாளிகள் மற்றும் உரிமைகோருபவர்களுக்கான நடைமுறைகளை நெறிப்படுத்துகின்றன.
அக்டோபர் 1, 2017 க்குப் பிறகு, ஆதார்-இணைக்கப்பட்ட UAN எண்களைக் கொண்ட இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆனால் பழைய அல்லது ஆதார்-இணைக்கப்படாத UAN எண்களை ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது.
PF Account Transfer: எளிமைப்படுத்தப்பட்ட PF கணக்கு பரிமாற்ற செயல்முறை
வேலைகளை மாற்றும் உறுப்பினர்களுக்கு, PF கணக்குகளை மாற்றும் செயல்முறையை EPFO எளிதாக்கியுள்ளது. முன்பு, உறுப்பினர்கள் தங்கள் EPF நிதிகளை கைமுறையாக மாற்றக் கோர வேண்டியிருந்தது. ஆனால் இப்போது யுனிவர்சல் கணக்கு எண் (UAN) ஒரு புதிய முதலாளி / நிறுவனத்துடன் இணைக்கப்படும்போது பரிமாற்றம் தானாகவே தொடங்கும். இது ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய சேமிப்பை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது. ஏனெனில் அவர்கள் வேலை மாறினாலும் அவர்களின் UAN அப்படியே இருக்கும் என்பதால் தேவையற்ற செயல்முறைகள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | Post Office RD: ரூ. 8 லட்சம் வரை பெற... எத்தனை ஆண்டுகள், எவ்வளவு முதலீடு செய்யணும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ