85 கிலோ அப்போ, 58 கிலோ இப்போ...! இஞ்சி இடுப்பழகுக்கு அந்த பெண்ணே சொல்லும் 5 டிப்ஸ்

Weight Loss Journey: ஊட்டச்சத்து நிபுணரான பெண் ஒருவர் 85 கிலோவில் இருந்து 58 கிலோவாக தனது உடல் எடை குறைத்த அனுபவத்தை அவரது இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 5, 2025, 08:14 AM IST
  • இடுப்பளவை குறைக்க அவருக்கு உதவிய டிப்ஸ்களை பகிர்ந்துகொண்டார்.
  • தொடர்ந்து ஊட்டச்சத்தான உணவுகள் குறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
  • தொடர்ச்சியான செயல்பாடுதான் உடல் எடையை குறைக்க உதவும்.
85 கிலோ அப்போ, 58 கிலோ இப்போ...! இஞ்சி இடுப்பழகுக்கு அந்த பெண்ணே சொல்லும் 5 டிப்ஸ் title=

Weight Loss Journey: உடல் எடையை குறைப்பதற்கு சரியான உணவும், வலிமை தரும் உடற்பயிற்சியும் ரொம்ப முக்கியம் எனலாம். அதேபோல், இதனை நாள் தவறாமல் தினமும் தொடர்ச்சியாக செய்து கடைபிடித்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும்.

இதுதான் உடல் எடையை குறைப்பதற்கான தாரக மந்திரமாக இருந்து வருகிறது. உடல் பருமன் இன்றைய உலகில் மிகவும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. எனவே உடல் எடையை குறைக்க தற்போது பலரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருவதை சமூக வலைதளங்களிலேயே பார்ரக்க முடிகிறது. ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு ஏற்பவே உடல் எடையை குறைக்கும் வழிமுறையும் இருக்கும்.

Weight Loss Journey: 85 கிலோ டூ 58 கிலோ

எனவே, ஒவ்வொருவரின் முயற்சிகளும், பயிற்சிகளும் வேறுபடும். நடிகை, நடிகன் ஆகியோர் உடல் எடையை குறைக்கும் முறையில்தான் நீங்களும் குறைக்க வேண்டும் என்றில்லை. உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற வகையில் உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை அதற்கேற்ற நிபுணர்கள், மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை மேற்கொண்டு அதனை பின்பற்ற வேண்டும்.

அது ஒருபுறம் இருக்க, உடல் எடையை குறைத்தவர்களின் கதைகளையும், அறிவுரைகளையும் கேட்பது உங்களுக்கு உடல் எடையை குறைப்பது குறித்த புரிதலை மட்டுமின்றி பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கும், அப்படியிருக்க ஜாஸ்மின் என்ற ஊட்டச்சத்து நிபுணர் 85 கிலோவில் இருந்து 58 கிலோவாக தனது உடல் எடை குறைத்த அனுபவத்தை அவரது இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மேலும் படிக்க | 12 கிலோவை நினைத்த உடன் குறைத்த நடிகை... அவர் என்னென்ன சாப்பிட்டார் தெரியுமா?

Weight Loss Journey: இடுப்பளவை குறைக்க 5 டிப்ஸ்

தோழி ஒருவருடன் யோகா வகுப்புக்கு சென்றதும், சில உடற்பயிற்சிகளும்தான் அவரது உடல் எடை குறைப்புக்கு உதவியுள்ளன. மேலும், அவர் ஊட்டச்சத்து நிபுணர் என்பதால் ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் உட்கொண்டுள்ளார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் மூலம் அதனை பலருக்கும் தெரிவித்தும் வருகிறார். அப்படியிருக்க, அவர் கடைபிடித்த சில பழக்கவழக்கங்கள் 18 கிலோ எடையை குறைக்க உதவியதாக ஒரு வீடியோவில் ஜாஸ்மின் கூறியுள்ளார். அதவாது, அவரது இடுப்பின் அளவை குறைக்க உதவிய 5 டிப்ஸ்களை இங்கு வழங்கி உள்ளார்.

- பெரிதாக ஆசைப்படாமல் முதலில் சின்ன சின்ன இலக்குகளை நோக்கி ஓட வேண்டும். அதாவது, ஒரே மாதத்தில் 10 கிலோவை குறைக்க வேண்டும் என நினைக்கக் கூடாது. இங்குதான் பலரும் தவறான செயல்களில் இறங்கிறார்கள். சாத்தியமான, ஆரோக்கியமான விஷயங்களை நோக்கியே திட்டமிட வேண்டும். சாத்தியமாகாத விஷயங்களை நோக்கி நகர்ந்து, அது நிறைவேறாவிட்டாலும் ஏமாற்றமே மிஞ்சும் என்கிறார் ஜாஸ்மின்.

- சமூக வலைதளங்களை அப்படியே நம்பவில்லை என்கிறார் அவர். உடல் எடை குறைப்பதற்கு சமூக வலைதளங்களில் எண்ணற்ற டிப்ஸ்கள் வரலாம். ஆனால், அவற்றில் எது முறையானது, எது சரியானது, உங்கள் வாழ்க்கைமுறைக்கு ஏற்றது என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்.

- வீட்டில் சமைக்கும் உணவுகளையே அவர் பெரும்பாலும் உண்பாராம். அந்த உணவுகள் அனைத்தும் சமச்சீரான ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாகும். இதனால், தனித்தனியாக சமைக்காமல் நேரத்தையும் மிச்சம் செய்து சமைத்து, சோம்பேறித்தனத்தையும் பறக்கவிடலாம் என்கிறார் அவர்.

- மேலும், சிலர் இப்போதெல்லாம் கார்போஹைரேட் மற்றும் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், உடல் எடையை குறைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார். ஆனால், நீங்கள் குறைவாக சாப்பிட்டாலும் கூட உடல் எடை அதிகமாகும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எனவே, சமச்சீரான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். அதுவே சரியாகும்.

- நீராகாரம் மூலம் அதிக கலோரிகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. மில்க் ஷேக், குளிர்பானங்கள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: ஜாஸ்மின் பகிர்ந்துகொண்டது அவரது உடல் எடை குறைப்பு அனுபவத்தைதான். இது உங்களுக்கானது இல்லை. எனவே, அதற்கேற்ற நிபுணர்கள், மருத்துவர்களை சந்தித்து, உடல் எடை குறைப்பை மேற்கொள்ளுங்கள். இதை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | 1 வருடத்தில் 55 கிலோ எடை குறைந்த நடிகர் ராம்! எப்படி தெரியுமா? சீக்ரெட் சொல்கிறார்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News