SIP: சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் ஒரு பெரிய நிதியை உருவாக்குவது மிகவும் கடினம் அல்ல. திட்டமிட்டு முதலீடு செய்தால், அனைத்தும் சாத்தியமே. நிலையான தொடர் முதலீட்டு உத்தியுடன், இதனை சாதிக்க முடியும்.
பெரிய அளவிலான நிதியை உருவாக்குவதற்கான மற்றொரு முக்கிய அம்சம் எவ்வளவு சீக்கிரம், முதலிட்டை தொடங்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்தல் அவசியம். இளமையில் முதலீடு செய்யத் தொடங்கினால், முதலீடு கோடிகளில் வளர போதுமான நேரம் கிடைக்கும்.
SIP முதலீடு: முறையான முதலீட்டுத் திட்டம் SIP என்பது முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்யக்கூடிய ஒரு முதலீட்டுத் திட்டமாகும். முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பத்தைப் பொறுத்து தினசரி, வாராந்திர, மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டுதோறும் என ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம்.
இளமையில் முதலீடு: SIP முதலீட்டை ரூ.100 என்ற அளவிலான சிறிய தொகையை கூட தொடங்கலாம். நீண்ட காலத்திற்கு முதலீட்டிலிருந்து அதிகபட்ச வருமானத்தைப் பெற ஒருவர் எவ்வளவு சீக்கிரம், முதலிட்டை தொடங்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்தல் அவசியம்.
10 ஆண்டுகள் தொடர் முதலீடு: மாதந்தோறும் ரூ.9,000 SIP மூலம் 10 ஆண்டுகளில், முதலீட்டுத் தொகை ரூ.10,80,000 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.10,11,052 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ.20,91,052 ஆகவும் இருக்கும்.
20 ஆண்டுகள் தொடர் முதலீடு: 20 ஆண்டுகளில் ரூ.9,000 மாதாந்திர SIP மூலம் முதலீட்டுத் தொகை ரூ.21,60,000 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.68,32,331 ஆகவும், மதிப்பிடப்பட்ட கைக்கு கிடைக்கும் நிதி ரூ.89,92,331 ஆகவும் இருக்கும்.
30 ஆண்டுகள் தொடர் முதலீடு: மாதந்தோறும் ரூ.9,000 SIP மூலம் 30 ஆண்டுகளில், முதலீட்டுத் தொகை ரூ.32,40,000 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.2,85,29,224 ஆகவும், மதிப்பிடப்பட்ட நிதி கார்பஸ் ரூ.3,17,69,224 ஆகவும் இருக்கும்.
40 ஆண்டுகள் தொடர் முதலீடு: மாதந்தோறும் ரூ.9,000 SIP மூலம் 40 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை ரூ.43,20,000 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.10,26,21,782 ஆகவும், மதிப்பிடப்பட்ட நிதி கார்பஸ் ரூ.10,69,41,782 ஆகவும் இருக்கும்.
ரூ.10 கோடி: மாதந்தோறும் ரூ.9,000 SIP மூலம் ரூ.10 கோடி சம்பாதிக்க தோராயமாக 40 ஆண்டுகள் ஆகும். SIP முதலீடு, ரூ.21 கோடி நிதி இலக்கை அடைய, மாதாந்திர முதலீடு ரூ.18,000 என்ற அளவில் இருக்க வேண்டும். வருடாந்திர வருமானம் 12 சதவீதம் என்ற கணக்கீட்டில், மேலே கணக்கிடப்பட்ட, நிதி கார்பஸ் அல்லது முதிர்வு தொகை சாத்தியம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.