8வது ஊதியக்குழு: அதிரடியாய் உயரும் ஊதியம், ஓய்வூதியம்... கணக்கீட்டிற்கான சூத்திரம் இதுதான்

8th Pay Commission: 8வது ஊதியக்குழுவில் சம்பள உயர்வு எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது? இதற்கான கணக்கீடு என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

8th Pay Commission: சமீபத்தில் 8வது ஊதியக்குழுவிற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. இது ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும். லெவல் 1 முதல் லெவல் 10 வரையிலான மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை விளக்கும் ஒரு சூத்திரம் வெளிவந்துள்ளது. 7வது ஊதியக்குழுவில் பயன்படுத்தப்பட்ட அதே சூத்திரம்தான் 8வது ஊதியக்குழுவிலும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.

1 /11

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சமீபத்தில் அரசு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியை அளித்தது. 8வது ஊதியக்குழுவிற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. இதற்கான கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவந்த நிலையில், 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம், ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும்.

2 /11

8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு வந்ததிலிருந்து இதில் ஊதியமும் ஓய்வூதியமும் எவ்வளவு அதிகரிக்கும் என்ற கேள்வி தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றது. எதன் அடிப்படையில் ஊதிய உயர்வு தீர்மானிக்கபப்டும்? இதற்கான சூத்திரம் என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /11

லெவல் 1 முதல் லெவல் 10 வரையிலான மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை விளக்கும் ஒரு சூத்திரம் வெளிவந்துள்ளது. 7வது ஊதியக்குழுவில் பயன்படுத்தப்பட்ட அதே சூத்திரம்தான் 8வது ஊதியக்குழுவிலும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.

4 /11

ஊதிய கணக்கீட்டிற்கான அந்த சூத்திரன் "அய்க்ராய்டு ஃபார்முலா" என்று அழைக்கப்படுகிறது. இந்த சூத்திரத்தின் மூலம் ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி தீர்மானிக்கப்படுகின்றது. இந்த சூத்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை எளிய மொழியில் இங்கே தெரிந்துகொள்ளலாம்.

5 /11

அய்க்ராய்டு ஃபார்முலாவை டாக்டர் வாலஸ் உருவாக்கியுள்ளார். ஊதிய உயர்வுக்கான ஒரு சக்திவாய்ந்த கணக்கீடாக இது கருதப்படுகின்றது. இந்த சூத்திரத்தின்படி, ஒரு பணியாளரின் சம்பளத்தை தீர்மானிக்க, உணவு, உடை, வீட்டுவசதி, அத்தியாவசிய தேவைகள் போன்ற அடிப்படைத் தேவைகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

6 /11

1957 ஆம் ஆண்டு, 15வது இந்திய தொழிலாளர் மாநாடு (ILC), ஒரு ஊழியரின் சம்பளம் அவரது குடும்பத்தின் (மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள்) செலவுகளைக் கணக்கில் கொண்டு கணக்கிடப்படும் என்று முடிவு செய்தது.7வது ஊதியக்குழுவில் இந்த சூத்திரம் பயன்படுத்தப்பட்டது. இதன் கீழ் அடிப்படை சம்பளம் ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது.

7 /11

8வது சம்பளக் குழுவில் சம்பளம் எவ்வளவு உயரும்? 8வது ஊதியக்குழுவில் ஊதியம் எவ்வளவு உயரும் என்பது ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அடிப்படை ஊதியத்தை முடிவு செய்வதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கின்றது.

8 /11

8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 இலிருந்து 2.86 -க்குள் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், ரூ.18,000 அடிப்படை சம்பளம் ரூ.51,480 ஆக அதிகரிக்கும். அதேபோல், ரூ.25,000 அடிப்படை ஊதியம் ரூ.71,500 ஆகவும், ரூ.35,000 ரூ.1,00,100 ஆகவும் ரூ.50,000 ரூ.1,42,800 ஆகவும் அதிகரிக்கும்.

9 /11

அதாவது, உங்கள் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என்றால், புதிய ஊதியக் குழுவில் அது ரூ.51,480 ஆக உயரலாம். இதுமட்டுமல்லாமல் 8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் நல்ல ஏற்றம் காணும். ஓய்வூதியம் ரூ.9,000 லிருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்கலாம்.

10 /11

7வது சம்பளக் குழுவில் இது 2.57 ஆக வைக்கப்பட்டது, இதன் விளைவாக ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டது. இப்போது 8வது சம்பளக் குழுவில் இது 2.86 ஆக மாற்றப்பட்டால், சம்பளத்தில் இன்னும் பெரிய உயர்வு ஏற்படக்கூடும்.

11 /11

8வது ஊதியக்குழு எப்போது அமல்படுத்தப்படும் என்பது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இது 2026 இல் செயல்படுத்தப்படும் என்று ஊகிக்கப்படுகிறது. வழக்கமாக, 10 வருடங்களுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமலுக்கு வருகின்றன. 7வது ஊதியக்குழு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. ஆகையால் 8வது ஊதியக் குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வரும் என நம்பப்படுகின்றது.