அரசு ஊழியர்களுக்கு ஷாக்: டிஏ அரியர் கிடைக்குமா, கிடைக்காதா? நிதி அமைச்சகம் கொடுத்த அப்டேட்

7th Pay Commission, DA Arrears: கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்காது என நிதி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 5, 2025, 12:45 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.
  • டிஏ அரியர் வழங்கப்பட்டால் எவ்வளவு தொகை கிடைக்கும்?
  • தற்போது ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி வழங்கப்படுகின்றது?
அரசு ஊழியர்களுக்கு ஷாக்: டிஏ அரியர் கிடைக்குமா, கிடைக்காதா? நிதி அமைச்சகம் கொடுத்த அப்டேட் title=

7th Pay Commission, DA Arrears: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்காது என்பதை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதில்களில் நிதி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்க்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

திங்கட்கிழமை (பிப்ரவரி 3, 2025) மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பெருந்தொற்று காலத்தில் அரசாங்க நிதி மீதான அழுத்தத்தைக் குறைக்க அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் மூன்று தவணைகள் முடக்கப்பட்டதாக கூறினார்.

"01.01.2020, 01.07.2020 & 01.01.2021 ஆகிய தவணைகளாக மத்திய அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்களுக்கு வர வேண்டிய அகவிலைப்படி (DA)/அகவிலை நிவாரணத்தின் மூன்று தவணைகளை முடக்க முடிவு செய்யப்பட்டது. கோவிட் 19 தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவை சரி செய்ய எடுகப்பட்ட நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று." என்று சவுத்ரி கூறினார்.

18 Months DA Arrears

18 மாத டிஏ அரியர் தொகையை அளிப்பது குறித்து கேட்டபோது, ​​சவுத்ரி, “இல்லை” என்று பதிலளித்தார். இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நிலுவைத் தொகையை விடுவிக்காததற்கான காரணமாக அமைச்சர், "2020 ஆம் ஆண்டில் தொற்றுநோயின் பாதகமான நிதி தாக்கமும், அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதும் 2020-21 நிதியாண்டிற்கு அப்பால் நிதிக் கசிவை ஏற்படுத்தியது. எனவே, DA/DR நிலுவைத் தொகைகள் சாத்தியமானதாகக் கருதப்படவில்லை." என கூறினார்.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்

இணை அமைச்சர் அளித்துள்ள பதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அகவிலைப்படி அரியர் தொகை குறித்து பட்ஜெட் தாக்கலின் போதே நல்ல செய்தி வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அப்டேட் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

டிஏ அரியர் வழங்கப்பட்டால் எவ்வளவு தொகை கிடைக்கும்? 

டிஏ அரியராக கிடைக்கும் தொகை ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தைப் (Pay Scale) பொறுத்து இருக்கும். அதாவது, லெவல் 1 ஊழியர்கள் தோராயமாக குறைந்தபட்சம் ரூ.11,800 முதல் அதிகபட்சமாக ரூ.37,554 வரை பெறுவார்கள். லெவல் 13 ஊழியர்களுக்கு ரூ.144,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.

Dearness Allowance: தற்போது ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி வழங்கப்படுகின்றது?

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கு தற்போது முறையே 53% அகவிலைப்படியும் 53% அகவிலை நிவாரணமும் (Dearness Relief) வழங்கப்படுகின்றன. ஜனவரி 2025 -க்கான டிஏ உயர்வு (DA Hike) இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

8th Pay Commission: 8வது ஊதியக்குழு

சமீபத்தில் மத்திய அமைச்சரவை 8வது ஊதியக்குழுவின் அமைப்பிற்கு ஒப்புதல் அளித்தது. இது 2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என எதிர்பாக்கப்படுகின்றது. 

மேலும் படிக்க | SIP Mutual Fund: மாதம் ரூ.9000 முதலீடு போதும்... ரூ.10 கோடி கையில் இருக்கும்...

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ், புதிய விதிகள் அறிமுகம்: இனி ஜெட் வேகத்தில் வெலை நடக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News