Gentlewoman Movie Trailer And Music Launch : Komala Hari Pictures & One Drop Ocean Pictures தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜென்டில்வுமன் ”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகை லிஜோமோல் ஜோஷ் பேசியதாவது...ஜென்டில்வுமன் டைட்டில் போலவே நிறையப் பேரின் பார்வையை மாற்றுகின்ற படமாக இப்படம் இருக்கும், இந்தக் கேரக்டருக்கு என்னைத் தேர்ந்தெடுத்த ஜோஷ்வாவிற்கு நன்றி. யுகபாரதி அண்ணாவிற்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்திய அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. என் கோ ஆர்டிஸ்ட் அனைவருக்கும் நன்றி. அனைவரும் மிக ஆதரவாக இருந்தார்கள். இந்த அற்புதமான படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி. 19 நாளில் இவ்வளவு குவாலிட்டியாக படத்தை முடிப்பது அத்தனை எளிதில்லை. இதைச் சாதித்த படக்குழுவினருக்கு நன்றி. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.
நடிகை லாஸ்லியா பேசியதாவது, தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மேடம் இருவருக்கும் என் நன்றிகள். எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் ஜோஷ்வாவிற்கு நன்றி. அவர் நினைத்தது போல், இந்தக் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன், லிஜோ மோல் உடன் நடித்ததைப் பெருமையாக நினைக்கிறேன். அவர் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஹரி உடன் நடித்தது நல்ல அனுபவம், இருவருக்கும் நன்றி. ஃபிரேம் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக இருக்கும் ஒளிப்பதிவாளர் காத்தவராயனுக்கு நன்றி. கோவிந்த் வசந்தா இசை சூப்பராக இருக்கும். யுகபாரதி சாரின் வசனங்கள் அற்புதம். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி
Komala Hari Pictures & One Drop Ocean Pictures நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன், PN நரேந்திர குமார் & லியோ லோகேம் நேதாஜி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரைக்கு வருகிறது.
மேலும் படிக்க | சர்ச்சையில் சிக்கிய ரஜினி! பா.ரஞ்சித்திற்கு yes? மாரி செல்வராஜிற்கு No வா?
மேலும் படிக்க | ஒரு கையில் தாய்ப்பால்-மறு கையில் சரக்கு! வைரலாகும் நடிகை ராதிகாவின் போட்டோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ