8வது ஊதியக்குழு: தாறுமாறாக உயரப்போகும் அடிப்படை ஊதியம், ஊழியர்கள் காட்டில் பணமழை

8th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. 8வது ஊதியக்குழுவில் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் தெரியுமா?

8th Pay Commission: 7வது ஊதியக் குழுவில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. இது ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் சுமார் 23-25% அதிகரிப்புக்கு வழிவகுத்தது. 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் 2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 இலிருந்து ரூ.51,480 ஆக உயரக்கூடும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.28 ஆக நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.41,040 ஆக இருக்கும். 

1 /14

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் சமீபத்தில் மத்திய அரசு ஒரு பெரிய பரிசை அளித்தது. 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்தது. இது குறித்த சில முக்கிய அப்டேட்களை இந்த பதிவில் காணலாம்.

2 /14

மத்திய அரசு 8வது ஊதியக்குழுவிற்கு ஒப்புதல் அளித்து சுமார் 1 மாதம் ஆகிவிட்டது. எனினும், இன்னும் குழு அமைப்பது தொடர்பான எந்த வித தகவல்களும் வெளிவரவில்லை. எனினும், 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழிய்ரகளின் ஊதியமும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வுதியமும் எவ்வளவு அதிகரிக்கும் என்பது குறித்து பலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

3 /14

8வது ஊதியக் குழு உருவாக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட பின்னரே இந்தக் கேள்விக்கு ஒரு திட்டவட்டமான பதில் கிடைக்கும். இருப்பினும், கணக்கீடுகளின் அடிப்படையில் சில மதிப்பீடுகளை இப்போது நம்மால் செய்ய முடியும். 

4 /14

இந்தக் கணக்கீடுகள் முந்தைய 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும், மதிப்பிடப்பட்ட ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையிலும் செய்யப்பட்டுள்ளன. இதவற்றின் அடிப்படையில், அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கக்கூடும் என்பதற்கான சராசரி மதிப்பீட்டை இந்த பதிவில் காணலாம். 

5 /14

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பெருக்கி ஆகும். இது பழைய அடிப்படை சம்பளத்துடன் பெருக்கப்பட்டு, புதிய அடிப்படை ஊதியம் கணக்கிடப்படுகின்றது.

6 /14

7வது ஊதியக் குழுவில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. இது ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் சுமார் 23-25% அதிகரிப்புக்கு வழிவகுத்தது. 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.28 முதல் 2.86 -க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7 /14

புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கக்கூடும் என்பது குறித்து அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர். எனினும், 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் உருவாக்கப்பட்ட பின்னரே இது குறித்த தெளிவு கிடைக்கும். ஆனால், கடந்த கால போக்குகளின் அடிப்படையில் ஒரு தோராயமான மதிப்பீட்டை நம்மால் செய்ய முடியும்.

8 /14

8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் 2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 இலிருந்து ரூ.51,480 ஆக உயரக்கூடும். இருப்பினும், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.28 ஆக நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.41,040 ஆக இருக்கும். 

9 /14

அடிப்படை சம்பளத்தைத் தவிர, மொத்த சம்பளத்தில் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) மற்றும் பயண கொடுப்பனவு (TA) போன்ற கொடுப்பனவுகளும் அடங்கும். இருப்பினும், இந்த அலவன்சுகளுக்கான அதிகரிப்பு அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில்தான் கணக்கிடப்படுகின்றன. ஆகையால், 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அங்கீகரிக்கப்பட்டால், அரசு ஊழியர்களின் மொத்த சம்பளம் தோராயமாக 25-30% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 /14

ஓய்வூதியதாரர்களுக்கும் 8வது ஊதியக்குழுவில் மிகப்பெரிய ஓய்வூதிய உயர்வு காத்திருக்கின்றது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போதுள்ள ரூ.9,000 லிருந்து ரூ.25,740 ஆக உயரும்.

11 /14

ஜனவரி 1, 2016 முதல் செயல்படுத்தப்பட்ட 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டரைப் பயன்படுத்தின. இதன் விளைவாக, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆக அதிகரித்தது. அவர்களின் மொத்த சம்பளம் 23-25% அதிகரித்துள்ளது. 

12 /14

அதற்கு முன்ன்னர் 6வது ஊதியக் குழுவின் போது (2006 முதல் 2016 வரை) ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.86 ஆக இருந்தது.

13 /14

 7வது ஊதியக்குழுவின் காலம் டிசம்பர் 2025 -இல் நிறைவடைகிறது. ஆகையால், அடுத்த 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டு அதன் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

14 /14

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.