குடலை பாதுகாக்கும் நல்ல பாக்டீரியா அதிகரிக்க.. சாப்பிட வேண்டிய சில உணவுகள்

வயிற்றில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை குறைவதாலும், கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், குடல் சார்ந்த பிரச்சனைகள, அஜீரண பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுகின்றன.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 19, 2025, 05:10 PM IST
  • பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்களை அதிகரிக்கும்.
  • தினமும் போதுமான தண்ணீர் குடிக்காதது குடல் திறனை பலவீனப்படுத்துகிறது.
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கெட்ட பாக்டீரியாவுடன் நல்ல பாக்டீரியாக்களையும் அழிக்கிறது.
குடலை பாதுகாக்கும் நல்ல பாக்டீரியா அதிகரிக்க.. சாப்பிட வேண்டிய சில உணவுகள் title=

குடல் ஆரோக்கியம்: நம் வயிற்றில் இரண்டு வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. அவை நல்ல பாக்டீரியா (புரோபயாடிக்குகள் என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் கெட்ட பாக்டீரியா. வயிற்றில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை குறைவதாலும், கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், குடல் சார்ந்த பிரச்சனைகள, அஜீரண பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுகின்றன.

வயிற்றில் பாக்டீரியாவின் சமநிலை பாதிக்கப்படும் போது,வயிற்று வலி, வீக்கம், வாயு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் குறைவதாலும்,  கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரித்தாலும், அது குடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

வயிற்றில் நல்ல பாக்டீரியாவை அதிகரிப்பது எப்படி?

புரோபயாடிக்குகள்

புரோபயாடிக்குகள் (நல்ல பாக்டீரியாக்கள்) உணவுகள் வயிற்று ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. இவை குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையை சரிசெய்ய உதவும். தயிர், மோர், இட்லி, ஒயிட் சீஸ், போன்ற உணவுகளில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன, அவற்றை நீங்கள் உங்கள் உணவில் (Health Tips) சேர்த்துக்கொள்ளலாம்.

நார்ச்சத்து

நார்ச்சத்து வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவு ஆதாரமாக செயல்படுகிறது. அவை குடலுக்கு நன்மை பயக்கும் பியூட்ரிக் அமிலத்தை உருவாக்க ஜீரணிக்கின்றன. முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் சியா மற்றும் ஆளி விதைகள் போன்ற விதைகளை உட்கொள்வது நன்மை பயக்கும்.

தண்ணீர்

சரியான அளவு தண்ணீர் குடிப்பது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்தை சீராக வைக்க உதவுகிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், குடல்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் தண்ணீர் உதவுகிறது.

இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள்

பூண்டு, இஞ்சி, மஞ்சள் மற்றும் துளசி போன்ற இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கிறது மற்றும் கெட்ட பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துகிறது.

மேலும் படிக்க | உடல் எடை உடனே குறைய இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க போதும்

வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள்

ஆரோக்கியமற்ற உணவு

அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்களை அதிகரிக்கும். இந்த உணவுப் பொருட்களில் ல்ல பாக்டீரியாக்களுக்கு அவசியமான சத்துக்களான நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் மருந்துக்கும் இல்லை. 

நுண்ணுயிர் எதிர்ப்பிகள்

பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கெட்ட பாக்டீரியாவை அழிக்க உதவுகின்றன. ஆனால் அவை நல்ல பாக்டீரியாக்களுக்கும் தீங்கு விளைவிப்பதால், உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலை சீர்குலைந்து கெட்ட பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கின்றன.

மன அழுத்தம் மற்றும் பதட்டம்

மன அழுத்தம் குடல்களில் நேரடி விளைவைக் கொண்டிருக்கிறது. மன அழுத்தம் குடல் இயக்கம் மற்றும் பாக்டீரியா சமநிலையை பாதிக்கிறது, இது கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

தூக்கமின்மை

நல்ல தூக்கம் இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. இது குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும்.

மது பானம் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம்

அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் வயிற்றில் பாக்டீரியாவின் வீக்கம் மற்றும் சமநிலையின்மையை ஏற்படுத்தும்.

போதுமான தண்ணீர் எடுத்துக் கொள்ளாத நிலை

தினமும் போதுமான தண்ணீர் குடிக்காதது குடல் திறனை பலவீனப்படுத்துகிறது, இதன் காரணமாக கெட்ட பாக்டீரியாக்கள் வளரும்.

சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்களை அதிகரிக்கும். இவற்றைக் குறைப்பதன் மூலம், வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலை பராமரிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு

வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஒரு தீவிர பிரச்சனையாக இருக்கலாம், ஆனால் அதை சரிவிகித உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இயற்கை முறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். புரோபயாடிக்குகள், நார்ச்சத்து, சீரான உணவு, போதுமான தண்ணீர் மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை ஆகியவை வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு ஏதேனும் கடுமையான அஜீரண பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகுவது அவசியம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | ஒரு நொடியில் ரத்த சர்க்கரை கட்டுப்பட..இந்த பொடிப்போதும்! நைட் தூங்கும்போது இதை மட்டும் செய்யுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News