7 மாதங்களில் 32 கிலோ குறைத்த இன்ஸ்டா பிரபலம்! அவரே கொடுத்த 10 டிப்ஸ்..

Instagram Influencer Shares 10 Tips To Lose Weight : ஒரு பெண், ஏழு மாதங்களில் 32 கிலோ வரை உடல் எடையை குறைத்திருக்கிறார். இதற்காக ஒரு செய்த பத்து விஷயங்கள் குறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.  

Written by - Yuvashree | Last Updated : Feb 19, 2025, 06:33 PM IST
  • 7 மாதத்தில் 32 கிலோ குறைத்த இன்ஸ்டா பெண்..
  • அவர் பின்பற்றிய 10 டிப்ஸ்.
  • ரொம்ப ஈசிதான்!
7 மாதங்களில் 32 கிலோ குறைத்த இன்ஸ்டா பிரபலம்! அவரே கொடுத்த 10 டிப்ஸ்.. title=

Instagram Influencer Shares 10 Tips To Lose Weight : சமூக வலைத்தளங்கள் பெரிதாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், ஆங்காங்கே பல பிட்னஸ் ட்ரெயினர்கள் வரத் தொடங்கிவிட்டனர். இதில் இன்ஸ்டால் பிரபலமாக இருக்கும் பலர் தங்களுக்கு உடல் எடையை குறைக்க எதுவெல்லாம் உதவியது, எதெல்லாம் உதவவில்லை என்று டிப்ஸ் கொடுப்பது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் உங்க ஒரு பெண்ணும் 7 மாதத்தில் 32 கிலோ எடை குறைத்து இருக்கிறார். அந்த பெண்ணின் பெயர், Lauren Polinskey. அவருக்கு உதவியும் சில விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

7 மாதத்தில் 52 கிலோ குறைத்த பெண்:

தனது உடல் எடையை குறைக்க 104 கிலோ வரை இருந்திருக்கிறார். தனது விடாமுயற்சியால் உடல் எடையை குறைத்து இப்போது இவர் 72 கிலோவில் இருப்பதாக கூறப்படுகிறது. தன்னைப் போல உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த ஆறு வார வெயிட் லாஸ் சேலஞ்சு எடுத்துக் கொள்ளுமாறும் அவர் கூறியிருக்கிறார். 

1. சோடாவை விட வேண்டாம்: 

நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருப்போம். உடல் எடையை குறைக்க நினைத்தால் இதை மொத்தமாக தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்கிறார் அந்த பெண். சிலர் சோடா கொடுக்கும் பழக்கமும் கொண்டிருப்பர். அப்படிப்பட்ட பழக்கம் இருப்பவர்கள் சர்க்கரை இல்லாத டயட் சோடாவும், சர்க்கரை சேர்க்காத காபி கிரீமால் செய்த காபியையும் குடிக்கலாம் என்கிறார். 

2. 2 மைல் நடைப்பயிற்சி:

நமது நடை பயிற்சியை டிராக் செய்யும் ஆப்களை போனில் இன்ஸ்டால் செய்து எவ்வளவு நடக்கிறோம் என்பதை கணக்கிட வேண்டும் என்கிறார். ஆரம்பிக்கும்போது 0.5 மைல் நடக்க ஆரம்பித்து இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அந்த தூரத்தை அதிகப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டுமாம். 3 மைல் தொலைவு வரை நடக்கலாம் என்கிறார் அந்த பெண்.

3. வாரத்தில் ஆறு நாள் நடக்க வேண்டும்..

திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாட்கள் ஆக்டிவ் ஆன லைப் ஸ்டைலை கொண்டிருக்க வேண்டும் என்கிறார் அந்த இன்ஸ்டகிராம் பெண்மணி. இந்த நாட்களில் நடைப்பயிற்சி செய்வது நல்லது என்கிறார்.

4. ஓய்வெடுக்கும் நாள்: 

உடல் ஒத்துழைக்கவில்லை அல்லது ஏதேனும் அடிபட்டுவிட்டது என்றால் அந்த நாளில் கட்டாயமாக ஓய்வெடுக்க வேண்டும் என்கிறார் இந்த பெண். உடல் எடை குறைய தசையில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியம் என்கிறார். 

5. வெயிட் பார்ப்பது: 

நான்கு வாரத்திற்கு ஒருமுறை எவ்வளவு எடை ஏறி இருக்கிறோம் எவ்வளவு இருக்கிறோம் என்பதை கணக்கில் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

6.கலோரி டெஃபசிட்:

வெயிட் லாஸ் செய்யும் போது, கலோரி டெஃபசிட் இருக்க வேண்டியதும் அவசியம். முதல் வாரத்தில், என்னென்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை, கணக்கிலெடுங்கள் என கூறும் அந்த பெண், உங்களுக்கு ஒத்து வராத டயட்டை மேற்கொள்ளாதீர்கள் என்கிறார்.

7.தண்ணீர் குடிப்பது:

வெயிட் லாஸ் செய்யும் போது, உடலில் சரியான அளவு தண்ணீர் இருக்க வேண்டியது அவசியம். சரியான நீர்ச்சத்து இருந்தால் மட்டுமே, உடல் எடை முயற்சியில் வேகமாக முன்னேற்றம் அடைய முடியும் என அந்த பெண் கூறுகிறார்.

8.இன்டெர்மிட்டேன்ட் பாஸ்டிங்

உடல் எடையை குறைப்பவர்கள், இந்த பாஸ்டிங் இருப்பது வழக்கம் . இவர் 16:8 பாஸ்டிங்கை கடைப்பிடிக்க வேண்டும் என கூறுகிறார். இந்த முறையில் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் சாப்பிடாமல் இருப்பது அடங்கும். இதனால் பகலில் சாதாரணமாக உணவு சாப்பிட 8 மணி நேர நேரம் கிடைக்கும். இந்த முறையில் சிலர் காலை உணவைத் தவிர்த்துவிட்டு மதிய உணவு மற்றும் இரவு உணவை சாப்பிட விரும்புவார்கள். மற்றவர்கள் காலை உணவையும் மதிய உணவையும் சாப்பிட்டுவிட்டு இரவு உணவைத் தவிர்ப்பர்.

9. சீரான முயற்சிகள்:

நீங்கள் எவ்வளவு உடல் எடையை குறைக்க வேண்டும் என மனதில் நினைத்திருக்கிறீர்களோ, அந்த இலக்கை அடையும் வரை உங்கள் முயற்சிகளை நிறுத்த கூடாது என கூறுகிறார், அந்த பெண். அதற்கு ஏற்றவாறு உங்கள் லைஃப்ஸ்டைலையும் மாற்ற வேண்டும் என அவர் கூறுகிறார்.

10.ஸ்ட்ரெந்த் ட்ரெயினிங்:

எடை இழக்க ஆரம்பித்தவுடன் முன்னர் நடந்த அளவிற்கு நடக்க வேண்டாம் என கூறும் அந்த பெண், பின்பற்றி வரும் டயட்டை அப்படியே மெயிண்டெயின் செய்ய வேண்டும் என கூறுகிறார்.

மேலும் படிக்க | 123 கிலோ இருந்த இன்ஸ்டா பிரபலம்... 48 கிலோ உடல் எடையை குறைக்க உதவியது என்ன?

மேலும் படிக்க | வெயிட் குறைக்க சிம்பிளான 4 வழிகள்! டாக்டர் ஷர்மிகா சொன்ன டிப்ஸ்..

(பொறுப்பு துறப்பு:உடல் எடை குறைப்பு நடவடிக்கையை பின்பற்றும் முன் நிபுணர்களை சந்தித்து உரிய ஆலோசனை பெற வேண்டும். மேலே கூறப்பட்ட அனைத்தும் அந்த இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் கருத்தாகும், இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News