ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த... முக்கிய நடவடிக்கை எடுக்க திட்டமிடும் TRAI

இன்றையை டிஜிட்டல் காலகட்டத்தில், சாமானியர்களுக்கு சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று ஆன்லைன் மோசடி. மின்சார கட்டணம் செலுத்துவது முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை அனைத்தும் ஆன்லைனில் செய்வது எளிதாக இருந்தாலும், டிஜிட்டல் குற்றங்கள், ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து விட்டன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 19, 2025, 06:00 PM IST
  • டெலி-மார்கெட்டிங் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் கண்காணிக்கும் விதிமுறைகள்
  • ஸ்பேமைக் கட்டுப்படுத்த இப்போது உருவாக்கப்பட்ட விதி.
  • இந்தியாவில் தினம் 1.5 முதல் 1.7 பில்லியன் வணிகச் செய்திகள் அனுப்பப்படுகின்றன.
ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த... முக்கிய நடவடிக்கை எடுக்க திட்டமிடும் TRAI  title=

இன்றையை டிஜிட்டல் காலகட்டத்தில், சாமானியர்களுக்கு சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று ஆன்லைன் மோசடி. மின்சார கட்டணம் செலுத்துவது முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை அனைத்தும் ஆன்லைனில் செய்வது எளிதாக இருந்தாலும், டிஜிட்டல் குற்றங்கள், ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இதில், டெலிமார்க்கெட் நிறுவனங்கள் என்ற போர்வையில் பல மோசடிகள் நடந்தன, இன்றும் மோசடி செய்பவர்கள் இந்த முறையை அதிகம் விரும்புகிறார்கள்.

டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

ஆனால், இப்போது ஆன்லைன் மோசடி சம்பவங்களினால் பாதிப்படும் சாமானியர்களை காப்பாற்ற, ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளை கட்டுப்படுத்த TRAI ஒரு புதிய திட்டத்தை தயாரித்துள்ளது.தொலைத்தொடர்புத் துறையை ஒழுங்குபடுத்தும் TRAI, இப்போது மோசடி சம்பவங்களைத் தடுக்க ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளைக் கட்டுப்படுத்தத் தயாராக உள்ளது. இனி டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களும் இதன் வரம்புக்குள் வரலாம்.

TRAI கொண்டுவந்துள்ள திட்டம் என்ன?

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) விரைவில் ஆலோசனைக் கட்டுரையை வெளியிட உள்ளது. இது டெலிமார்க்கெட்டர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு கட்டமைப்பாக இருக்கலாம். டெலி-மார்கெட்டிங் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் கண்காணிக்கும் விதிமுறைகள் ஏற்படுத்தக் கூடும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளைக் கட்டுப்படுத்த ஏற்கனவே உள்ள விதிகள் அவ்வளவு திறன் பெற்றதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பு தெரிவிக்கும் டெலிகாம் நிறுவனங்கள் 

டிராயின் இந்த திட்டத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் ஸ்பேமைக் கட்டுப்படுத்த இப்போது உருவாக்கப்பட்ட விதிகளில், OTT பிளேயர்கள் மற்றும் டெலி மார்க்கெட்டர்கள் போன்ற முக்கிய நிறுவனங்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என கேள்வி எழுப்புகின்றன. TRAI இந்த பிரச்சினையில் ஒரு ஆலோசனை அறிக்கையை கொண்டு வரும்போது, ​​அது அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கருத்தில் கொண்டு அவர்களின் பிரச்சனையைத்  தீர்க்கும் என்று கூறுகிறது.

கூடுதல் செலவுகளின் சுமை

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவை வெறும் டெலி-மார்கெட்டிங் மற்றும் OTT இயங்குதளங்களுக்கான உள்கட்டமைப்பு வழங்குநராக மட்டுமே உள்ளன, ஆனால் ஸ்பேமைத் தடுக்க, கூடுதல் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றைக் கையாள்வதற்கான செலவுகள் அவர்கள் மீது சுமத்தப்படுகின்றன.

மாதம் தோறூம் 55 பில்லியன் எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1.5 முதல் 1.7 பில்லியன் வணிகச் செய்திகள் அனுப்பப்படுகின்றன. இந்த வழியில், ஒவ்வொரு மாதமும் மொத்தம் 55 பில்லியன் வணிகச் செய்திகள் நாட்டின் அனைத்து டெலிகாம் பயனர்களுக்கும் அனுப்பப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், இந்த ஸ்பேம்களைக் கண்டறிவது சிக்கலானதோடு, அதிக செலவு பிடித்த பணியாகும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஊதிய உயர்வுடன் பதவி உயர்வு விதிகளிலும் மாற்றம்... ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

மேலும் படிக்க | UPS vs NPS vs OPS: எந்த ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்கு அதிக லாபம்? ஒப்பீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News