குறைந்த வட்டியில் வீட்டு கடன்! எந்த வங்கியில் வாங்கலாம்..!

Home loan | புதிய வீடு கட்ட குறைந்த வட்டியில் எந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 19, 2025, 04:54 PM IST
  • புது வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா?
  • வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு
  • எந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்?
குறைந்த வட்டியில் வீட்டு கடன்! எந்த வங்கியில் வாங்கலாம்..! title=

Home loan eligibility tips | சொந்தமாக ஒரு புதிய வீடு கட்டி குடும்பத்தோடு ஒருநாளாவது வாழ வேண்டும் என்பது இந்தியாவில் இருக்கும் பல கோடி மக்களின் வாழ்நாள் ஆசை. அவர்களின் இந்த ஆசையை நிறைவேற்ற இப்போது சரியான காலம் என்று சொல்லலாம். ஏனென்றால், சொந்த வீடு கட்டுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டிருக்கிறது ஆர்பிஐ. ஆம், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகித்ததை குறைத்திருப்பதால் பல வங்கிகள் வீட்டு கடன்களுக்கான வட்டியையும் குறைத்திருக்கின்றன. இதனால், நீண்ட நாட்களாக புதிய வீடு கட்ட வேண்டும் என்ற யோசனையில் இருப்பவர்கள் இப்போது குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வாங்க சரியான நேரம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். 

வீட்டுக் கடன் எளிதில் கிடைத்துவிடுமா?

வீட்டுக் கடன் பொறுத்தவரை எளிதில் கிடைத்துவிடுமா? என்றால் கிடைக்கும். ஏனென்றால் வீட்டு பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இருந்தால் வங்கிகள் உடனடியாக வீட்டுக் கடன் கொடுத்துவிடுவார்கள். ஆனால் உங்களின் சிபில் ஸ்கோர், ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திய வரலாறு, நிலுவையில் இருக்கும் கடன் தொகை, உங்களின் வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வீட்டு கடன் உங்களுக்குகொடுப்பது பற்றி சம்பந்தப்பட்ட வங்கிகள் தீர்மானிக்கும். ஒருவேளை உங்களின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது என்றால் எந்த வங்கியில் வீட்டுக்கடன் வாங்கலாம் என்பதை பார்ப்போம்...

எந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்?

- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 8.10% வட்டி விகிதத்தில் வீடு கடன்களை வழங்குகிறது.

- பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 8.10% வட்டி விகிதத்தில் வீடு கடன்களை வழங்குகிறது.

- பேங்க் ஆஃப் பரோடா 8.15% வட்டி விகிதத்தில் வீடு கடன்களை வழங்குகிறது.

- பஞ்சாப் நேஷனல் பேங்க் 8.15% வட்டி விகிதத்தில் வீடு கடன்களை வழங்குகிறது.

- ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 8.25% வட்டி விகிதத்தில் வீடு கடன்களை வழங்குகிறது.

ப்ராசஸிங் கட்டணம்

வீடு உள்ளிட்ட எந்தவகையான கடனாக இருந்தாலும் வங்கிகள் ப்ராசஸிங் கட்டணம் வசூலிக்கின்றன. வெவ்வேறு வங்கிகள் தங்கள் விதிமுறைகளின்படி ப்ராசஸிங் கட்டணத்தை வசூலிக்கின்றன. சில வங்கிகள் கடன் தொகையில் ப்ராசஸிங் கட்டணத்தை வசூலிக்கின்றன, சில வங்கிகள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை வசூலிக்கின்றன. எனினும், சில வங்கிகள் வீடு கடன்களுக்கு ப்ராசஸிங் கட்டணம் வசூலிப்பதில்லை. எனவே, நீங்கள் எந்த வங்கியில் கடன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களோ, வீடு கடன்கள் குறித்த மேலும் தகவலுக்கு அந்த வங்கிக்கு நேரில் சென்று விசாரித்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு!

மேலும் படிக்க | தனியார் துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அதிகரிக்கும் ஓய்வூதியம், EPF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News