Fact Check | PM SHRI பள்ளிகளுக்கு மத்திய அரசே முழு நிதியும் வழங்குகிறது என அண்ணாமலை சொல்வது உண்மையா?

Annamalai | PM SHRI பள்ளிகளுக்கு மத்திய அரசே முழு நிதியும் வழங்குகிறது என அண்ணாமலை சொல்வது உண்மையா? என்பது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 19, 2025, 05:45 PM IST
  • பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு நிதியளிப்பது யார்?
  • அண்ணாமலை சொல்வது எல்லாம் உண்மையா?
  • தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம்
Fact Check | PM SHRI பள்ளிகளுக்கு மத்திய அரசே முழு நிதியும் வழங்குகிறது என அண்ணாமலை சொல்வது உண்மையா? title=

Annamalai PM SHRI scheme claim, Tamil Nadu fact check | தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை திநகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அண்ணாமலை, " PM SHRI திட்டம் என்பது 16,000 பள்ளிக்கூடங்களில் செயல்படுத்தப்படும். அந்த பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் முழுவதையும் மத்திய அரசே செய்து கொடுக்கும். அந்த பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் பள்ளிக்கூடங்களில் இருக்கும் போர்டுகளை கழற்றிவிட்டு அங்கு PM SHRI என போர்டு எல்லாம் வைக்கப்படாது. புதிதாக பிஎம் ஸ்ரீ பள்ளிகள் உருவாக்கப்படும். இந்த திட்டத்துக்கு முழுவதும் மத்திய அரசின் நிதி பயன்படுத்தப்படுகிறது. மாநில அரசு நிதி கிடையாது. வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தட்டும். 16000 பள்ளிக்கூடத்துக்கும் மத்திய அரசு தான் நிதி கொடுக்கிறது. மாநில அரசு பணம் கிடையாது" என அழுத்தம் திருத்தமாக கூறினார். 

தமிழ்நாடு அரசு இதனை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அந்த பேட்டியில் அழுத்தம் திருத்தமாகவும் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த சூழலில் தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு (Tamilnadu Fact Check Unit) அண்ணாமலை கூறிய கருத்து உண்மையா? என விளக்கம் அளித்துள்ளது. @tn_factcheck என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தில், " PM SHRI திட்டத்துக்கான நிதி முழுவதும் ஒன்றிய அரசு வழங்குவதாகவும், மாநில அரசு எந்த நிதியும் அளிக்கவில்லை என்று அண்ணாமலை சொன்ன தவறான தகவல். 

PM SHRI நிதி முழுவதும் ஒன்றிய அரசு வழங்குவதில்லை. 60:40 என்ற அடிப்படையில் 60% ஒன்றிய அரசும், 40% மாநில அரசும் பங்கிட்டுக் கொள்கின்றன. (திட்டத்தின் மொத்தத் தொகை - ரூ27,360 கோடி, ஒன்றிய அரசு பங்கு ரூ18,128 கோடி). இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 14,500 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். இதில், ஒன்றிய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளும் அடங்கும். 

இத்திட்டத்துக்கான ஒன்றிய அரசின் 60% பங்கும் 5 வருடங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 2022 - 2023 முதல் 2026 - 2027 வரை மட்டுமே நிதியுதவி வழங்கப்படும். அதன் பின்னர் அந்த பள்ளிகளுக்கான முழு செலவுகள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்களே பார்த்துக்கொள்ள வேண்டும். PM SHRI பள்ளிகளுக்கு முழு நிதியும் ஒன்றிய அரசு வழங்குகிறது, இத்திட்டத்தின் கீழ் 16,000 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும் என்று அண்ணாமலை சொன்னது தவறான தகவல்." என கூறியுள்ளது. அத்துடன் PM SHRI திட்டத்தின் நிதிப்பகிர்வு விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க | தமிழ்நாடு மும்மொழி கொள்கையை எதிர்ப்பது ஏன்? இதனால் வரும் ஆபத்துகள் என்னென்ன?

மேலும் படிக்க | பயிர்களை பாதுகாப்பது எப்படி? விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News