Karnataka Latest News: கர்நாடக அரசின் நில ஒதுக்கீட்டு வழக்கிலிருந்து முதலமைச்சர் சித்தராமையா விடுவிக்கப்பட்டிருக்கிறார். கர்நாடக அரசின் நில ஒதுக்கீட்டு திட்டத்தின் மூலம் முறைகேடாக நிலம் பெற்றதாக லோகாயுக்தா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர், முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை எனக்கூறி இருவரையும் குற்றமற்றவர் என லோகாயுக்தா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
நில மோசடி வழக்கில் இருந்து சித்தராமையா விடுவிப்பு
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) தொடர்பான நில மோசடி வழக்கில் சிக்கிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி மற்றும் சிலருக்கு பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது. அதாவது கர்நாடக லோக்ஆயுக்தா நீதிமன்றம், முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவிக்கு க்ளீன் சிட் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் சித்தராமையா மீது மட்டுமல்லாமல், அவரது மனைவி பார்வதி, அவரது சகோதரர் மல்லிகார்ஜுனா மற்றும் பலர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் சித்தராமையா எதிராக ஆதாரம் இல்லை
கர்நாடக காவல்துறை தரப்பில், குற்றம் சாட்டப்பட்ட 1 முதல் 4 வரையிலானவர்களுக்கு (கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி மற்றும் பிறர்) எதிராக ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளது. அதாவது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் புகார்தாரர் சினேகமாயி கிருஷ்ணாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.
மூடா ஊழல் வழக்கு தொடர்ந்து விசரிக்கப்படும்?
2016 முதல் 2024 வரை மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) 50:50 என்ற விகிதத்தில் நிலங்களை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மேலும் விசாரிக்கப்படும் என்றும், பிரிவு 173 (8) CrPC இன் கீழ் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் லோக்ஆயுக்தா காவல்துறை தெரிவித்துள்ளது.
மூடா ஊழல் வழக்கின் பின்னணி இதுதான்
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் நில மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக ஆர்வலர்கள் டி.ஜே. ஆபிரகாம், பிரதீப் மற்றும் சினேஹ்மியா கிருஷ்ணா ஆகியோர் ஆளுநரிடம் புகார் அளித்தனர். விஜயநகர் லேஅவுட்டில் நிலம் கையகப்படுத்த முதல்வர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. முதலமைச்சரும் அவரது மனைவியும் மூடா நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம்
கர்நாடக மாநில ஆளுநர் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குத் தொடர அனுமதி அளித்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சர் உயர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நில ஒதுக்கீட்டு வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை விசாரிப்பது அவசியம் என்று நீதிமன்றம் கூறி, அவரின் மனுவை தள்ளுபடி செய்தது.
இது சித்தராமையாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் அரசியலை கையில் எடுத்த கர்நாடகா பாஜக, முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் எனக் குரல் எழுப்பியது.
கர்நாடகா காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்
தற்போது மூடா நில ஒதுக்கீட்டு வழக்கிலிருந்து முதலமைச்சர் சித்தராமையா விடுவிக்கப்பட்டு இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெறும் உற்சாகத்தை அளித்துள்ளது. அத்நேரம் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - டெல்லி முதல்வர் பதவியேற்பு விழா அழைப்பிதழ்! தலைநகரின் தளபதி இவரா?
மேலும் படிக்க - பெண் மரணம்.. வழக்கை மாற்றிய 4 வயது சிறுமியின் ஓவியம்..! சிக்கிய அப்பா..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ