700 படங்களில் நடித்த பிரபல கதாநாயகி! மதுப்பழக்கத்தால் நிஜ வாழ்க்கையில் நடந்த சோகம்!

Urvashi Unknown Facts: நடிகை ஊர்வசியின் நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்கள். மது போதை அவரது வாழ்க்கையை எப்படி மாற்றியது? தற்போது அவர் எப்படி இருக்கிறார்? தெரிந்துக்கொள்ளுவோம்.

Urvashi Real Life Story: பெரும்பாலும் திரைப்பட நட்சத்திரங்களின் வாழ்க்கை மிகவும் வசதியானது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் உண்மை வேறுபட்டதாக இருக்கலாம். அப்படி ஒரு நடிகையின் வாழ்க்கை பயணத்தை பற்றி பார்ப்போம். 

1 /9

நாம் வியந்து பார்க்கும் பல நட்சத்திரங்களின் புகழுக்கு பின்னால், மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல கதைகள் மறைந்திருக்கும். திரையுலகில் பல கலைஞர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் திறமையால் புகழ் பெற்றுள்ளனர். ஆனால் சிலர் தீய பழக்கவழக்கங்களால் தங்கள் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டு உள்ளனர். ஒருபக்கம் அவர்களுக்கு பெயரும் புகழும் கிடைத்தாலும், மறுபக்கம் சொந்த வாழ்க்கையின் சிரமங்கள் காரணமாக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தனது நடிப்பால் மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களை வென்று மதுவுக்கு அடிமையான ஒரு  நடிகையைப் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். 

2 /9

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல மொழிப் படங்களில் தன் திறமைகளை காட்டி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஊர்வசி. மேலும் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நகைச்சுவையும் செய்யலாம் என்பதை நிரூபித்தவர் ஊர்வசி. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பழமொழி படங்களில் நடித்திருக்கிறார் இப்படி புகழின் உச்சத்தில் ஊர்வசி இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார். இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

3 /9

கவிதா ரஞ்சினி என்பதுதான் ஊர்வசியின் உண்மையான பெயர். சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ஊர்வசி என்று மாற்றியிருக்கிறார். ஊர்வசி பிரபல நாடக நடிகர்களான விபி நாயர் மற்றும் விஜயலட்சுமிக்கு ஜனவரி 25 ஆம் தேதி 1969 ஆம் ஆண்டு கேரளாவில் கொல்லம் மாவட்டம் சூரநாட்டில் பிறந்தவர். அவரது மூத்த சகோதரிகள் அஞ்சலி மற்றும் கல்பனா நடிகைகள் ஆவார்கள். அவரது இரண்டு சகோதரர்கள் கமல் ராய் மற்றும் இளவரசன் இவர்களும் சில மலையாளி திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவரது சகோதரரான இளவரசன் 26 வயதில் தற்கொலை செய்து கொண்டார் 

4 /9

ஊர்வசி அவரது ஆரம்பக் கல்வியை திருவனந்தபுரத்தில் உள்ள போர்ட் கேர்ள்ஸ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படித்தார். பிறகு இவரது குடும்பம் சென்னைக்கு மாறியது. பின்னர் கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். இவரின் திரைப்படமானது எட்டு வயதில் தொடங்கியது. 1977 இல் வெளியான விட்ருண்ண மொட்டுக்கள் என்ற மலையாள படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். சினிமா வாழ்க்கையில் பிஸியாக இருந்ததால் ஊர்வசியால் படிப்பையும் மேலும் தொடர முடியவில்லை. 

5 /9

இவருடைய தமிழ் சினிமா பயணத்தில் முதல் படம் "முந்தானை முடிச்சு" என்ற படம் தான். முதல் படமே பாக்யராஜுடன் நடித்தார். 1983 இல் வெளியான இந்த படம் குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் மிகப்பெரிய வெற்றியை தந்தது. 1984 ஆம் ஆண்டு அந்த காலகட்டத்தில் ஒரே வருடத்தில் 15 படங்களில் நடித்து தன்னை பிரபலமாய் நிலை நிறுத்திக் கொண்டார் ஊர்வசி. அடுத்தடுத்து ஆண்டுகளில் பல படங்களில் தொடர்ந்து நடித்து திரை வாழ்க்கையில் கொடிக்கட்டி பறந்தார்.

6 /9

நடிகை ஊர்வசி நடிகர் மனோக் கே ஜெயனை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற பெண் குழந்தை இருக்கிறது. எட்டு ஆண்டுகள் தான் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். பெண் மகளை தன்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஊர்வசி வழக்கு தொடர்ந்திருந்தால். விசாரணையில் ஊர்வசி எப்போதும் மது போதைகள் இருப்பவர், அவரை நம்பி மகளை எப்படி ஒப்படைப்பது என கணவர் மனோஜ் குற்றம் சாட்டியிருந்தார். பின்பு இவர்கள் இருவரும் 2008இல் விவாகரத்து செய்து பிரிந்தனர். 

7 /9

இதை இவர்களது ரசிகர்கள் அந்த காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருந்தது. நடிகர் மனோக் கே ஜெயனுடன் விவாகரத்து ஆன பிறகு நான்கு வருடங்கள் தனியாக இருந்தார். திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் மனச்சோர்வடைந்த நடிகை ஊர்வசி மதுப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவருடைய வாழ்க்கையை மோசமாகப் பாதித்தது. படிப்படியாக அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ஒரு காலத்தில் அவர் திரையுலகிலிருந்து விலகியே இருந்தார்.

8 /9

மறுபுறம் மனோஜ் மார்ச் 2, 2011 ஆம் ஆண்டு ஆஷா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு டிசம்பர் 30, 2012-ல் அம்ரித் என்ற மகன் பிறந்தார். பிறகு நடிகை ஊர்வசி நவம்பர் 2013ல் சென்னையைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் சிவப்பிரசாத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 2014 இல் ஆண் குழந்தை பிறந்தது. ஊர்வசி மிக வயதான நிலையில் மகனை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

9 /9

தற்போது படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பிசியாக இருக்கிறார். தனது புதிய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஊர்வசி தனது குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரது வாழ்க்கை முன்பு போல் இல்லாவிட்டாலும், தனது வாழ்க்கையை மீண்டும் மகிழ்ச்சியான பாதையில் கொண்டு வர அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என மொத்தமாக 700 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். மேலும் நடிகை ஊர்வசி ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். புகழும் வெற்றியும் இருந்தபோதிலும், தனிப்பட்ட வாழ்க்கையில் சமநிலை இல்லை என்றால், கெட்ட பழக்கங்கள் யாருடைய வாழ்க்கையையும் அழித்துவிடும் என்பது இது மனக்கு உணர்த்துகிறது.