மகா சிவராத்திரி 2025: இந்த ராசிகள் மீது சிவனின் விசேஷ அருள், உங்க ராசி என்ன?

Maha Shivratri 2025: ஜோதிட ரீதியாக, இவ்வாண்டு இந்த நாளில் சந்திரன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஒரு சிறப்பு நிலையில் இருப்பார்கள். இது சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 19, 2025, 04:58 PM IST
  • இந்த ஆண்டு மகாசிவராத்திரி பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளிலும் கொண்டாடப்படும்.
  • விரதம் இருந்து வழிபட்டால் வாழ வைப்பார் சிவன்.
  • மகா சிவராத்திரியில் சிவனின் விசேஷ அருளை பெறப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்.
மகா சிவராத்திரி 2025: இந்த ராசிகள் மீது சிவனின் விசேஷ அருள், உங்க ராசி என்ன? title=

Maha Shivaratri 2025: மகாசிவராத்திரி இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானை வணங்கி அவரது அருளை பெற இந்த நாள் மிக நல்ல நாளாக கருதப்படுகின்றது. இந்த ஆண்டு மகாசிவராத்திரி பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளிலும் கொண்டாடப்படும். இந்த ஆண்டு சிவராத்திரி நேரத்தில் சில அரிய வானியல் நிகழ்வுகளும் ஏற்படவுள்ளதால், இது ஜோதிட ரீதியாகவும் மிக விசேஷமான ஒரு நாளாக கருதப்படுகின்றது.

மகா சிவராத்திரி 2025: விரதம் இருந்து வழிபட்டால் வாழ வைப்பார் சிவன்

மகாசிவராத்திரி நாளில் சிவ பெருமானுக்கு விரதமிருந்து, மலர்கள், வில்வ இலைகள் கொண்டு பூஜை செய்து, சிவபெருமானின் நாமத்தையும் சிவ ஸ்தோத்திரங்களையும் பாராயணம் செய்தால் சிவனருள் நிச்சயம் கிடைக்கும். மேலும், இந்த நாளில் சிவலிங்கத்திற்கு தண்ணீர், பால், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தும் வில்வ இலைகள், பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்தும் வழிபடுவது விசேஷம்.

அதிர்ஷ்ட ராசிகள்: இந்த மகா சிவராத்திரியில் சிவனின் விசேஷ அருளை பெறப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

மகாசிவராத்திரி நாளில், பல ராசிக்காரர்கள் சிவபெருமானின் ஆசிகளால் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறப் போகிறார்கள். எனினும், ஜோதிட ரீதியாக, இவ்வாண்டு இந்த நாளில் சந்திரன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஒரு சிறப்பு நிலையில் இருப்பார்கள். இது சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

Taurus: ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மஹாசிவராத்திரி நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சிவபெருமானின் சிறப்பு அருளால், அவர்களின் நிதி நிலைமை மேம்படும். மேலும், வியாபாரத்திலும் வெற்றியை பெறுவார்கள். இந்த நாளில் நீங்கள் சிவலிங்க அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்கள் அதிர்ஷ்டம் இன்னும் வலுவடையும்.

Gemini: மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு, மஹாசிவராத்திரி முதல் தொழில் ரீதியாக சிறப்பான காலமாக இருக்கும். சிவபெருமானின் ஆசிர்வாதத்தால், பணியிடத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெற பெரிய வாய்ப்புகளை பெறுவீர்கள். 

Virgo: கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு, மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானின் ஆசிர்வாதம், குறிப்பாக அவர்களின் உடல்நலம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபடுவதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

Sagittarius: தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சிவராத்திரியன்றும் அதன் பின் வரும் நாட்களும் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். மகாசிவராத்திரி நாளில் சிவ பூஜை செய்வதன் மூலம் உங்கள் பல நாள் ஆசைகள் நிறைவேறும். மேலும், உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். இது உங்களுக்கு மன அமைதி மற்றும் திருப்தியை அளிக்கும்.

Capricorn: மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு மகாசிவராத்திரி நாள் குறிப்பாக நல்ல பலன்களைத் தரும். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதன் மூலம், உங்கள் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி, உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலவும். இந்த நாளில் விரதமிருந்து சிவ ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வது உங்களுக்கு சிறப்புப் பலன்களை அளிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி, புதன் ஆசியால் கோடீஸ்வர யோகம் உள்ள 3 ராசிகள்..!

மேலும் படிக்க | மகாசிவராத்திரி 2025: பூஜையும் விரதமும்... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News