Bengaluru Man Sues PVR Inox For Wasting His Time : சென்னை, ஹைதராபாத், டெல்லி ஃபுல் படம் இந்தியாவின் பல்வேறு நகரங்களும் பெரிய திரையரங்கு நிறுவனமாக இயங்கி வருகிறது, PVR. ஒவ்வொரு ஷாப்பிங் மாலிலும் இந்த நிறுவனத்தின் ஸ்கிரீன்கள் பல இருக்கும். இதில் பல்லாயிரக்கணக்கானோர் தினம்தோறும் படம் பார்ப்பது உண்டு. இந்த நிலையில் இந்த அரங்கில் படம் பார்த்த ஒரு நபர், தனக்கு இந்த நிறுவனத்தால் தலைவலி வந்ததாக ஒரே வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார்.
இளைஞருக்கு தலைவலி!
பெங்களூருவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் தான் இந்த வழக்கை தொடுத்திருக்கிறார். இந்த நபரின் பெயர் அபிஷேக். இவர் 20203-ஆம் ஆண்டு விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான லால் பகதூர் படத்திற்கு செல்வதற்காக மூன்று டிக்கெட்டுகளை புக் செய்து இருக்கிறார். இது இரண்டரை மணி நேர படமாகும். இந்த படம் மாலை 4:05க்கு ஆரம்பித்து, 6:30க்கு முடிவுறும் என கணக்கு போட்டு அவர் டிக்கெட் புக் செய்து இருக்கிறார். அதன் பிறகு வேலைக்கு செல்லவும் முடிவு செய்து இருக்கிறார்.
ஆனால், அங்கு நடந்ததோ வேறு. 4:05 ஷோவிற்கு போய் அமர்ந்தால், படம் 4:30க்குதான் ஆரம்பித்து இருக்கிறது. படம் ஆரம்பிப்பதற்கு முன்னர், பிற படங்களின் ட்ரெய்லர்கள் மற்றும் பி வி ஆர் இன் விளம்பரங்கள், பிற நிறுவனங்களின் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு இருக்கின்றன. இதனால் தனக்கு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வீணானதாக அந்த நபர் தெரிவித்திருக்கிறார்.
புகாரில் தெரிவித்திருக்கும் விஷயங்கள்..
அபிஷேக் தனது புகாரில் பல்வேறு முக்கிய அம்சங்களை அடுக்கி இருக்கிறார். இந்த அரை மணி நேரம் வீணானதால், பணத்தால் ஈடு செய்ய முடியாத அளவிற்கு தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது நியாயமற்ற வர்த்தக நடைமுறை என குறிப்பிட்டிருக்கும் அவர், படத்தின் டைமிங்கை இப்படி தங்களின் ஆதாயத்திற்காக பிவிஆர் பயன்படுத்தி கொள்வதாக தெரிவித்திருக்கிறார். இதனை பரிசீலித்த நுகர்வோர் உயர்நீதிமன்றம், நேரம் பணமாக கருதப்படுவதாக கூறியது.
மேலும், “விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு 25-30 நிமிடங்கள் என்பது அதிகம். படம் பார்க்க தியேட்டருக்கு வந்திருப்பவர்கள், திரையில் எதை ஒளிபரப்பினாலும் அமைதியாக அமர்ந்து பார்க்க வேண்டுமா?” என்று கேட்டிருக்கிறது. பிசியாக இருக்கும் மக்களுக்கு இப்படி தேவையற்ற விளம்பரங்களை பார்ப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும் என்றும் நீதிமன்றம் கேட்டிருக்கிறது.
இது குறித்து பிவிஆர்-ஐநாக்ஸ் நிறுவனங்கள் வாதாடுகையில் விழிப்புணர்வைப் பரப்புவதற்காக சட்டத்தின் கீழ் சில பொது சேவை அறிவிப்புகளை (PSA) திரையிட அவர்கள் கடமைப்பட்டுள்ளதாக கூறினர். இதைக்கேட்ட நீதிமன்றம், படம் ஆரம்பிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக மற்றும் இடைவேளை சமயத்தில் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் என PSA சட்டம் கூறுவதாக குறிப்பிட்டது.
அபராதம் தொகை:
புகார்தாரரின் நேரத்தை வீணடித்ததற்காகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்காகவும் ₹50,000 அபராதம் விதிக்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மன உளைச்சலுக்கு ₹5,000, புகார் மற்றும் பிற குற்றங்களுக்காக் அளித்ததற்காக ₹10,000 ஆகியவற்றை PVR மற்றும் INOX நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. PVR மற்றும் INOX நிறுவனங்களுக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை நுகர்வோர் நல நிதியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் கூறியது.
மேலும் படிக்க | தென்னிந்தியாவில் சினிமா விளம்பரங்களை இயக்க PVR INOX - Khushi Advertising கூட்டாண்மை
மேலும் படிக்க | PVR INOXன் புதிய திட்டம்! மாதம் ரூ.699 செலுத்தி 10 படங்கள் பார்க்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ