தனியார் துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அதிகரிக்கும் ஓய்வூதியம், EPF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

EPFO Salary Hike: இபிஎஃப்ஓ சீர்திருத்தங்களில் ஒரு அங்கமாக, இந்திய அரசாங்கம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சம்பள உச்சவரம்பை ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 19, 2025, 04:08 PM IST
  • அதிகமாகும் இபிஎஃப் உறுப்பினர்களின் எண்ணிக்கை.
  • EPFO சம்பள உயர்வு பரிசீலிக்கப்படுவதற்கான காரணம் என்ன?
  • EPFO ஊதிய உச்சவரம்பு உயர்வால் யார் பயனடைவார்கள்?
தனியார் துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அதிகரிக்கும் ஓய்வூதியம், EPF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் title=

EPFO Wage Ceiling Hike: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பல நல்ல செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. ஊழியர்களின் வசதிகளை அதிகரிக்கவும், செயல்முறைகளை எளிதாக்கவும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பல வித முக்கிய மாற்றங்களை செய்து வருகிறது.

EPFO Salary Hike: இபிஎஃப் ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

இபிஎஃப்ஓ சீர்திருத்தங்களில் ஒரு அங்கமாக, இந்திய அரசாங்கம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சம்பள உச்சவரம்பை ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. இது நடந்தால், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது சிறந்த சமூக பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட ஓய்வூதிய சலுகைகளை வழங்கும்.

EPF Members: அதிகமாகும் இபிஎஃப் உறுப்பினர்களின் எண்ணிக்கை

EPF திட்டத்தின் கீழ் சேரும் இபிஎஃப் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருவதால், சில காலமாக கோரப்பட்டு வரும் இந்த சம்பள உச்சவரம்பு உயர்வு நிதி பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் முதலாளிகளுக்கு / நிறுவனங்களுக்கு சில கூடுதல் நிதிப் பொறுப்புகளையும் இது ஏற்படுத்துகிறது.

Wage Celing Hike: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

தற்போது முன்மொழியப்பட்டுள்ளபடி, EPFO ​​சம்பள உச்சவரம்பு ரூ.21,000 ஆக உயர்த்தப்படுவது ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். இது லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சிறந்த ஓய்வூதிய சேமிப்பைப் பெற உதவும். எனினும், இதனால் முதலாளிகள் / நிறுவனங்கள் மீதான நிதிச் சுமையையும் அதிகரிக்கும். 

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு மேம்பட்ட சமூக பாதுகாப்பு

ஊதிய உச்சவரம்பை அதிகரிப்பது தொடர்பான விஷயம் இன்னும் விவாதத்தில் உள்ளது. எனினும், இதற்கான கோரிக்கையும், இது பற்றிய பேச்சுகளும் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றன. ஆகையால், மத்திய அரசு இதை பற்றிய கூடிய விரைவில் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

EPFO சம்பள உயர்வு பரிசீலிக்கப்படுவதற்கான காரணம் என்ன?

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது ஓய்வுக்குப் பிறகு தொழிலாளர்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியமான சமூகப் பாதுகாப்பு திட்டமாக உள்ளது. தற்போது, ​​மாதத்திற்கு ரூ.15,000 வரை சம்பாதிக்கும் ஊழியர்கள் மட்டுமே கட்டாயமாக EPF இன் கீழ் வருகிறார்கள். இந்த வரம்பு 2014 இல் நிர்ணயிக்கப்பட்டது, அதன் பின்னர், சம்பளம், பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் என அனைத்திலும் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஊதிய உச்சவரம்பை ரூ.21,000 ஆக அதிகரிப்பதன் மூலம், அரசாங்கம் அதிக ஊழியர்களுக்கு EPF சலுகைகள் கிடைக்கச்செய்வதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தை அரசு நிறைவேற்றினால் ஓய்வூதிய தொகை உயர்த்தப்படும். இதனால், பணி ஓய்வுக்குப் பிறகு பணியாளர்களுக்கு அதிகப் பணம் கிடைக்கும். இந்த மாற்றம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் உள்ளவர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்கும்.

EPFO ஊதிய உச்சவரம்பு உயர்வால் யார் பயனடைவார்கள்?

ஊழியர்கள்:

- ரூ.15,000 முதல் ரூ.21,000 வரை சம்பாதிக்கும் தொழிலாளர்கள் இப்போது EPS சலுகைகளைப் பெற முடியும்.
- ஊழியர்களால் அதிக ஓய்வூதிய நிதியை சேமிக்க முடியும், இதன் காரணமாக பணி ஓய்வு காலத்திற்கான நிதி பதுகாப்பு மேம்படும்.
- EPS பங்களிப்புகளின் அதிகரிப்பு அதிக ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு வழிவகுக்கும்.

முதலாளிகள் / நிறுவனங்கள்:

- ரூ.21,000 க்கும் குறைவான வருமானம் ஈட்டும் ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் பங்களிப்புகளை அதிகரிக்க வேண்டியிருக்கும்.
- இது அதிக செயல்பாட்டு செலவுகளுக்கு வழிவகுக்கும்.
- புதிய சம்பள வரம்பிற்கு ஏற்ப வணிகங்கள் தங்கள் சம்பள முறைகளைப் புதுப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஊதிய உயர்வுடன் பதவி உயர்வு விதிகளிலும் மாற்றம்... ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

மேலும் படிக்க | UPS vs NPS vs OPS: எந்த ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்கு அதிக லாபம்? ஒப்பீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News