கார்த்திகை தீபம்! ராஜ ஸ்ரீ கையில் சிக்கிய வீடியோ.. கதிருக்கு தீபா கொடுத்த அதிர்ச்சி

Karthigai Deepam Today's Episode Update: ராஜ ஸ்ரீ கையில் சிக்கிய வீடியோ.. கதிருக்கு தீபா கொடுத்த அதிர்ச்சி - பரபர திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 5, 2023, 02:42 PM IST
  • தீபா கதிரின் மண்டையில் அடிக்க அவன் மயங்கி கீழே விழுகிறான்.
  • நட்சத்திராவின் சூழ்ச்சிகள் அனைத்தும் அவளுக்கு தெரிய வருகிறது.
  • தீபா கழுத்தில் இருந்த முருகன் டாலரும் கீழே அறுந்து விழுகிறது.
கார்த்திகை தீபம்! ராஜ ஸ்ரீ கையில் சிக்கிய வீடியோ.. கதிருக்கு தீபா கொடுத்த அதிர்ச்சி title=

ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்பி பாட்டி தீபாவை பார்த்துவிட்டு தீபா தீபா என கத்த இதை பார்த்த அபிராமி அதிர்ச்சி அடைகிறாள். ஆனால் ராஜஸ்ரீ அது தீபா கிடையாது உங்களுக்கு கண்களை ஏதோ பிரச்சனை இருக்கு என சொல்ல செல்பி பாட்டி இல்ல அது தீபா தான் என வாக்குவாதம் செய்கிறார்.

இருந்தாலும் ஒரு வழியாக செல்பி பாட்டியை சமாளிக்கும் ராஜ ஸ்ரீ பிறகு தீபாவிடம் வந்து எதுக்கு நீ வெளியே வந்த என திட்டுகிறாள். அதன் பிறகு கச்சேரி தொடங்க தீபா ரூமில் இருந்து பாட ரூபஸ்ரீ வாய் அசைக்க கச்சேரி நடைபெறுகிறது. 

இதற்கிடையில் கார்த்தி ஒரு பக்கம் கதிரை தேடி அலைய நட்சத்திரா இன்னொரு பக்கம் போனை தேடி அலைய ஒரு இடத்தில் போனை பார்த்து எடுக்க போக அதற்குள் அபிராமி அவளை கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைக்கிறாள். தீபா சோகமாக பாடி முடிக்க கச்சேரி முடிந்து அனைவரும் ரூபஸ்ரீ-ஐ பாராட்டுகின்றனர்.

அதன் பிறகு செல்பி பார்த்து மட்டும் போதுமா டான்ஸ் ஆடலாம் என சொல்லி எல்லோரையும் கூப்பிட்டு டான்ஸ் ஆட சித்தர் சொன்னதை அபிராமிக்கு ஞாபகம் வர அவள் சோகமாகிறாள். திரும்பவும் கச்சேரி தொடங்க அப்போது போன் ராஜஸ்ரீ அருகே வந்து விழ அதை  அவள் எடுத்து வைத்துக் கொள்கிறாள். அதற்கு அடுத்ததாக திரும்பவும் கச்சேரி நடந்து முடிகிறது.

மேலும் படிக்க |கார்த்திகை தீபம் அப்டேட்: காத்திருக்கும் அதிரடியான திருப்பங்கள், இன்று நடக்கப்போவது என்ன?

அதனைத் தொடர்ந்து ராஜ ஸ்ரீ தீபாவுக்கு நன்றி சொல்லி அவளை மண்டபத்தில் பின்பக்கமாக வீட்டுக்கு அழைத்து செல்லும்போது தீபா கதிரை பார்த்துவிட்டு அவனுடன் சண்டை போடுகிறாள். இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையில் தீபா கதிரின் மண்டையில் அடிக்க அவன் மயங்கி கீழே விழுகிறான். கூடவே தீபா கழுத்தில் இருந்த முருகன் டாலரும் கீழே அறுந்து விழுகிறது. 

அதன் பிறகு தீபா இந்த விஷயத்தை மீனாட்சியிடம் சொல்ல மீனாட்சி கார்த்தியிடம் சொல்ல இதை ஒட்டு கேட்கும் நட்சத்திரா இருவரும் வருவதற்குள் கதிரை அங்கிருந்து அழைத்துச் சென்று விடுகிறாள். இதனால் இந்த முறையும் கார்த்தி கதிரை பார்க்க முடியாமல் ஏமாறுகிறான். அங்கே தீபா கழுத்தில் இருந்து விழுந்த டாலரை பார்த்த மீனாட்சி சரி வாங்க போகலாம் என கார்த்திகை சமாளித்து அழைத்து வருகிறாள். 

தீபாவை விட்டுவிட்டு வரும் ராஜஸ்ரீ ஃபோனில் இருக்கும் வீடியோவை பார்க்க நட்சத்திராவின் சூழ்ச்சிகள் அனைத்தும் அவளுக்கு தெரிய வருகிறது. நட்சத்திரா முகத்திரையை கிழிக்க இந்த ஆதாரம் ஒன்று போதும் என சந்தோஷப்படுகிறாள் ராஜ ஸ்ரீ . இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: டென்ஷனான சீதா.‌. மகாவுக்கு விட்ட சூப்பர் சவால்!!

மேலும் படிக்க | சூது கவ்வும் 2: படக்குழு வெளியிட்ட கலக்கலான புது போஸ்டர் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News