Weight Loss Journey: உடல் எடை குறைப்பு என்பது எளிதான காரியமில்லை. தொடர்ச்சியான பயிற்சியும், முயற்சியும் இருந்தால்தான் அதை சாத்தியப்படுத்த இயலும். உடல் பருமன் என்பது உலகம் முழுவதும் பிரச்னையாக இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, பணிச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், மோசமான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கம் ஆகியவை உடல் பருமனுக்கு வழி வகுக்கிறது.
Weight Loss Journey: 52 கிலோவை குறைத்த 19 வயது பெண்
அந்த வகையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜெஸ் என்ற 19 வயது பெண், 105 கிலோவில் இருந்து 52 கிலோவை குறைத்துள்ளாராம். உடல் எடை குறைப்பு குறித்த டிப்ஸ் மற்றும் அனுபவங்களை பகிர்ந்தே இன்ஸ்டாகிராமில் பிரபலமாகி இருக்கிறார். @jessicafit__ என்பது இவரின் இன்ஸ்டாகிராம் பக்கமாகும். இதில் உடல் எடை குறைப்பு குறித்த பல வீடியோக்களை நீங்கள் காணலாம்.
Weight Loss Journey: ஜெஸ் கொடுத்த எச்சரிக்கை
சமீபத்தில் ஜெஸ் பதிவேற்றிய ஒரு வீடியோவில்,"உடல் எடை குறைப்பு டிப்ஸ் + தந்திரங்கள்" என தலைப்படிப்பட்டிருந்தது. அதாவது, அவரது உடல் எடை குறைப்பில் அவருக்கு உதவிய விஷயங்கள் குறித்து அதில் அவர் தகவல் பகிர்ந்திருந்தார். மேலும் அவர் அதிலேயே சில எச்சரிக்கையையும் பகிர்ந்திருந்தார். இந்த டிப்ஸ் மற்றும் தந்திரங்கள் அனைவருக்கும் பயனளிக்காது என்றும் ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான ஆற்றல் தேவைப்படலாம், உடல் இயக்கமும் வேறுபடலாம் என்றும் கூறியிருந்தார். இருப்பினும் உடல் எடையை குறைக்க விரும்புவோர் ஊட்டச்சத்திலும், உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துமாறு அவர் தெரிவித்திருந்தார்.
Weight Loss Journey: உடல் எடையை குறைக்க 5 டிப்ஸ்
உடல் எடை குறைப்பு குறித்து அவர் 5 டிப்ஸ்களை அந்த வீடியோவில் பகிர்ந்துகொண்டார். மேலும், உடல் எடையை குறைக்க முயல்பவர்கள் குறைவான கலோரியை எடுத்துக்கொள்வது அவசியம் என்பதை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் இயற்கையாக உடல் எடை குறையும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதாவது, குறைவாக கலோரிகளை உட்கொண்டு, அதிக கலோரிகளை கரைக்க முற்படும்போது உடல் எடை இழப்பு இயற்கையாக ஏற்படுமாம். அந்த வகையில், ஜெஸ் அந்த வீடியோவில் குறிப்பிட்ட 5 டிப்ஸ்களை இங்கு காணலாம்.
Weight Loss Journey: காய்கறி, பழங்கள் அத்தியாவசியம்
நீங்கள் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். இவை உங்கள் வயிறுக்கு நிறைவை தரும். மேலும் அதிகமாக சாப்பிட்டாலும் குறைவான கலோரிகளே அதில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Weight Loss Journey: அதிக தூரம் நடக்கவும்
ஜெஸ் உடல் எடையை குறைக்க தினமும் அதிக தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வாராம். அவர் குறைந்தபட்சம் ஒருநாளுக்கு 10-13 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் நடப்பாராம். எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் தூரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்கிறார்.
Weight Loss Journey: உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்
அவர் உடல் எடையை குறைக்க அதிதீவிரமான HIIT பயிற்சிகளை வீட்டிலேயே மேற்கொண்டாராம். அவருக்கு ஜிம்மிற்கு போவதற்கு அச்சம் இருந்ததாம். HIIT பயிற்சிகளால் உடல் எடை இழப்பு மட்டுமின்றி தசை இழப்பும் ஏற்படுமாம். எனவே, நீங்கள் உடல் எடையை குறைக்க தற்போதே முயற்சிக்கிறீர்கள் என்றால் ஜிம்மிற்கு சென்று வாரத்திற்கு 3-4 தடவை Strength பயிற்சி மேற்கொள்ளுங்கள் என அறிவுறித்தினார்.
Weight Loss Journey: அதிகம் தண்ணீர் குடியுங்கள்
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், நொறுக்குத் தீனியை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. எனவே, அதிகம் தண்ணீர் குடித்தால் நொறுக்குத்தீனி பக்கம் தலைவைத்து படுக்கமாட்டீர்கள். மேலும், உடலில் நீர் இல்லை என்றால் பசியுணர்வு ஏற்படும். ஆனால், அது உடலில் நீர் பற்றாக்குறையே ஆகும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் பிளாக் காபி, கிரீன் டீ உள்ளிட்டவற்றை அருந்தலாம் என்கிறார் ஜெஸ்.
Weight Loss Journey: புரதம் முக்கியம் பிகிலு
உங்களின் ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள். இது உங்களின் தசை வளர்ச்சிக்கு முக்கியமாகும். வயிறையும் நிரம்பச் செய்யும். புரதத்தை செரிமானம் செய்வதன் மூலம் அதிக கலோரிகளை உங்கள் உடல் கரைக்கும். மற்ற கொழுப்புகள் மற்றும் கார்போஹைரேட்களை செரிமானம் செய்வதன் மூலம் கரையும் கலோரிகளை விட அது அதிகமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: ஜெஸ் முன்பே சொன்னது போல் இது அனைவருக்குமானது இல்லை. எனவே இதனை பின்பற்றும் முன் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | 133 கிலோவில் இருந்த பெண்... 47 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி? - 5 டிப்ஸ்!
மேலும் படிக்க | 180 கிலோவில் இருந்த பெண்... 90 கிலோவை குறைக்க உதவிய டயட் என்ன தெரியுமா?
மேலும் படிக்க | 25 கிலோவை 6 மாசத்தில் குறைத்த பெண்... ஜிம்மிற்கே போகாமல் உடல் எடையை கரைத்தது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ