இந்தியாவை விட துபாயில் தங்கம் மற்றும் ஐபோன்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இவைகளை தாண்டியும் பல பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும்.
அதிக பணக்கார நாடுகளில் துபாயும் உள்ளது. இங்கு ஷாப்பிங் செய்ய பல விலையுயர்ந்த பொருட்கள் கிடைக்கும். இந்தியாவை விட அங்கு வரிகள் குறைவாக உள்ளதால் பல பொருட்கள் கம்மி விலையில் கிடைக்கும்.
துபாயில் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள், கார்கள், பர்னிச்சர்கள் என அனைத்து பொருட்களும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். இந்தியாவை ஒப்பிடும் போது விலை குறைவாக இருக்கும்.
இறக்குமதி வரி துபாயில் மிகவும் குறைவு என்பதால் இந்தியாவை விட தங்கம் இங்கு மலிவாக கிடைக்கிறது. இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 88,000. ஆனால் துபாயில் இதைவிடக் குறைந்த விலையில் வாங்கலாம்.
மேலும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் இந்தியாவை விட குறைந்த விலையில் கிடைக்கும். ஸ்மார்ட் டிவி இந்தியாவில் ரூ. 27, 000 என்றால் துபாயில் ரூ. 20,000க்கு கிடைக்கும்.
இந்தியாவை விட துபாயில் ஐபோன்கள் குறைந்த விலையில் கிடைக்கும். இந்தியாவில் iPhone 16 Pro விலை ரூ. 1,28,000 ஆகும். ஆனால் துபாயில் ரூ. 95,000 மட்டுமே.
துபாயில் இறக்குமதி வரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் சொகுசு கார்களின் விலையும் மிக குறைவு. இந்தியாவில் ரூ. 51.44 லட்சத்தில் விற்கப்படும் கார்கள் அங்கு ரூ. 39 லட்சத்திற்கு கிடைக்கிறது.