TVK First Anniversary: தமிழக வெற்றி கழகத்தின் முதலாம் ஆண்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
கடந்த ஓர் ஆண்டாக பல்வேறு மக்கள் பணிகளில் தமிழக வெற்றிக் கழகம் ஈடுபட்டு வந்தது.
கட்சி தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி சென்னையில் பிரமாண்ட விழா நிர்வாகிகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பிரசாந்த் கிஷோரும் மேடையில் அமர்த்தப்பட்டுள்ளார், அவருடன் ஆதவ் அர்ஜுனாவும் அமர்ந்துள்ளார்.
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஒரு அரசியல் கட்சியின் மேடையில் ஏறுவது இதுவே முதல்முறை.
இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.