சீனியர் சிட்டிஸன் FD... யாருக்கெல்லாம் TDS கழிக்கப்படாது... முழு விபரம் இங்கே

வங்கி FD முதலீட்டு திட்டங்களில் பணம் போட்டு வைத்துள்ள மூத்த குடிமக்களுக்கு, இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2025 பட்ஜெட்டில், மூத்த குடிமக்களுக்கான TDS வரம்பை அரசாங்கம் இரட்டிப்பாக்கியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 26, 2025, 04:56 PM IST
  • புத்திசாலித்தனமான முதலீடு மூலம், டிடிஎஸ்ஸைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், நல்ல வட்டியையும் பெறலாம்.
  • புதிய விதி ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வரும்.
  • எஃப்டி தொகை மற்றும் வங்கியின் வட்டி விகிதத்தை சரியாக தேர்வு செய்வது முக்கியம்.
சீனியர் சிட்டிஸன் FD... யாருக்கெல்லாம் TDS கழிக்கப்படாது... முழு விபரம் இங்கே title=

வங்கி FD முதலீட்டு திட்டங்களில் பணம் போட்டு வைத்துள்ள மூத்த குடிமக்களுக்கு, இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2025 பட்ஜெட்டில், மூத்த குடிமக்களுக்கான TDS வரம்பை அரசாங்கம் இரட்டிப்பாக்கியுள்ளது. இப்போது வங்கியின் நிலையான வைப்புத்தொகையிலிருந்து (FD) பெறப்படும் வட்டி ஆண்டுக்கு ரூ.1 லட்சமாக இருக்கும் வரை, TDS கழிக்கப்படாது,  முன்னதாக இந்த வரம்பு ரூ.50,000 என்ற அளவில் இருந்தது.

புதிய விதிகள் எப்போது அமலுக்கு வரும்?

புதிய விதி ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வரும். மூத்த குடிமக்கள் TDS வரம்பின் பலனைப் பெறுவதற்கு அனைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்கள் செயல்முறைகளை புதுப்பிக்க வேண்டும். மூத்த குடிமக்கள் திட்டமிட்டு முதலீடு செய்வதன் மூலம், FD முதலீடுகளில், ஆண்டுக்கு 99,999 ரூபாய் வரை வட்டி பெறலாம். TDS கழிக்கப்படுவதையும் தவிர்க்கலாம். இதற்கு, எஃப்டி தொகை மற்றும் வங்கியின் வட்டி விகிதத்தை சரியாக தேர்வு செய்வது முக்கியம். வட்டி விகிதத்தின்படி, மூத்த குடிமக்கள் தங்கள் மொத்த வட்டி 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

TDS கழிக்கப்படுவதை தவிர்க்க வட்டி விகிதத்திற்கு ஏற்ப எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

1. வட்டி விகிதம் 8% என்றால், ரூ.12,13,110 FD முதலீட்டிற்கு, ஆண்டு வட்டி ரூ.99,999 ஆக இருக்கும்.

2. வட்டி விகிதம் 8.55% என்றால், ரூ.11,32,751 FD முதலீட்டுக்கான வருடாந்திர வட்டி ரூ.99,999 ஆக இருக்கும்.

3. வட்டி விகிதம் 9.5% என்றால், ரூ. 10,15,864 FD முதலீட்டுக்கான வருடாந்திர வட்டி ரூ.99,999 ஆக இருக்கும்.

வட்டி விகிதம் மற்றும் விதிமுறைகளை கவனமாகப் புரிந்துகொள்வது அவசியம்

குமிலேடிவ் எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், வட்டி ரூ.1 லட்சத்தை தாண்டாத நிலையில், டிடிஎஸ் கழிக்கப்படாது. முதல் ஆண்டில் டிடிஎஸ் கழிக்கப்படாது. ஆனால், முதல் வருடத்தின் வட்டியும் அசலில் சேர்க்கப்படுவதால் இரண்டாம் ஆண்டில் வட்டி ரூ.1 லட்சத்தைத் தாண்டினால், டிடிஎஸ் கழித்தல் இரண்டாம் ஆண்டில் இருந்து தொடங்கும். புத்திசாலித்தனமான முதலீடு மூலம், டிடிஎஸ்ஸைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், நல்ல வட்டியையும் பெறலாம். எனவே, FD பெறுவதற்கு முன், வட்டி விகிதம் மற்றும் விதிமுறைகளை கவனமாகப் புரிந்துகொள்வது அவசியம்.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% கூடுதல் ஓய்வூதியம்: அரசின் அதிரடி உத்தரவு, முக்கிய அப்டேட் இதோ

மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

1. 1 லட்சம் வரையிலான வட்டிக்கு டிடிஎஸ் கழிக்கவில்லை என்றால் அது வரி விலக்கு என்று அர்த்தமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மொத்த வருமானம் வரி வரம்பை மீறினால், நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும்.

2. 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லாத புதிய வரி முறையை நீங்கள் தேர்வு செய்தால், வட்டி வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

3. வட்டி வருமானம் மற்றும் TDS பற்றிய கூடுதல் விவரங்களை வருமான வரி இணையதளத்தில் உள்ள AIS (வருடாந்திர தகவல் அறிக்கை) அல்லது TIS/26AS படிவங்களில்  பார்க்கலாம்.

மூத்த குடிமக்களுக்கான சிறந்த வங்கி FD திட்டங்கள்

1. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா: 8% வட்டி, முதலீட்டு காலம் 1111 நாட்கள்

2. பந்தன் வங்கி: 8.55% வட்டி, 1 ஆண்டு காலம் முதலீடு

3. யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: 9.5% வட்டி, முதலீட்டு காலம் 1001 நாட்கள்

மேலும் படிக்க | SIP Mutual Fund: மாதம் ரூ.15,000 போதும்... ஓய்வின் போது கையில் ரூ.8 கோடி இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News