TVK vs BJP: பாஜகவை விமர்சித்த விஜய்; அண்ணாமலை கொடுத்த பதிலடி!

விஜய் மரியாதை கொடுக்கிறார், நானும் ப்ரோ என்று பேசி வருகிறோம். ஆனால் திமுகவினர் அப்படி பேசுவது இல்லை கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Feb 27, 2025, 08:04 AM IST
  • தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டம்.
  • பாஜக, திமுகவை விமர்சித்த விஜய்.
  • பள்ளி குழந்தைகள் போல சண்டை போடுகின்றனர்.
TVK vs BJP: பாஜகவை விமர்சித்த விஜய்; அண்ணாமலை கொடுத்த பதிலடி! title=

கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். மேலும், காணொளி காட்சி மூலம் ராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | பிரம்மாண்டமாக நடந்த தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா! கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

 பாஜக புதிய அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் மார்ச் முதல் வாரம் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட தேவை எதற்கு? மத்திய அமைச்சர் அமித்ஷா மிக தெளிவாக தெரிவித்து விட்டார். தொகுதி மறுசீரமைப்பு பற்றி கூறியுள்ளார். விகிதாசாரம் அடிப்படையில் தான் பிரிவு இருக்கும் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். முதலமைச்சர் யார் சொன்னார்கள்?? அதை நான் கேட்க விரும்புகிறேன். மேடையில் நாங்கள் தெளிவு படுத்தி உள்ளோம். முதல்வர் தவறானத் தகவல்களை சொல்லி வருகிறார். மோடி ஆட்சியில் கொடுக்கப்படும் நிதி 2 மடங்கு உயர்ந்து உள்ளது.  தமிழக வெற்றிக் கழகம் 2 ஆண்டு விழாவில் விஜய் பேசும் போது மத்திய மாநில அரசு பற்றி பேசினார்.

வாட் ப்ரோ, ஏன் ப்ரோ பொய் சொல்லுகிறார்கள் என விஜய் பார்த்து நாங்கள் கேட்கிறோம். யாரும் எங்கேயும் எந்த மொழியும் திணிக்கவில்லை.. பீகாரில் இருந்து வருபவர்கள் தமிழகத்தில் பெயர் கிடைத்தால் நல்லது தான். பிரசாந்த் கிஷோர் அண்ணா ஏன் திமுகவை ஆட்சியில் அமர வைத்து உள்ளீர்கள்?? என்ற கேள்வியை நான் கேட்கிறோம். விஜய் கட்சி நிகழ்வில் செய்தியாளர் தாக்குதல் செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்துக்கு உரியது. திமுக வெளியே போக மிக சரியான உதாரணத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஜி.கே மணி இல்ல திருமண விழாவிற்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து உள்ளார். என்னை நேரில் சென்று வர வலியுறுத்தினர். நானும் சென்று வந்தேன்.

அதிமுக உடன் கூட்டணி என்பது தேர்தல் வரும்போது , வரும் நேரம் காலம் பதில் சொல்லும். நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பன் என்பது எல்லா இடத்திலும் பொருந்தாது. தொழில்துறையினர் கோரிக்கை விரைவில் நிறைவேற்றபடும். NIA அலுவலகம் கோவையில் நிறைவேற்றி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பாரத் டெக்ஸ் பேர் கோவையில் நடந்த வேண்டும். தொண்டர்களை சேர்க்க தட்டும், டம்ளர் கொடுத்து கட்சியில் சேர்த்து வருகிறார்கள், அது எந்த கட்சி என்று உங்களுக்கு தெரியும். கல்வி அமைச்சர் பேட்டை ரவுடி போன்று என்னை பற்றி பேசினார். உதய நிதி பயம், பின்னாடி 500 பேரை உட்கார வைத்து சொன்னார்கள். Get out stalin என்பது 3 மணி நேரத்தில் 10 பதிவுகள் நாங்கள் செய்து கான்பிது உள்ளோம். இது ஒரு அளவீடு தான்..

மார்ச் 22 பாஜக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதை பாருங்கள் அவர்களுக்கு அதே பாணியில் பதில் அளிப்போம். நான் பேசியது தவறு என்று எந்த இளம் தலைமுறையும் சொல்லவில்லை. விஜய் மரியாதை கொடுக்கிறார், நானும் ப்ரோ என்று பேசி வருகிறோம். ஆனால் திமுகவினர் அப்படி பேசுவது இல்லை. திமுக ஆட்சியில் கல்வி பேர் காலமாக உள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கும் முன்பு பதில் கடிதம் முதல்வர் எழுத வேண்டும். 2026 ல் நிச்சயம் திமுக அரசு அகற்றப்பட்டு, பாஜக ஆட்சி தமிழகத்தில் அமையும்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | தவெக ஆண்டு விழா: எதிர்பார்த்ததை பேசாத விஜய்! மும்மொழிக்கொள்கை குறித்து மட்டும் பேச்சு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News